இந்தியாவில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்? டிஷ் பொருத்தினால் போதும்.. கிராமத்திலும் ஹை ஸ்பீடு இண்டெர்நெட்
வாஷிங்டன்: 2 நாள் பயணமாக எலான் மஸ்க் இந்தியா வருகை தர உள்ளார். எலான் மஸ்கின் இந்த பயணத்தின் போது இந்தியாவில் ஸ்டார்லிங் இணைய சேவை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டார்லிங் எப்படி செயல்படும்? கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
உலக பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் சி இ ஓவுமான எலான் மஸ்க், இந்த மாதம் அதாவது வருகிற 21, 22 ஆம் தேதி என இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வர திட்டமிட்டுள்ளார். எலான் மஸ்கே இந்த தகவலை உறுதி செய்தார். எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்திய பயணம் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், எலான் மஸ்க்கின் கனவு திட்டமான் செயற்கை கோள் மூலமக இணைய இணைப்பு அளிக்கும் ஸ்டார்லிங் இந்தியாவில் கிடைக்க இருப்பது பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில் ஸ்டார்லிங்: ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் , நெதர்லாந்து, டென்மார்க், போர்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் இணைய சேவை பயன்பாட்டில் உள்ளது. எனவே இந்தியாவிலும் ஸ்டார்லிங் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்லிங் இண்டெர்னெட் எப்படி செயல்படும், கட்டணம் எப்படி இருக்கும் உள்ளிட்ட விவர்ங்களை இங்கே பார்க்கலாம்.
ஸ்டார்லிங் என்றால் என்ன?: ஸ்டார்லிங் என்பது பல ஆயிரக்கணக்கான செயற்கைகோள்களை உள்ளடக்கியது ஆகும். பூமிக்கு மிக நெருக்கமான கீழ் வட்டப்பாதையில் இது சுற்றி வருகிறது. அதாவது, பூமியில் இருந்து வெறும் 550 கி.மீட்டர் தொலைவில் தான் உள்ளது.
மற்ற புவிநிலை செயற்கைக் கோள்களுடன் ஒப்பிடும் போது இது மிகவும் தாழ்வானது ஆகும். பூமிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால் இந்த ஸ்டார்லிங் செயற்கை கோள் மூலமாக அதிவேக இணைய இணைப்பை வழங்க முடிகிறது.
எப்படி செயல்படும்?: நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் ஸ்டார்லிங் அல்லது வேறு ஏதாவது, நிறுவனமாக இருந்தாலும்.. இங்கிருந்து சிக்னல்களை அனுப்பும்.. இந்த சிக்னல்கள் நீங்கள் பொருத்தியிருக்கும் ஆண்டனாவிற்கு கிடக்கும். இந்த சிக்னல்கள் அங்கிருந்து உங்கள் வீட்டில் வைத்து இருக்கும் மோடம்-க்கு அனுப்படும். அதன் மூலம் உங்களுக்கு இணைய சேவை கிடைக்கும்.
ஆண்டனா, மோடம் என மொத்த கருவிகளையும் ஸ்டார்லிங் தனது சப்ஸ்கிரைபர்களுக்கு வழங்கிவிடும். பைபர்களோ கேபிளோ இருக்காது. எனவே தான் மிகவும் ஊரகப்பகுதிகளுக்கு கூட அதிவேக இணைய சேவையை ஸ்டார்லிங்கால் வழங்க முடியும். இதன் காரணமாகவே இணைய இணைப்பு வழங்குவதில் சவாலான இடங்களாக உள்ள ரிமோட் பகுதிகளுக்கு ஸ்டார்லிங் சேவை மிகவும் வசதியாக இருக்கும் என்று எலான் மஸ்க் கூறி வருகிறார்.
ஸ்டார்லிங் சேட்டிலைட் இண்டெர்நெட் பெற உங்களுக்கு என்ன தேவை?:
உங்களுக்கு இணைய சேவை தேவைப்படும் காரணத்திற்கு ஏற்ப இன்ஸ்டாலேஷன்/ கருவிகளை ஸ்டார்லிங் விற்பனை செய்யும். ஸ்டார்லிங் ஆண்டனா ஒன்று இருக்கும். உங்களுக்கு எங்கு இணைய சேவை தேவைப்படுகிறதோ அந்த இடத்தில் இந்த டிஷ்-ஐ பொருத்தி கொள்ளலாம். ஒரு ரவுட்டர் ஒன்று இருக்கும். அதுபோக செயற்கை கோள் லிங்க் கேபிள் மற்றும் AC கேபிள் இருக்கும்.
இந்த டிஷ் கருவி வானத்தை தெளிவாக பார்க்கும் இடத்தில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டில் தற்போது டாடா பிளே, அல்லது சன் டைரக்ட் என ஏதாவது ஒரு டிஷ் ஆண்டனா வைத்து இருந்து அதை ஒரு மரக்கிளை வந்து மறைத்தால் எப்படி டிவி பார்க்க முடியாத நிலை வருமோ அதேபோன்று.. மரக்கிளை அல்லது வேறு ஏதேனும் இடையூறு இருந்தால், இணைய சேவையில் இடையூறு ஏற்படும்.
விலை எவ்வளவு இருக்கும்?: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஸ்டார்லிங் இணைய சேவையை பொறுத்தவரை விலை கொஞ்சம் காஸ்ட்லியாகவே உள்ளது. அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு 120 டாலரில் இருந்து தொடங்குகிறது. இந்திய ரூபாயில் இதை பார்த்தோம் என்றால் சுமார் பத்தாயிரம் ரூபாய் ஆகும். உங்கள் பிளானிற்கு தகுந்தபடி விலையும் மாறுபடும்.
அதிகபட்சமாக 5 ஆயிரம் டாலர் வரை மாத்திற்கு ஆகும். முதல் முறை சேவையை பெறும் போது கருவிகளின் விலை ரூ.500 டாலரில் இருந்து 2,500 டாலர் வரை ஆகிறது. இணைய வேகத்தை பொறுத்தவரை 25 முதல் 220 Mbps வேகம் வரை இருக்கும். பெரும்பாலான யூசர்களுக்கு 100 எம்பிபிஎஸ் வேகம் இருக்கிறதாம். அப்லோடு வேகத்தை பொறுத்தவரை 5 முதல் 20 எம்பிபிஎஸ் ஆக இருக்கும் என்று ஸ்டார்லிங்க் கூறுகிறது.












Click it and Unblock the Notifications