அம்பானி தந்த "புத்தாண்டு" பரிசு! ஜியோ இறக்கிய அதிரடி ஆஃபர்.. இத்தனை வசதிகள் இருக்கா! அப்போ விலை என்ன
டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு அட்டகாசமான ஒரு ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. பயனாளர்களைக் கவரும் வகையில் இருக்கும் இந்த புத்தாண்டு சலுகை குறித்து நாம் பார்க்கலாம்.
இந்திய டெலிகாம் துறையை நாம் ஜியோவுக்கு முன்பு, ஜியோவுக்கு பின் என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஜியோவுக்கு முன்பு நாம் வெகு சில ஜிபி டேட்டாவுக்கே பெரும் தொகையைக் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் ஜியோ குறைந்த தொகைக்கு அன்லிமிட்டட் டேட்டாவை வழங்க ஆரம்பித்தது.

இப்போது நாட்டில் ஜியோ யூசர்கள் தான் அதிகம். இதற்கிடையே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புத்தாண்டையொட்டி அட்டகாசமான ஒரு ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
ஜியோ: ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது ப்ரீபெய்ட் யூசர்களுக்கு "ஹேப்பி நியூ இயர் ஆஃபர் 2024"ஐ அறிமுகம் செய்துள்ளது. ஜியோ நிறுவனத்தின் ரூ. 2,999 பேக்கில் நமக்கு 365 நாட்கள் வெலிடிட்டி இருக்கும். இப்போது அந்தத் திட்டத்தில் தான் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக இதில் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் அப்படியே இருக்கும். அதன் வெலிடிட்டி மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி செலவு குறையும்.
ஜயோ நிறுவனத்தின் ஓராண்டு பேக்கில் நாம் ரூ. 2,999க்கு ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். இதில் நமக்குத் தினசரி 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், 100 மெசேஜ், அன்லிமிடெட் வாய்ஸ் கால் கிடைக்கும். இப்போது இந்தத் திட்டத்தின் வேலிடிட்டியை தான் புத்தாண்டை முன்னிட்டு நீட்டித்துள்ளனர். இந்த பிளான் வெலிடிட்டி 24 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எப்படி செய்ய வேண்டும்: இதனால் வழக்கமான 365-நாள் வேலிடிட்டி முடிந்த பிறகும், கூடுதலாக 24 நாட்களுக்கு நாம் இதைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நம்மால் 389 நாட்களுக்கு சர்வீஸ் கிடைக்கும். இதை நாம் ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பக்கத்தின் மூலம், அல்லது MyJio செயலி மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.

கூடுதலாக நமக்கு கிடைக்கும் 24 நாட்களுக்குத் தினசரி 2.5 ஜிபி டேட்டா, 100 மெசேஜ், அன்லிமிடெட் வாய்ஸ் கால் கிடைக்கும். இதன் மூலம் நமக்குத் தினசரி ஆகும் செலவு என்பது ரூ. 8.21இல் இருந்து தினசரி ரூ.7.70ஆகக் குறையும். தினசரி 2.5 டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த ரேட் அனைவரையும் கவரும் வகையிலேயே இருக்கிறது.
5ஜி லிமிட் இல்லை: மேலும், இதில் மற்றொரு முக்கிய நன்மையும் இருக்கிறது. அதாவது தினசரி 2.5 ஜிபி டேட்டா என்பது 4ஜி தான். ஜியோவின் மற்ற திட்டங்களைப் போலவே இதிலும் 5ஜி நமக்கு அன்லிமிடட்டாக கிடைக்கும். அதாவது 5ஜி லிமிட் இல்லாமல் நாம் பயன்படுத்தலாம். நீங்கள் 5ஜி நெட்வொர்க் கவரேஜ் பகுதியில் இருந்தால் வரம்பே இல்லாமல் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
மேலும், இந்த திட்டத்தில் கீழ் ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோ க்ளவுட் ஆகியவை இருக்கும். ஜியோ சினிமா பிரீமியம் இல்லாமல் வழக்கமான ஜியோ சினிமா கன்டென்ட்களை நம்மால் பார்க்க முடியும். ஜியோ சினிமா பிரீமியம் வேண்டும் என்றால் அதற்கு நாம் தனியாக 1,499 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் நாம் 14 வெவ்வேறு ஓடிடி தளங்களை ஒரே இடத்தில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications