நாளை முதல் "இந்த" செல்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. என்ன காரணம்! லிஸ்டில் உங்க மொபைல் இருக்கா?
வாஷிங்டன்: இந்த நவீனக் காலத்தில் வாட்ஸ்அப் என்பது தவிர்க்கவே முடியாத முக்கியமான செயலியாக மாறிவிட்டது. இதற்கிடையே நாளை முதல் குறிப்பிட்ட பல மாடல்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த செல்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. இந்த லிஸ்டில் உங்கள் மொபைல் இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது செல்போன் என்பது கிட்டதட்ட நமக்கு ஆறாவது விரலைப் போல மாறிவிட்டது. வெளியே செல்லும் போது பர்ஸை கூட மறந்து வைத்துவிடலாம்.. ஆனால், யாரும் செல்போனை மறப்பதில்லை. அந்தளவுக்கு செல்போன் முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது.

இந்த செல்போனில் வாட்ஸ்அப் நமக்கு முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் கூட அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வாட்ஸ்அப் மூலமாகவே வருகிறது.
வாட்ஸ்அப்:
உலகெங்கும் சுமார் 2 பில்லியன் ஆக்டிவ் யூசர்களை கொண்ட வாட்ஸ்அப் தொடர்ச்சியாகப் பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. மேலும் பாதுகாப்பையும் உறுதி செய்து வருகிறது. இதுபோன்ற அப்டேட்களை வழங்கும் போது பழைய சாதனங்களில் வாட்ஸ்அப் செயலி சப்போர்ட் ஆகாது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சில பழைய செல்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாத சூழல் உருவாகும்.
அதன்படி ஆண்ட்ராய்டு 4.4 அதாவது கிட்கேட் வெர்ஷன் அல்லது அதற்கு முந்தைய பதிப்பில் உங்கள் செல்போன் இருந்தால் அவை நாளை ஜன. 1ம் தேதி முதல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பழைய செல்போன்களுக்கு வாட்ஸ்அப் வழங்கி வந்த ஆதரவை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
வேலை செய்யாது:
பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டை உறுதி செய்யவே சில குறிப்பிட்ட பழைய செல்போன்களுக்கு வழங்கும் சப்போர்ட்டை நிறுத்துவதாக மெட்டா அறிவித்துள்ளது. உங்கள் செல்போன் இந்த லிஸ்டில் இருக்கா என்பதை நோட் செய்யுங்கள்.. ஒருவேளை உங்க மொபைல் இந்த லிஸ்டில் இருந்தால்.. நீங்கள் வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த அதை அப்டேட் செய்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.
எந்த மாடல்களில் வேலை செய்யாது:
சாம்சங் கேலக்ஸி S3, கேலக்ஸி நோட் 2, கேலக்ஸி ஏஸ் 3, கேலக்ஸி S4 மினி, மொட்டரோலாவில் மோட்டோ ஜி (முதல் ஜெனரேஷன்), மொட்டரோலா ரேசர் HD, மோட்டோ இ 2014, ஹெச்டிசி செல்போன்களில் One எக்ஸ், One X+, டிசயர் 500, டிசயர் 601, எல்ஜி ஆப்டிமஸ் ஜி, நெக்ஸஸ் 4, ஜி2 மினி, L90 ஆகிய மாடல்கள் இந்த லிஸ்டில் உள்ளன. அதேபோல சோனி மாடல்களில் Xperia Z, எக்ஸ்பீரியா எஸ்பி, எக்ஸ்பீரியா டி, எக்ஸ்பீரியா வி ஆகிய மாடல்களிலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது.
இவை அனைத்துமே கிட்டதட்ட 10 ஆண்டுகள் பழமையான மாடல்கள். இந்த பழைய செல்போன்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் தனது சப்போர்ட்டை நிறுத்தவுள்ளது. எனவே, இந்த செல்போன்களை வைத்திருப்போர் மட்டுமே வாட்ஸ்அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த செல்போனை புதிதாக மாற்ற வேண்டும். மற்றவர்களுக்குக் கவலை இல்லை.. தொடர்ந்து நீங்கள் எப்போதும் போல வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம்.
என்ன மாடல்னு தெரியலையா:
நான் ரொம்ப வருஷமா ஒரே செல்போனை யூஸ் செய்கிறேன்.. ஆனால், எனக்கு என்ன மாடல்னு தெரியல என்ன செய்வது எனக் கேட்டால்.. அதற்கும் ஒரு தீர்வு இருக்கு. அதாவது வாட்ஸ்அப் எந்த செயலிகளில் எல்லாம் தனது சப்போர்ட்டை நிறுத்துகிறதோ.. அந்த செல்போனை வைத்திருப்போருக்கு எல்லாம் ஒரு நோட்டிபிக்கேஷனை அனுப்புகிறது. எனவே, அதை வைத்தே உங்க செல்போன் இந்த லிஸ்டில் இருக்கிறதா.. இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications