இப்படியொரு வசதியா.. வேற லெவலில் மாறும் வாட்ஸ் அப்.. வரப்போகும் அசத்தலான அப்டேட்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடும் போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் காண்பிக்கும் படி டேக் செய்து அனுப்புவது போல் இனி வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ் போடும் புது வசதியை வாட்ஸ் அப் அறிமுக செய்ய இருக்கிறதாம்.
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு மக்களிடையே போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதேபோல், ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தாத பயனர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு வாட்ஸ் அப் மொபைல் போன் பயனர்கள் மத்தியில் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

உலகம் முழுவதும் சுமார் 3 பில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ்அப் கடந்த 2009-இல் உருவாக்கப்பட்ட நிலையில், அதைக் கடந்த 2014-இல் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதன் பிறகு வாட்ஸ்அப்பில் பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்களை கொடுத்து திகைக்க வைத்தது. குறிப்பாக போட்டிகளை சமாளிக்கவும் பயனர்களுக்கு அவ்வப்போது அப்டேட்களை வழங்கிக்கொண்டே இருக்கிறது வாட்ஸ் அப்.
வாட்ஸ் அப் ஸ்டே்டஸ்: துவக்கத்தில் வெறும் மெசேஜ் மட்டுமே அனுப்ப முடியும் என்று இருந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் கால், வீடியோ கால், ஸ்டேடஸ், வாய்ஸ் மெசேஜ் என அடுத்தடுத்து பயனர்களுக்கு பல வசதிகளை அள்ளிக்கொடுத்தது. பயனாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் வருவாயை அதிகரிக்கவும் பேஸ்புக் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், சமீப காலமாகவே அவ்வப்போது புதுப் புது அப்டேட்கள் வாட்ஸ்அப்பில் வந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் தளத்தில் பல முக்கிய அப்டேட்கள் வெளியாகி வருகிறது. தற்போது ஸ்டேட்டஸ் வைக்கும் போது குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராமில் நாம் ஒரு ஸ்டோரீஸ் வைக்கிறோம் என்றால் அதில் நமக்கு தெரிந்தவர்களை டேக் செய்து அதாவது மென்ஷன் செய்து வைக்க முடியும்.
குறிப்பிட்ட நபருக்கு: இதே வசதியைத்தான் தற்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டசிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா நிறுவனம். ஸ்டேட்டசில் ஒரு குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்து ஸ்டேட்ஸ் வைக்கும்போது, நோட்டிபிகேஷன் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும். வாட்ஸ் அப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் அப்டேட்கள் குறித்து முன்கூட்டியே தகவலை கசிய விடும் WABetaInfo - இந்த தகவலை தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் ஸ்டேசில் ஒருவரை மென்ஷன் செய்து வைத்தால் அடுத்த நொடியே சம்பந்தப்பட்ட நபருக்கு அலர்ட் கிடைக்கும். பயனர்களுக்கு இடையேயான கம்யூனிகேஷனை அதிகப்படுத்தும் விதமாக வாட்ஸ் அப் இந்த வசதியை கொண்டு வர இருக்கிறது. வாட்ஸ் அப்பின் இந்த புதிய வசதி லேட்டஸ்ட் வெர்ஷனில் கிடைக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications