நார்மல் சிம் கார்டை விட இ சிம் பெஸ்ட்.. ஆனா அதில் இருக்கும் ஒரு மேஜர் பிரச்சினை.. இதை எதிர்பார்க்கல
டெல்லி: இந்தியாவில் மொபைல் டெக்னாலஜி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இ சிம் என்றால் என்ன? வழக்கமான சிம் கார்டுக்கும் இ சிம் கார்டுக்கும் என்ன வேறுபாடு என்பதை நாம் பார்க்கலாம்.
நமது உலகில் மொபைல் டெக்னாலஜி என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. மொபைல் மூலம் செய்ய முடியாத காரியம் எதுவுமே இல்லை என்ற சூழலில், அதில் வரும் ஒவ்வொரு அப்டேட்களும் மக்கியானதாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தலைவர் கோபால் விட்டல் இ சிம் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஸ்மார்ட்போன்களில் வழக்கமான சிம் கார்டுகளுக்கு பதிலாக இ-சிம்களை பயன்படுத்தலாம் என்கிறார்.
சிம் கார்டுகள்: இ சிம்கள் பாதுகாப்பானவை என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இதற்கிடையே இ சிம் என்றால் என்ன? வழக்கமான சிம்களுக்கும் இ சிம்களுக்கு என்ன வேறுபாடு? இதனால் நன்மைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
Subscriber Identity Module என்பதன் சுருக்கமே சிம் ஆகும்.. ஒவ்வொரு மொபைல் நிறுவனமே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டுகளை தரும். இந்த சிம் இருந்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட நெர்வொர்க்கை பயன்படுத்த முடியும். உங்கள் மொபைலில் நீங்கள் சிம்மை போடும் போது, அது உங்கள் மொபைலை நெட்வொர்க்கில் பதிவு செய்யும். அதன் பிறகு மொபைல் மூலம் கால் அல்லது மெசேஜ் அனுப்ப முடியும்.
இ சிம்: இவை முதலில் கிட்டதட்ட ஒரு கிரெடிட் கார்ட சைஸில் இருந்தது. அதன் பிறகு காலம் செல்ல செல்ல இதன் சைஸ் குறைந்து கொண்டே வந்தது. மினி சிம், மைக்ரோ சிம் என அதன் சைஸ் குறைந்து கொண்டே வந்தது. இப்போது நம்மில் பெரும்பாலானோர் நானோ சிம்களை பயன்படுத்துகிறோம். இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாகவே இந்த இ சிம் வந்துள்ளது.
Embedded SIM என்பதன் சுருக்கமே இ சிம் ஆகும். சிம் கார்டை நேரடியாக செல்போனின் மதர்போர்டில் பதிக்கும் தொழில்நுட்பமே இதுவாகும். வழக்கமான நானோ-சிம் கார்டுகளைப் போல இல்லாமல் இ சிம் கார்டுகளுக்கு தனியாக எந்தவொரு ஸ்லாடும் தேவை இல்லை. அவை ஏற்கனவே மதர்போர்டில் இருக்கும் நிலையில், இந்த பயனர்கள் நேரடியாக தங்கள் சேவையை பயன்படுத்தலாம். தற்போது இந்தியாவில் ஏர்டெல், ஜியோ. Vi ஆகிய நிறுவனங்கள் இ சிம் சேவையை வழங்குகிறது.
பாதுகாப்பு வசதிகள்: இந்த இ சிம்கள் வழக்கமான சிம்களை போலவே இயங்கும். அவை பயனாளர்களின் அடையாளம் மற்றும் நெட்வோர்க் தகவல்களைச் சேமிக்கிறது இருப்பினும், வழக்கமான சிம்களை காட்டிலும் இவை பாதுகாப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இ சிம்களை வெளியே அகற்ற முடியாது. இதனால் ஹேக்கிங் அபாயம் குறைவு. அதேபோல நார்மல் சிம் கார்டுகள் திடீர் திடீரென தேசமாகும். ஆனால், இ சிம் சேதமாகாது மேலும், குளோனிங் அபாயமும் இங்கே ரொம்ப குறைவாகும்.
அதேநேரம் இதில் சிக்கலும் இருக்கவே செய்கிறது. அதாவது அடிக்கடி நீங்கள் மொபைல்களை மாற்றும் நபராக இருந்தால் நார்மல் சிம் மூலம் சில நொடிகளில் மாற்றிவிடலாம். ஆனால், இ சிம் கார்டை புது சாதனத்திற்கு மாற்றி அதை ஆக்டிவேட் செய்ய 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும், இது சிலருக்குப் பிரச்சினையாக இருக்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications