சாட்ஜிபிடி இனி தூசு மாதிரி.. வந்தாச்சு "ஜெமினி.." மனித சக்திக்கு அப்பாற்பட்டதையும் செய்யும் "AI"
வாஷிங்டன்: ஏஐ துறையில் இப்போது சாட் ஜிபிடி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக ஜெமினி என்ற ஏஐ மாடலை கூகுள் இறக்கியுள்ளது. இது ஏஐ துறையில் புதிய போட்டியை ஆரம்பித்துள்ளது.
சாட்ஜிபிடி இப்போது ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாட்ஜிபிடி நிறுவனத்தை உருவாக்கியது ஓபன் ஏஐ நிறுவனமாகும். இதில் மைக்ரோசாப்ட் மிகப் பெரியளவில் முதலீடு செய்துள்ளது.

மறுபுறம் அதற்குப் போட்டியாகக் கூகுள் நிறுவனமும் ஏஐ மாடலை உருவாக்கி வருகிறது. அதில் தான் இப்போது கூகுள் வெளியிட்டுள்ள புது ஏஐ மாடல் மிகப் பெரிய ஒரு போட்டியைத் தொடங்கியுள்ளது.
ஏஐ மாடல்: இதற்கிடையே ஏஐ துறையில் இப்போது மிகப் பெரிய சம்பவங்களே அரங்கேறி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி மாடலை அறிமுகப்படுத்தியது. இது பல பல புதிய சாதனைகளைப் படைத்து நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பிட்ட விஷயம் என்று இல்லாமல் பல்வேறு துறைகளிலும் சாட் ஜிபிடி சிறப்பாகவே இருந்தது. இனி சாட் ஜிபிடி தான் ஏஐ லீடர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே கூகுள் தனது சொந்த ஏஐ மாடலான ஜெமினியை இப்போது களமிறக்கி உள்ளது.
கடந்த மே மாதம் கூகுள் நிறுவனம் ஜெமினி மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. அப்போதே டெக் வல்லுநர்கள் இடையே அது பேசுபொருளாக இருந்தது. அது சாட் ஜிபிடிக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த காத்திருப்பு காலம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. ஜெமினியை கடந்த புதன்கிழமை கூகுள் கொண்டு வந்துவிட்டது.
ஜெமினி: இதுவரை கூகுள் உருவாக்கியதிலேயே இதுதான் வலிமையான ஒன்று என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பெரும்பாலான பெஞ்ச்மார்க் சோதனைகளில் சாட் ஜிபிடியை தூக்கிச் சாப்பிடுவதாகவே இருக்கிறது ஜெமினி.. அல்ட்ரா, ப்ரோ மற்றும் நானோ என்று மூன்று டைப்களில் கூகுள் நிறுவனம் இந்த ஜெமினி ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவான டெஸ்டிங், ரீசனிங், கணிதம் மற்றும் கோட்டிங் எனப் பல துறைகளில் ஜெமினி எப்படி இருக்கிறது என்பதை அவர்கள் சோதனை செய்துள்ளனர். இதற்காக இமேஜ் வீடியோ மற்றும் ஆடியோ பெஞ்ச்மார்க் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் ஒரே ஒரு டெஸ்டை தவிர மற்ற அனைத்திலும் ஜெமினி தான் சாட் ஜிபிடியை விட பவர்புல் ஒன்றாக இருந்துள்ளது.
கூகுள் சொல்வது என்ன: இது குறித்து கூகுள் தரப்பில் கூறுகையில், "எங்கள் ஜெமினி மாடல்களை நாங்கள் கடுமையாகச் சோதனை செய்து வருகிறோம். அதன் செயல்திறனை மதிப்பீடு செய்து வருகிறோம். படம், ஆடியோ மற்றும் வீடியோ எனப் பல வகைகளில் சோதனை செய்து வருகிறோம். ஜெமினி அல்ட்ரா கொடுத்துள்ள முடிவுகள் நாம் இதுவரை பார்த்திராத வகையில் இருக்கிறது" என்றார்.
மேலும் கணிதம், இயற்பியல், வரலாறு, சட்டம், மருத்துவம் என மொத்தம் 57 பாடங்களை வைத்து நடத்தப்பட்ட தேர்வில் ஜெமினி அல்ட்ரா 90% மார்க்கை பெற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு தேர்வுகளில் ஜெமினி பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சாட் ஜிபிடி பெற்ற மதிப்பெண்களை ஒப்பிட்டு அதையும் கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
இது தொடர்பாகக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், "ஏஐ மாடல்கள் இப்போது குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. எப்படி நாம் லேண்ட்லைன்களில் இருந்து மொபைலுக்கு மாறினோமோ.. அதுபோன்ற ஒரு மாற்றம் தான் இந்த ஏஐ.. இது சர்வதேச அளவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். ஏஐ மாடல்களை அனைவருக்கும் பயனுள்ளதாக மாற்றுவதே நமக்கு நோக்கமாக இருக்க வேண்டும். அதேநேரம் இது புதிய தொழில்நுட்பம் என்பதால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
கூகுள் டீப் மைண்ட் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான டெமிஸ் ஹசாபிஸ், ஜெமினி பல மொழி டாஸ்க்குகளில் மனிதர்களை விடவும் சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications