த்ரெட்ஸ் செயலியை திறந்ததும் என்ன நடக்கும்? முதலில் இதை தெரிஞ்சுகோங்க.. ரொம்ப முக்கியம்
சென்னை: மார்க் ஜுக்கர்பெர்க்கின் த்ரெட்ஸ் செயலியை திறந்ததும் என்ன நடக்கும்? அது எப்படி இயங்கும்? என்று இங்கே பார்க்கலாம்.
மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டு இருக்கும் த்ரெட்ஸ் மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் கிளை செயலியாக இந்த புதிய சமூக வலைத்தளம் த்ரெட்ஸ் செயல்படும்.
ட்விட்டர் நிறுவனம் போலவே தோற்றம் கொண்ட த்ரெட்ஸ் சிறிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்யும் தளமாக இயங்க உள்ளது. இந்த த்ரெட்ஸ் தொடங்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2 மில்லியன் யூசர்களை கடந்து உள்ளது. தற்போது 8 மில்லியன் யூசர்களை கடந்து த்ரெட்ஸ் நிறுவனம் சென்று கொண்டு இருக்கிறது. ட்விட்டரில் 368 மில்லியன் யூசர் உள்ளனர்.

சரி இந்த த்ரெட்ஸ் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்: இந்த செயலி ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் கிடைக்கிறது. இலவசம்தான். ஏற்கனவே நிறைய செயலிகள் த்ரெட்ஸ் செயலி பெயரில் இருப்பதால் தமிழ் வார்த்தை குவை லோகோவாக கொண்ட த்ரெட்ஸ் செயலியை டவுன்லோட் செய்யவும்.
அதன் கீழே பவர்ட் பை இன்ஸ்டாகிராம் என்று இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். உள்ளே சென்றவுடன் ஏற்கனவே உங்கள் போனில் இன்ஸ்டாகிராம் இருந்து அதில் கணக்கும் இருந்தால் அந்த கணக்கின் பெயர் இந்த த்ரெட்ஸ் செயலியில் காட்டப்படும். அதை கனெக்ட் செய்து கணக்கை எளிதாக துவங்கலாம்.
அதில் பாலோ செய்யும் நபர்களை இதில் ஒரே கிளிக்கில் பாலோ செய்யலாம். இல்லையென்றால் புதிதாகவே இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்க வேண்டும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இன்ஸ்டாகிராமில் கணக்கு இல்லாமல் இந்த த்ரெட்ஸ் செயலியில் கணக்கு தொடங்க முடியாது. இது உள்ளே பார்க்க அப்படியே ட்விட்டர் போலவே இருக்கும்.
லைக், ரீ டிவிட், கமெண்ட் எல்லாம் அதே மாதிரிதான் இருக்கும். மெசேஜ் என்ற சிம்பிளை கிளிக் செய்து அப்பிற்கு வெளியேவும் ஷேர் செய்ய முடியும். எத்தனை லைக், கமெண்ட் ஒரு போஸ்ட் வாங்கி உள்ளது என்பதை ஒவ்வொரு போஸ்டுக்கும் கீழே பார்க்க முடியும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது இன்ஸ்டாகிராம் பெற்று எடுத்த ட்விட்டரின் தம்பி என்றுதான் கூற வேண்டும்.
இதில் போஸ்டுகள் 500 எழுத்துகளுக்கு குறைக்கப்பட்டு உள்ளன, இது ட்விட்டரின் 280-எழுத்து வரம்பை விட அதிகமாகும். மேலும் ஐந்து நிமிடங்கள் வரை நீளமான வீடியோக்கள், மேலும் இணைப்புகள், அதிகபட்சம் 10 புகைப்படங்களை இதில் பதிவிடலாம். இன்ஸ்டாவில் உள்ள 10 புகைப்படங்கள் வரம்பு இதிலும் உள்ளது.
ட்விட்டர் போல இதில் ஹேஸ்டேக் இப்போது இல்லை. அதேபோல் போஸ்டுகளை தேடும் வாய்ப்பும் தற்போது இல்லை. வரும் நாட்களில் இது கொண்டு வரப்படலாம். ட்விட்டர் போல அதிகாலை சந்தைக்கடையாக இது பரபரப்பாக டென்சன் கொடுக்கும் விதமாக இல்லை.
பரபரப்பு கம்மியாகவே உள்ளது. நீங்கள் செய்யும் போஸ்டிங் எல்லா நோட்டிபிகேஷனும் இந்த செயலியில் இல்லாத ஆனால் இன்ஸ்டாவில் மட்டுமே இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் அளிக்கப்படுகிறது. அதனால் அவர்களும் விரைவில் இந்த செயலியில் கணக்கு தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன.
சமீபத்தில் திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. அதன்படி ப்ளூ டிக் முறையின்றி வழங்கப்பட்டு உள்ளது. இதை நீக்க போகிறோம். மாறாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக காணாமல் போனது. பல செய்தி நிறுவனங்களின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. இதையடுத்துதான் தற்போது போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். ட்விட்டர் விதிகளில் சமீபத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு நிலையில் பெரும்பாலான யூசர் த்ரெட்ஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது.
இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று ட்விட்டரில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ட்விட்டர் விதிகளில் சமீபத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு நிலையில் பெரும்பாலான யூசர் த்ரெட்ஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இந்த புதிய சமூக வலைத்தளம் த்ரெட்ஸ் செயல்படும்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications