வாட்ஸ் அப்பில் யூசர் நேம் பதிவு பண்ணுங்க.. போன்நம்பர் இல்லாமலே சாட் பண்ணலாம்.. எப்படி? இதோ விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாட்ஸ் அப்பில் விரைவில் இன்ஸ்டாகிராம் போல யூசர்நேம் அம்சம் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம், உங்கள் தொலைபேசி எண்ணை பகிராமலேயே மற்றவர்களுடன் பேச முடியும். இது தனியுரிமையை மேலும் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய அம்சம் இருக்கும் என்பதால் பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப், பயனர்களை கவர புதுப்புது அப்டேட் வெளியிட்டு வருகிறது. குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமின்றி இமேஜ்கள், வீடியோக்கள், கோப்புகள், பணம் அனுப்பும் வசதி என வாட்ஸ் அப்பில் எண்ணற்ற சேவைகள் உள்ளன.

WhatsApp Username Feature Rolling Out 2026 Hide Your Phone Number For Better Privacy And Security

வாட்ஸ் அப்பில் யூசர் நேம் வசதி

வாட்ஸ் அப்பை பொறுத்தவரை தற்போது மொபைல் எண் பகிர்ந்தால் மட்டுமே இன்னொருவரை தொடர்பு கொள்ள முடியும். டெலிகிராமில் இருப்பது போல யூசர் நேம் வைத்தே வாட்ஸ் அப் காண்டாக்ட்களை தொடர்பு கொள்ளும் வசதி வருமா? என்று பயனர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இது பற்றிய அறிவிப்பை வாட்ஸ் அப் முன்பே வெளியிட்டது. ஆனாலும் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

வாட்ஸ் அப்பில் விரைவில் இன்ஸ்டாகிராம் போல யூசர்நேம் அம்சம் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம், உங்கள் தொலைபேசி எண்ணை பகிராமலேயே மற்றவர்களுடன் பேச முடியும். இது தனியுரிமையை மேலும் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய அம்சம் இருக்கும் என்பதால் பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த குணால் ஷா மெட்டாவின் வாட்ஸ்அப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப்பை ஒரு 'சூப்பர்ஆப்' ஆக மாற்றவும், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையில் அதன் பங்கை அதிகரிக்கவும் மெட்டா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அம்சமாகவே புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

யூசர் நேமில் என்ன மாறும்?

யூசர்நேம் அம்சம் வந்த பிறகு, உங்கள் தொலைபேசி எண் மற்றவர்களுக்கு தானாகத் தெரியாது.

* பெரிய குரூப் சாட்களில் நீங்கள் சேர்க்கப்படும்போது
* ஒருவருக்கு முதன்முறையாக மெசேஜ் அனுப்பும்போது

பயனர் விரும்பினால் மட்டுமே தொலைபேசி எண்ணை பகிரலாம். அதனால் எண் பாதுகாப்பாக இருக்கும்.

யூசர்நேம் அம்சம் எப்படி செயல்படும்?

தொலைபேசி எண்ணுக்கு பதிலாக பயன்படுத்த ஒரு தனிப்பட்ட யூசர் நேமை பயனர்கள் தேர்வு செய்யலாம்.

* யூசர்நேம் 3 முதல் 35 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும்.
* உங்களைத் தொடர்புகொள்ள விரும்பும் நபருக்கு உங்கள் சரியான யூசர்நேம் தெரிந்திருக்க வேண்டும்.
* இந்த அம்சம் வந்த பிறகு, ஒருவருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ முதன்முறையாக மெசேஜ் அனுப்பும்போது உங்கள் தொலைபேசி எண் தெரியாது.

யூசர்நேமை எப்படி பதிவு செய்வது?

வாட்ஸ்அப் வெர்ஷனின் புதிய அப்டேட் இருக்க வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

* செட்டிங்ஸ் (Settings)பகுதியில் அக்கவுண்ட் என்பதைத் தேர்வு செய்யவும். உங்கள் அக்கவுண்ட் என்ற ஆப்ஷனில் யூசர்நேம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், கிரியேட்டர்கள் மற்றும் அமைப்புகள், தங்களின் அதே யூசர்நேம்களை வாட்ஸ்அப்பிலும் பெற வாய்ப்பு வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பிரபலங்கள், பெரிய எண்ணிக்கையில் பாலோயர்களை வைத்து இருப்பவர்கள் நேரடியாக ஒருவரை தொடர்பு கொள்ள உதவும்.

யூசர் நேம் ரிசர்வ் எப்போது முதல்?

நடப்பு வாரம் முதல் பயனர்கள் தங்களுக்கான பயனர் பெயரை (Username) முன்பதிவு (Reserve) செய்யலாம்.
யூசர் நேம் வசதியுடன் சாட்டிங் செய்யக்கூடிய வசதி, இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்.
அடுத்த சில மாதங்களில், இந்த அம்சம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர் தளத்தை கொண்டிருப்பதால், முன்கூட்டியே பயனர்பெயரை முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+