வாட்ஸ் அப்-பில் நீண்ட நாள் எதிர்பார்த்த வசதி.. இனி டவுன்லோடு பண்ண தேவையில்லை! விரைவில் வரும் அப்டேட்
சென்னை: வாட்ஸ் அப் யூசர்கள் தங்களுக்கு மெசேஜ் மூலம் வரும் டாக்குமெண்ட்களை டவுன்லோடு செய்யாமல் அதில் என்ன இருக்கிறது என்பதை ப்ரிவியூ மூலம் பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வசதியை வாட்ஸ் அப் பரிசோதித்து வருகிறதாம்.
ஸ்மார்ட் போன்களில் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. குறுஞ்செய்தி அனுப்புவது முதல் வாய்ஸ்கால், வீடியோ கால் வசதி என பல வசதிகள் வாட்ஸ் அப்பில் உள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் 2014-ஆம் ஆண்டு வாங்கியது.

அசத்தலான அப்டேட்: அப்போது முதலே பயனர்களுக்கு அவ்வப்போது அசத்தலான அப்டேட்களை வெளியிட்டு வருகிறது வாட்ஸ் அப். சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்கவும், பயனர்களின் எண்ணிக்கையை கூட்டவும் தொடர்ச்சியாக பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், விரைவில் வாட்ஸ் அப் நிறுவனம் அசத்தலான அப்டேட் ஒன்றை வெளியிட இருக்கிறதாம். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
டாக்குமெண்ட் ஃபைல்: வாட்ஸ் அப்பில் முதலில் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பும் வசதி இருந்தது. நாளடைவில் படிப்படியாக பல்வேறு அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, புகைப்படங்கள், வீடியோக்களையும் வாட்ஸ் அப் மூலம் நமது தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பிக்கொள்ளலாம். பின் நாட்களில், வீடியோக்கள் மட்டும் இன்றி பிடிப் உள்ளிட்டவற்றையும் டாக்குமெண்ட் ஆக - அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டாக்குமெண்ட்டை டவுன்லோடு செய்துதான் பயனர்கள் பார்க்க முடியும் என்ற நிலை தற்போது உள்ளது.
இதனால், தங்களுக்கு ரீசீவ் ஆன மெசேஜ் ஆடியோவா, வீடியோவா அல்லது பிடிஎப்-பா என டவுன்லோடு செய்து பார்த்த பிறகே அதில் உள்ள விவரங்கள் தெரியவரும். இதனால், தேவையற்றை டாக்குமெண்டாக இருந்தாலும் கூட அவற்றை டவுன்லோடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
பிரிவியூ போல பார்க்கலாம்: இந்த நிலையில்தான் விரைவில், டாக்குமென்டை டவுன்லோடு செய்யாமல் அதனுள் இருப்பதை பார்க்கும் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாம். டாக்குமென்ட் ப்ரிவியூ என்ற ஆப்ஷன் மூலம் காட்டப்படும். இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் மெசேஜ்களில் டாக்குமெண்டுக்குள் என்ன இருக்கிறது என்பதை பிரிவியூ போல பார்க்க முடியும். இதன் மூலம், டாக்குமெண்ட் தேவைப்பட்டால் மட்டும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?: முக்கியமாக அது வீடியோ, போட்டோ அல்லது டெக்ஸ்ட் ஃபைலா என்பதை பயனர்கள் அறிந்து கொள்ள முடியும் என தெரிகிறது. வாட்ஸ் அப்பில் அடுத்து வரும் அப்டேட்கள் குறித்த விவரங்களை வெளியிடும் WA Beta Info இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அதுபோக நமது வாட்ஸ் அப்பில் உள்ள contacts-களில் நீண்ட நாள் சாட் செய்யாமல் இருக்கும் தொடர்புகளை பரிந்துரை செய்து காட்டும் ஆப்ஷன்களையும் வாட்ஸ் அப் பரிசோதித்து வருகிறதாம். எனினும், மேற்கண்ட வசதிகள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற விவரங்கள் வாட்ஸ் அப் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications