மேஜிக் காட்டும் வாட்ஸ்அப்.. வீடியோ காலில் பலூன் வெடிக்குது, ஹார்ட் பறக்குது.. வாவ் பயங்கரமா இருக்கே
வாஷிங்டன்: வாட்ஸ்அப் தளத்தில் இப்போது வந்துள்ள ஒரு சூப்பரான வசதி அனைவரையுமே கவரும் வகையில் இருந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது சர்வதேச அளவில் அதிகப்படியானோர் பயன்படுத்தும் முக்கியமான மெசேஜிங் தளமாக வாட்ஸ்அப் இருக்கிறது. அமெரிக்காவைத் தாண்டி பல்வேறு நாடுகளிலும் இது முக்கியமான செயலியாகவே இருக்கிறது.

அதிலும் இந்தியா போன்ற பல நாடுகளில் பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடங்களில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூட வாட்ஸ்ப் மூலமாகவே வருகிறது. இதனால் வாட்ஸ்அப் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருக்கிறது.
வாட்ஸ்அப்: வாட்ஸ்அப் கடந்த 2009இல் உருவாக்கப்பட்ட நிலையில், அதைக் கடந்த 2014இல் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதன் பிறகு வாட்ஸ்அப் நிறுவனத்தில் பயனாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் வருவாயை அதிகரிக்கவும் பேஸ்புக் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் வாட்ஸ்அப் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது.
அதிலும் கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் தளத்தில் பல முக்கிய அப்டேட்ங்கள் வெளியாகி வருகிறது. இது பயனாளர்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தையே கொடுத்து வருகிறது. ஆனால், இப்படி அதிகப்படியான வசதிகள் குறைந்த காலகட்டத்தில் வருவதால் நீங்கள் சில முக்கிய அம்சங்களை மிஸ் செய்யக் கூடும். அப்படித்தான் சத்தமே இல்லாமல் வாட்ஸ்அப் இந்த அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. சைலெண்டாக வந்த இந்த வசதி குறித்து பலருக்கும் தெரியவில்லை. அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கலக்கல் வசதி: வாட்ஸ்அப் நிறுவனம் வீடியோ கால் செய்யும் போது எமோஜிகளை அனுப்பும் வசதியைச் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தி இருந்தது. அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதற்கிடையே மற்றொரு அட்டகாசமான அப்டேடும் வந்துள்ளது. அதாவது, வாட்ஸ்அப் வீடியோ வீடியோ காலின் போது, நீங்கள் சில குறிப்பிட்ட சைகைகள் செய்தால் அது குறிப்பிட்ட ஈமோஜிகளை காட்டும்.
அதாவது வீடியோ கால் செய்யும் போது, உங்கள் விரல்களால் அமைதிக்கான சைகை (peace sign) காட்டினால் உங்கள் திரையில் பலூன்கள் வெடித்துச் சிதறும். மேலும், உங்கள் இரு கைகளைக் கொண்டு இதய ஈமோஜியை காட்டினால், இதய ஈமோஜி திரையிலும் வரும். மேலும், தம்ப்ஸ் அப் ஈமோஜியை காட்டினால் பேஸ்புக்கில் வரும் தம்ப்ஸ் அப் ஈமோஜி காட்டும். தம்ப்ஸ் டவுன் காட்டினால் தம்ப்ஸ் டவுன் ஈமோஜி வரும்.
நீங்கள் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசும் போது இது கலக்காலான விஷயமாக இருக்கும். நண்பர்கள் உடனான உரையாடலை இது இன்னுமே நெருக்கமாக மாறும். மேலும், இந்த ஈமோஜியை வைத்தே நீங்கள் சின்ன சின்ன கேமையும் கூட விளையாடலாம். இந்த கலக்கலான வசதி ஏற்கனவே ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் என்று இரண்டிலும் இருக்கிறது. படிப்படியாக அனைத்து செல்போன்களுக்கும் இந்த வசதி வந்துவிடும்.
மற்றொரு அப்டேட்: அதேபோல வாட்ஸ்அப் நிறுவனம் "view once" என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த ஆப்ஷனில் நாம் ஒருவருக்குப் போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் அதை அவரால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அது அவரது மொபைலிலும் சேவ் ஆகாது. ஆனால், கணினி மூலம் போட்டோ, வீடியோ அனுப்புவோருக்கு இந்த "view once" வசதியை வாட்ஸ்அப் கடந்தாண்டு நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பு வந்த நிலையில், வாட்ஸ்அப் மீண்டும் அந்த வசதியைக் கொண்டுவந்துவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications