நம்பவே முடியல.. மணல் துகளை விட சின்னது.. இதுதான் உலகின் மிக சிறிய கேமரா.. குவாலிட்டி வேற லெவல்! செம
வாஷிங்டன்: உலகில் மிகப் பெரிய சிறிய கேமராவை இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்னிவிஷன் என்று நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது ஒரு உப்பின் துகளுக்கு இணையானது என்பதில் இருந்து இது எந்தளவுக்கு சிறியது என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான கருவிகளில் ஒன்று கேமரா.. இந்த உலகை அழகியலுடன் பார்க்கவும் படம் பிடிக்கவும் முக்கிய கருவியாக இருப்பது கேமரா தான். ஒரு காலத்தில் பெரிதாகவும் பருமனாகவும் இருந்த கேமரா இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது.

நமது விரல் நுணியில் இப்போது கேமரா வந்துவிட்டது. இப்போது கேமராக்களுக்கு இணையாகப் போட்டோ எடுக்கும் மொபைல்களும் கூட வந்துவிட்டன. அத்துடன் நிற்காமல் கேமரா தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்தே வருகிறது.
கேமரா: இதற்கிடையே இப்போது கேமராக்கள் விரல் நுணியில் வந்துவிட்டது. இவை பொதுவாக ஆப்ரேஷன் செய்யும் போது பயன்படுத்தப்படும் கேமரா ஆகும். இந்த புதிய கேமரா மருத்துவத் துறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 0.575 x 0.575 சைஸ் உள்ள இந்த சிறிய கேமராவின் படம் இணையத்தில் வெளியாகி இப்போது டிரெண்டாகி வருகிறது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் இந்த கேமராவின் மொத்த அளவே ஒரு உப்பு துகளுக்குச் சமமானதாகும்.
இந்த கேமரா குறித்த படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இவை அறிவியல் துறை மட்டுமின்றி மருத்துவத் துறையிலும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'OV6948' என அழைக்கப்படும் இந்த கேமராவை அமெரிக்காவைச் சேர்ந்த அம்னிவிஷயன் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. 0.575 x 0.575 அளவு கொண்ட இந்த கேமரா உலகின் மிகச் சிறிய கேமரா என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது.
எதற்குப் பயன்படும்: உடலில் துளையிட்டு ஆப்ரேஷன் செய்யும் போது நீண்ட தூரத்திற்கு அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் ஒரு கேமராவை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஆம்னிவிஷன் இந்த சிறிய கேமராவை உருவாக்கியுள்ளது. இப்படித் துளையிட்டு ஆப்ரேஷன் செய்வதன் மூலம் தேவையற்ற தொற்று நோய் பரவலைத் தடுக்க முடியும். மேலும், உடலுக்கும் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது.

அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த கேமராவுக்கு தான் மேலும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த OVM6948 கேமரா என்பது பின்பக்க வெளிச்சத்துடன் கூடிய ஒரே அல்ட்ரா-சிறிய கேமரா ஆகும். இதன் மூலம் மிகச் சிறந்த படங்களைப் படங்களை எடுக்க முடியும். மேலும், அதில் இருக்கும் எல்இடி உற்பத்தி செய்யும் வெப்பத்தைக் குறைக்கவும் அதில் தேவையான வசதிகள் இருக்கிறது.
ஆப்ரேஷன்: சிக்கலான நீண்ட நேரம் ஆப்ரேஷன் நடக்கும் போது இது பெரியளவில் உதவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்போது இதுபோன்ற சிக்கலான ஆப்ரேஷன்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு இந்த சின்ன கேமராக்கள் பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. வரும் காலத்தில் இதைவிடக் கண்ணுக்கே தெரியாத சின்ன கேமராக்கள் வந்தாலும் ஆச்சரியப்பட இல்லை
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications