ஓவரா தெரில.. ஆப்பிளின் புது "பென்சில்!" விலை கம்மி தான்.. ஜஸ்ட் ரூ.7900 மட்டுமே! அப்படி என்ன ஸ்பெஷல்
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் இப்போது புதிதாக பென்சில் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் பென்சிலுக்கு என்ன சிறப்பு. இதில் இருக்கும் வசதிகள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
உலகில் எத்தனையோ டெக் நிறுவனங்கள் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இருக்கும் கெத்து தனி தான். ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் வெளியிடும் மொபைல்களை வாங்க எத்தனை பேர் வரிசை கட்டி நிற்கிறார்கள் என்பதில் இருந்தே நாம் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஐபோன் தான் அவர்களுக்குப் பிரதானம் என்றாலும் கூட அதையும் தாண்டி கணினி, ஐபேட் என்று பல சாதனங்களை அவர்கள் வெளியிட்டே வருகிறார்கள். அப்படி அவர்களின் முக்கியமான கருவி தான் ஆப்பிள் பென்சில். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஆப்பிள்: ஆப்பிள் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்பிள் பென்சில் (2023) என்ற மாடலை வெளியிட்டிருந்தது. இவை ஆப்பிள் பென்சில் 2ஐ விட குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பென்சில் ஸ்டைலஸ் மேட் ஃபினிஷ் கொண்டுள்ளது. கடந்தாண்டு வெளியான ஐபாட் சாதனத்தில் பக்கவாட்டில் இந்த பென்சிலை காந்தத்தின் மூலம் கச்சிதமாக அட்டாச் செய்ய முடியும். இந்த பென்சிலில் டைப் சி சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, டைப் சி சார்ஜிங் வசதியுடன் வரும் அனைத்து ஐபாட் ப்ரோ, ஐபாட் ஏர், ஐபாட் மினி ஆகிய கருவிகளையும் இதில் இணைத்துப் பயன்படுத்தலாம். இது தவிர இதுவரை வெளியான 3 பென்சில் மாடல்களில் இதுதான் மிகவும் சைஸ் குறைவான பென்சில் ஆகும். மேலும், விலையிலும் இதுதான் மற்ற இரண்டை காட்டிலும் குறைவு. விலை குறைவு என்பதால் முந்தைய மாடல்களில் இருக்கும் சில வசதிகளும் இதில் மிஸ்ஸாகிறது.

சில வசதிகள் இல்லை: பென்சில் 2 மாடலை ஐபேட்டிற்கு பக்கவாட்டில் அட்டாச் செய்ய முடியும். அப்போது அது தானா ஒயர்லெஸ் முறையில் சார்ஜ் ஆகும். இந்த புதிய பென்சில் மாடலை நம்மால் பக்கவாட்டில் அட்டாச் செய்ய முடிந்தாலும் கூட, இது ஒயர்லெஸ் முறையில் சார்ஜ் ஆகாது. மேலும், அந்த முந்தைய மாடலில் ஐபேட் அருகே பென்சிலை எடுத்துச் சென்றாலே அது தானாக கனெக்ட் ஆகும். அந்த வசதியும் புது மாடலில் மிஸ் ஆகிறது.
அதேபோல முந்தைய இரு மாடல்களிலும் இருந்த pressure sensitivity வசதியும் இதில் மிஸ் ஆகிறது. அதாவது நாம் ஒரு லைனை போடுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நாம் கொடுக்கும் அழுத்தத்தை வைத்தே எந்தளவுக்கு லேசாக அல்லது தடிமனமாக அந்த லைன் வர வேண்டும் என்பதை செட் செய்வதே pressure sensitivity வசதி. இது புதிய மாடலில் மிஸ் ஆகிறது. வரைபடங்களுக்கு இந்த பென்சிலை பயன்படுத்துவோருக்கு இது சிக்கலாக இருக்கும்.
விலை எவ்வளவு: அதேபோல முந்தைய பென்சில் மாடலை வாங்கினால் இலவசமாக நமது பெயரைப் பொறித்துத் தருவார்கள். அதுவும் புது மாடலில் மிஸ்ஸிங். குறைந்த ரேட்டில் பென்சிலை வெளியிட வேண்டும் என்பதற்காக இந்த வசதியை எல்லாம் ஆப்பிள் கட் செய்துள்ளது.
குறைந்த விலை என்றால் எவ்வளவு எனக் கேட்கிறீர்களா.. ஜஸ்ட் ரூ. 7900 மட்டுமே. மேலும், மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகையாக ரூ. 6900க்கு இது விற்பனை செய்யப்படுகிறது. இது குறைவா எனக் கேட்கிறீர்களா... இந்தியாவில் முந்தைய பென்சில் 1 மாடல் இப்போது 9500 ரூபாய்க்கும், பென்சில் 2 மாடல் 11,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications