அடேங்கப்பா.. டிஸ்பிளே இல்லாம ஸ்மார்ட்போன்! குட்டியூண்டு டிவைசில் உலகமே இருக்கு! 10 சூப்பரான தகவல்கள்
சென்னை: டிஸ்பிளேவே இல்லாத குட்டியூண்டு ஸ்மார்ட் போன், டெக் பிரியர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சட்டையில் ஒட்டிக்கொள்வது போல இருக்கும் இதில் AI உதவியுடன் எல்லா வேலைகளையும் செய்யலாம்,
போன்கள் பொதுவாக கைக்கு அடக்கமாக சிறியதாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும் என்பதைத்தான் அனைவரும் விரும்புவோம். ஆனால், போன் சிறிதாக சிறிதாக அதன் டிஸ்பிளேவும் சிறிதாகும். எனவே தான், வசதிக்காக பெரிய டிஸ்பிளே கொண்ட போன்களை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஆனால், குட்டி போனில் எல்லா அசத்தலான வசதிகளும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் வந்திருக்கிறது AI பின் எனப்படும் உலகின் குட்டியான ஸ்மார்ட் போன். உலகின் குட்டி ஸ்மார்ட் போன் பற்றிய 10 தகவல்கள் இங்கே:

1. ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் இருவர் சேர்ந்து தொடங்கிய மைக்ரோ சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனமான Humane நிறுவனம், Display இல்லாத முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து டெக் உலகினரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
2. AI Pin என்ற இந்த ஸ்மார்ட்போன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரையே இல்லாத ஸ்மார்ட் போனை, யூசர்கள் தங்களது சட்டையில் பேனா போலவோ, கூலர்ஸ் போலவோ அணிந்து கொள்ளலாம். டேபிளில் க்ளிப் போல மாட்டிக் கொள்ளலாம்.
3. மிகச்சிறியதாகவும், மிகக் குறைந்த எடை கொண்டதாகவும் இருக்கும் இந்த டிவைஸ் நம் உடையில் ஒட்டிக்கொள்ளும். டிஸ்பிளே இன்றி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த சாதனம், சென்சார்ஸ் மற்றும் புரொஜக்டர்ஸ் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
4. இந்த AI PIN ஸ்மார்ட்போன், குவால்கம் ஸ்னாப்டிராகன் ப்ராசசர் மூலம் இயக்கப்படும். 13 MP கேமரா, மைக்ரோஃபோன் உள்பட ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன வசதிகளையும் ஆக்சிலரோமீட்டர் உள்ளிட்ட சென்சார்களையும் கொண்டிருக்கும்.
5. டிஸ்பிளே இல்லாததால், நமக்குத் தேவையான தகவல்களை நம் கைகள் மற்றும் சுவர்கள், தரையில் ஒளிபரப்பும் வகையில் புரொஜக்டர் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது.
6. யூசர்களின் சூழலைப் புரிந்துகொள்வதற்கும் தொடர்புடைய தகவல் மற்றும் செயல்பாடுகளை வழங்குவதற்கும் ஏற்ற வகையில், சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கலவையாக இந்த சாதனம் செயல்படுகிறது.
7. நாம் கூறுவதைக் கேட்டு, குறுஞ்செய்தி அனுப்பவும், கால் செய்யவும், புகைப்படம் எடுக்கவும் செய்யும் இந்த ஏஐ பின் ஸ்மார்ட் ஃபோன். இதில் பாடல்களை கூட ஒலிக்கச் செய்யலாம். வீட்டில் உள்ள ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் கட்டுப்படுத்தலாம்.

8. சைகைகளை வைத்து கட்டுப்படுத்துவது போல் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளளது. அதோடு, மொழிபெயர்ப்பு சேவைகள், விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் போன்ற பல்வேறு AI-சார்ந்த பயன்பாடுகளை அணுகவும் AI பின்னை பயன்படுத்தலாம்.
9. நாம் உண்ணும் உணவுப் பொருட்களை ஸ்கேன் செய்து, அவற்றில் உள்ள கொழுப்பு, புரதம் உள்ளிட்ட சத்துக்களையும், ஒரு நாளில் நாம் எடுத்துக்கொண்ட சத்துகளையும், அவற்றின் அளவீடுகளுடன் தெரிவிக்கும் வகையில், டயட் கண்ட்ரோல் ஆப் உடன் இந்த AI Pin ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
10. இந்திய ரூபாயில் சுமார் 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த டிவைஸை humane நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். இவற்றின் விற்பனை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications