தலை தீபாவளி கொண்டாடும் இளைய மகன்! ஜியோ யூசர்களுக்கு ஆஃபரை அள்ளி கொடுத்த முகேஷ் அம்பானி! என்ன பாருங்க
டெல்லி: ஜியோ நிறுவனம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், அது தனது கஸ்டமர்களை கவர பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது. அடுத்த மாதம் தீபாவளியை நாம் கொண்டாட உள்ள நிலையில், ஜியோ நிறுவனம் இப்போது புதிதாக 'தீபாவளி தமாக்கா' என்ற பெயரில் அட்டகாசமான ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
நமது நாட்டில் டெக் துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது ஜியோ நிறுவனம்.. அதற்கு முன்பு வரை ஓரிரு ஜிபி இணையத்திற்கே நாம் பெரிய தொகையைச் செலுத்த வேண்டி இருக்கும்.

அள்ளி தரும் அம்பானி: ஆனால், ஜியோ தான் இதை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. கால் இலவசம், தினசரி அன்லிமிடட் டேட்டா என்று ஜியோ சலுகைகளை அள்ளி கொடுத்தது. மேலும், ஒவ்வொரு முறையும் தீபாவளி சமயத்தில் ஜியோ சலுகைகளை அள்ளி தருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. டெலிகாம் துறைக்குப் பிறகு ஜியோ இப்போது ஃபைபர் நெட் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கிடையே அம்பானி இப்போது தீபாவளி பரிசை அள்ளி கொடுத்துள்ளார். முதற்கட்டமாக இப்போது ஜியோ ஏர் பைபருக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
'தீபாவளி தமாக்கா' என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை புதிய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமாம். இத்திட்டத்தின் கீழ் நாம் ஒரு வருட JioAirFiber சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாகப் பெறலாம்.
எப்படிப் பெற வேண்டும்: இந்த சலுகையைப் பெற புதிய வாடிக்கையாளர்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் குறிப்பிட்ட விலைக்கு மேல் பொருட்களை வாங்க வேண்டும்.. அதேநேரம் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மூன்று மாத சிறப்பு ரீச்சார்ஜ் செய்தாலே போதும்.. இந்த சலுகையைப் பெறலாம்.
சலுகை எப்படி கிடைக்கும்: ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது மைஜியோ ஸ்டோரில் 20,000 அல்லது அதற்கு மேல் ஸ்மார்ட்ஃபோன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது பிற எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கினாலே இந்த சலுகை நமக்குக் கிடைக்கும். அல்லது 3 மாத தீபாவளி திட்டத்துடன் புதிய ஏர் ஃபைரை சலுகை கட்டணமாக ரூ2,222க்கு நாம் பெறலாம்.

ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் இதே தீபாவளி திட்டம் மூலம் 1 வருட சந்தாவை பெறலாம். இதைச் செய்த உடன் நமக்கு மை ஜியோ செயலியில் ஏர் ஃபைபர் திட்டத்திற்குச் சமமான 12 கூப்பன்கள் கிடைக்கும். இதை நாம் நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்படி: ஒவ்வொரு கூப்பனையும் 30 நாட்களுக்குள் அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர், ஜியோபாயிண்ட் ஸ்டோர் அல்லது ஜியோமார்ட் டிஜிட்டல் ஸ்டோரில் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ. 15 ஆயிரத்திற்கு மேல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கும் போது இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்போது தானாக இந்த AirFiber ஆக்டிவேட் ஆகிவிடும்.
தனது மகன் ஆனந்த் அம்பானி தலைத் தீபாவளி கொண்டாடும் நிலையில், முகேஷ் அம்பானி இப்போது சலுகையை அள்ளி கொடுத்துள்ளார். ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு சமீபத்தில் தான் ஜொமேட்டோ கோல்ட் சந்தா உள்ளிட்ட இலவசங்களையும் ஜியோ அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications