அடடே புதுசா.. வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஃபார்வர்டு செய்யும்போது.. மெட்டா அறிமுகம் செய்யும் புதிய அம்சம்!
சென்னை: உலகெங்கிலும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட் வர இருக்கிறது. நாம் போட்டோ, வீடியோ போன்றவற்றை ஃபார்வர்டு செய்யும்போது கூடுதலாக டெக்ஸ்ட் சேர்த்து அனுப்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இந்த அம்சம் பீட்டா யூசர்களுக்கு வந்துள்ள நிலையில், விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.
வாட்ஸ்அப் செயலி தொடங்கப்பட்டது முதல் அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. முதலில் மெசேஜிங் தளமாக மட்டும் இருந்த வாட்ஸ் அப், குரூப் சாட், வாய்ஸ் கால், வீடியோ கால், ஸ்டோரி, யுபிஐ பேமெண்ட் வசதி என அடுத்தடுத்த டெக்னாலஜி அப்டேட்களால் பயனர்களை ஈர்த்து, தற்போது உலகின் முன்னணி மெசஞ்சர் தளமாக உள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் வாட்ஸ் அப், தற்போது, ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை ஃபார்வர்டு செய்யும்போது அதில் கூடுதல் தகவல்களை சேர்க்க முடியாது. ஒரு போட்டோவுடன் கேப்ஷன் இடம்பெற்றிருக்கும்போது, நாம் ஃபார்வர்டு செய்தால் போட்டோ மட்டுமே ஃபார்வர்டு ஆகும். இந்நிலையில், புதிய அம்சம் மூலம், அதனுடன் கூடுதல் தகவலை சேர்த்து ஃபார்வர்டு செய்யலாம். இந்த அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது.
வாட்ஸ் அப் யூசர்கள், எதையாவது ஃபார்வர்டு செய்யும் போது, அதை அனுப்பும் முன் கஸ்டமைஸ்டு செய்தியைச் சேர்ப்பதற்கான ஆப்ஷன் காட்டப்படும். நாம் ஏன் இந்த செய்தியை அனுப்புகிறோம் என மற்றவர்களுக்கு விளக்க விரும்பும்போது இந்த அம்சம் உதவிகரமாக இருக்கும்.
இதன் மூலம் வாட்ஸ் அப் யூசர்கள் தங்களுக்கு வந்த டெக்ஸ்ட் மெசேஜ், டாக்குமெண்ட்ஸ், வீடியோ, லிங்க் மற்றும் போட்டோக்களை பிற பயனர்களுக்கு ஃபார்வேர்ட் செய்யும் போது அதில் கூடுதல் விவரங்களை சேர்த்து அனுப்ப முடியும். இந்த தகவலை வாட்ஸ்அப் குறித்த அப்டேட்டை வழங்கி வரும் வாட்ஸ் அப் பீட்டா இன்ஃபோ பகிர்ந்துள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் இருப்பதாக தெரிவித்துள்ளது. விரைவில் அனைவருக்கும் பயன்பாட்டுக்கு வரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications