இதை யாரும் எதிர்பார்க்கல.. ஆப்பிளுக்கு போட்டியாக ஜியோ? அதென்ன ஜியோ டேக்! இதில் இத்தனை வசதிகளா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாக ஜியோ நிறுவனம் ஜியோ டேக் என்ற ஒரு அட்டகாசமான கருவியை இறக்கியுள்ளது. இதில் உள்ள வசதிகள் என்ன, இதற்கும் ஆப்பிளின் ஏர்டேக்கிற்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம்.

முன்பு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது பல்வேறு துறைகளில் தனது சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாகச் சில்லறை வர்த்தகத்தில் அது அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

அதேபோல டெக் துறையில் மிகப் பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது. டெலிகாம் துறையை ஒரு புரட்டிப் போட்ட ஜியோ நிறுவனம் மூலம் இப்போது டெக் துறையில் பல முயற்சிகளை ரிலையன்ஸ் செய்து வருகிறது.

What is JioTag launched and its usages and how is it different from Apple’s AirTag

ஜியோ டேக்: அதன்படி இப்போது அவர்கள் புதிதாக ஜியோ டேக் என்ற ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த ஜியோ டேக் என்பது ஒரு புளூடூத் சாதனமாகும்.. நமது பொருட்களை இதில் இணைத்துக் கொண்டால் மிக எளிதாக அவை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க இது உதவும்.இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும். டெக் துறையில் அடுத்த முக்கிய கருவியாக இது எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ டேக் என்பது ஒரு சிறிய அதேநேரம் சக்திவாய்ந்த புளூடூத் சாதனமாகும்.. இது நமது பொருட்களை ஈஸிாக கண்டுபிடிக்க உதவுகிறது. பேக், பர்ஸ், கீச்செயின் என எதில் வேண்டுமானாலும் இதை நாம் இணைத்துக் கொள்ளலாம். அப்படி இணைப்பதன் மூலம் நம்மால் அது எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

வெறும் 9.5 கிராம் எடையில் வெள்ளை நிறத்தில் சிறிய கருவிதான் இது. உள்ளே இருக்கும் பேட்டரி ஓராண்டிற்குத் தாங்கும். அதன் பின்னரும் நாம் பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம். உட்புறங்களில் 20 மீட்டர் வரையும் வெளிப்புறத்தில் 50 மீட்டர் வரையும் இது வேலை செய்யும்.

What is JioTag launched and its usages and how is it different from Apple’s AirTag

என்ன வசதிகள்: வெறும் பொருட்களைக் கண்டறிவது மட்டுமின்றி இதில் பல அட்டகாசமான வசதிகளும் இருக்கிறது. அதாவது, இந்த கருவியை நாம் double-tap செய்தால், இத்துடன் கனெக்ட் ஆன மொபைல் ரிங் ஆகும். அது சைலண்ட் மோடில் இருந்தாலும் கூட ரிங் ஆகும். அதாவது இந்த கருவியை வைத்தும் நாம் மொபைலை எங்காவது மறந்து வைத்தாலும் கண்டுபிடிக்கலாம்.

மேலும், அவசரமாக எங்காவது கிளம்புகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்.. அப்போது இந்த ஜியோ டேக் இருக்கும் பர்ஸ் அல்லது சாவியை வைத்துவிட்டுக் கிளம்பினால், உங்கள் மொபைலிலேயே நோட்டிவிக்கேஷன் வரும். அதாவது இந்த பொருளை எடுக்காமல் செல்கிறீர்கள் என்ற நோட்டிவிக்கேஷன் வரும்.

மேலும், Find Network என்ற வசதியையும் வழங்குகிறது. இதை வைத்து நாம் தொலைந்து போன பொருட்களைக் கண்டுபிடிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது குறித்துக் கூடுதலாக அந்த நிறுவனம் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. டேக் எதாவது தொலைந்து போனால் அதை மற்ற ஜியோ நெட்வோர்க்கில் உள்ள மொபைல்களின் உதவியுடன் கண்டுபிடிக்கும் வகையிலேயே இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கருவியை நாம் எந்தவொரு பொருளுடனும் இணைத்துப் பயன்படுத்தலாம்.

ஜியோ டேக் என்பது ஒருவர் தனிப்பட்ட பொருட்களை எளிதாகக் கண்டுபிடிக்கப் பயன்படும் பொருள். ஒரு பொருளை மறந்து வைத்து விட்டு வருவோர் அல்லது அடிக்கடி எங்காவது பயணித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு இது பெரியளவில் உதவும். நாம் செல்லப்பிராணிகளின் காலரிலும் இதை மாட்டி டிராக் செய்ய முடியும்.

What is JioTag launched and its usages and how is it different from Apple’s AirTag

என்ன வித்தியாசம்: இது குறித்துப் படித்தவுடன் இதற்கும் ஆப்பிளின் ஏர் டேக்கிற்கும் என்ன வித்தியாசம் என்றே பலரும் கேள்வி எழும். இந்த இரண்டுமே புளூடூத் மூலம் செயல்படுகிறது என்ற போதிலும், விலை, வரம்பு எனப் பல அம்சங்களில் வேறுபடுகின்றன. விலையைப் பொறுத்தவரை ஜியோ டேக் விலை மிகக் குறைவு. ஜியோ டேக் இப்போது 749 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் ஆப்பிள் டேக் இப்போது 3,190 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஜியோ டேக்கால் அதிகபட்சம் 50 மீட்டர் வரை வேலை செய்ய முடியும். ஆனால், ஏர்டேக் அதன் Find My நெட்வோர்க்கை பயன்படுத்தி அதிக தூரத்திற்குப் பொருளை டிராக் செய்ய முடியும்.. ஆப்பிளின் ஏர்டேக்கை தண்ணீரில் போட்டாலும் எதுவும் ஆகாது தொடர்ந்து வேலை செய்யும். ஆனால், ஜியோ டேக்கில் அப்படி வசதி இருக்கிறதா என எதுவும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

அனைத்தையும் விட மிகப்பெரிய வித்தியாசம் ஜியோ டேக் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் என அனைத்து சாதனங்களிலும் வேலை செய்யும். அதேநேரம் ஏர்டேக் ஆப்பிளின் iOS சாதனங்களுடன் மட்டுமே வேலை செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+