வாட்ஸ் அப் வெப்பிலும் ஆடியோ, வீடியோ கால் வசதி: மெட்டா நிறுவனம் சூப்பர் அப்டேட்
டெல்லி: வாட்ஸ் அப்பில் வீடியோ கால் ஆடியோ கால் பேசுவது போல் இனிமேல் வாட்ஸ் அப் வெப்பிலும் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. விண்டோஸ் அல்லது மேக் இயங்குதளத்தில் தனியாக செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டியது இல்லை என்றும் வரும் நாட்களில் இந்த அப்டேட் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
ஸ்மார்ட் பயன்படுத்தாதவர்களே இருக்கின்றவர்களை இன்றைய நவீன உலகில் விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. உள்ளங்கையில் உலகம் என்ற சொல்லை உண்மையில் ஸ்மார்ட் போன்கள் தான் உண்மையாக மாற்றியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

வாட்ஸ் அப் வசதிகள்
ஸ்மார்ட் போன்களில் வங்கி சேவைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் முதல் அனைத்தும் செய்யும் வசதிகள் வந்துவிட்டன. அதேபோல, ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலிகளில் ஒன்றாக இருப்பது வாட்ஸ் அப். கடந்த 2009 ஆம் ஆண்டு வாட்ஸ் மெசேஞ்சர் அறிமுகம் செய்யப்பட்டது.
2014 ஆம் ஆண்டு இந்த செயலியை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கைப்பற்றியது. அதன்பிறகு பல அப்டேட்களை வாட்ஸ் அப்பில் வெளியிடப்பட்டது. வெறும் குறுஞ்செய்தி மட்டும் இன்றி ஆடியோ, வீடியோ கால், கோப்புகள் பரிமாற்றம், இமேஜ்களை அனுப்பும் வசதி என வாட்ஸ் அப்பில் பல வசதிகள் அப்டேட் செய்யப்பட்டன.
புதுப்புது அப்டேட்களை செய்யும் வாட்ஸ் அப்
இதனால் வாட்ஸ் அப் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. வாட்ஸ்-அப் செயலியை சர்வதேச அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குரூப்கள் தொடங்கி அதில், மொத்தமாக தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவர்கள் மத்தியில் உள்ள தவிர்க்க முடியாத செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. பலரும் காலையில் முதலில் தூங்கி எழுந்ததும், செல்போனில் முதலில் பார்க்கும் செயலி வாட்ஸ் அப் ஆகத்தான் இருக்கும். பயனர்களை கவரும் விதமாக வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்பொது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
வாட்ஸ் அப் வெப்பிலும் வீடியோ கால்
அந்த வகையில் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு அப்டேட்டை வாட்ஸ் அப் வெளியிட உள்ளது. வாட்ஸ் அப்பை பொறுத்தவரை செல்போனில் பயன்படுத்துவது போல கணினிகளிலும் பயன்படுத்த முடியும். கணினிகளில் வாட்ஸ் அப் வெப் வாயிலாக பயன்படுத்த முடியும்.
வாட்ஸ் அப் வெப்பில் காலிங் மற்றும் வீடியோ காலிங் ஆகிய வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அந்த வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி, வாட்ஸ் அப் வெப் வழியாகவே பயனர்கள் நேரடியாக வீடியோ, ஆடியோ காலிங் வசதியை பயன்படுத்தலாம்.
எப்படி செயல்படும்?
விண்டோஸ் அல்லது மேக் இயங்குதளத்தில் தனியாக செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டியது இல்லை. வரும் நாட்களில் இந்த அப்டேட் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. புதிய அப்டேட்டின் படி தனிப்பட்ட உரையாடல்களின் மேல் பகுதியில் நேரடியாக வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்வதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும்.
இதை பயன்படுத்தி பயனர்கள் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும். டெஸ்க்டாப் செயலியில் உள்ள அதே ஆப்ஷனை போலவே இதுவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வாட்ஸ் அப்பில் உள்ள புதிய அப்டேட்களை டிராக் செய்யும் வா பீட்டா இதனை தெரிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications