ஏர்டெல் vs ஜியோ.. குறைந்த விலையில் அன்லிமிடெட் 5ஜி.. இரண்டில் எது பெஸ்ட்! ரிசல்ட் சப்ர்ரைஸ் தான்
டெல்லி: ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தைச் சமீபத்தில் தான் 25% வரை உயர்த்தின. இது மட்டுமின்றி அன்லிமிடெட் 5ஜி சேவைக்கும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. தற்போதுள்ள புதிய பிளான்களில் அன்லிமிடெட் 5ஜி வசதியைக் கொண்ட மிக மலிவான திட்டம் எதில் இருக்கிறது. இதில் ஏர்டெல், ஜியோ இரண்டில் எது பெஸ்ட் என்பதை நாம் பார்க்கலாம்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் உள்ளிட்ட பல்வேறு இந்திய டெலிகாம் நிறுவனங்களும் சமீபத்தில் தான் தங்கள் மொபைல் கட்டணத்தை உயர்த்தின. கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி முதல் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வந்தன.

அனைத்து மொபைல் கட்டணங்களும் சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்தன. ப்ரீபெய்ட் மட்டுமின்றி போஸ்ட்பெய்ட் திட்டங்களும் காஸ்டிலியாக மாறி இருக்கிறது.
டெலிகாம் நிறுவனங்கள்: ஒவ்வொரு பயனாளரிடம் இருந்தும் டெலிகாம் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் தொகை ARPU என்று அழைக்கப்படுகிறது. இந்த ARPU இன்னுமே குறைவாகவே இருப்பதாகவும் அதை அதிகரிக்கவே இந்த கட்டண உயர்வை அறிவித்ததாகவும் டெலிகாம் நிறுவனங்கள் தெரிவித்தன.
இது ஒரு பக்கம் இருக்க.. இதற்கு முன்பு டெலிகாம் நிறுவனங்கள் கிட்டதட்ட அனைத்து பிளான்களிலும் அன்லிமிடெட் 5G சேவையை வழங்கி இருந்தன. இதனால் பலரும் அந்த குறிப்பிட்ட தொகைக்கு ரீச்சார்ஜ் செய்துவிட்டு இலவச 5ஜி சேவையைப் பயன்படுத்தினார்கள். ஆனால், இந்த விலையுயர்வுக்குப் பின்னர் தினசரி 2ஜிபி டேட்டா அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் ரீச்சார்ஜ் செய்வோருக்கு மட்டுமே 5ஜி இலவசம் என அறிவித்துள்ளன. சரி இரு நிறுவனங்களிலும் இப்போது ஃப்ரீ 5ஜி சேவையைப் பயன்படுத்தும் திட்டம் எவை.. இரண்டில் எது பெஸ்ட் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.
ஜியோ: முதலில் ரிலையன்ஸ் ஜியோ.. ஜியோவின் குறைந்தபட்ச 5ஜி திட்டம் என்றால் அது ரூ.349 பிளான் தான். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இதில் 56GB டேட்டா நமக்குக் கிடைக்கும்.. தினசரி 2 ஜிபி இந்த அதிவேக 4ஜி சேவையைப் பயன்படுத்த முடியும். அதன் பிறகு வேகம் 64 Kbps ஆக குறைந்துவிடும். ஆனால், இந்தத் திட்டத்தில் 5ஜி சேவை நமக்கு எப்போதும் இலவசம் தான். 2 ஜிபி லிமிட் முடிந்தாலும் சரி, முடியாவிட்டாலும் சரி அன்லிமிடெட் 5ஜியை நாம் பயன்படுத்தலாம்.
டேட்டா மட்டுமின்றி அன்லிமிடெட் கால், தினசரி 100 எஸ்எம்எஸ்களும் இதில் கிடைக்கும்.. இது தவிர வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ க்ளவுட் உள்ளிட்ட சேவைகளையும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம் ஜியோசினிமா செயலியில் ஜியோ சினிமா ப்ரீமியம் இத்திட்டத்தின் கீழ் வராது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏர்டெல்: அடுத்து ஏர்டெல்.. இந்த நிறுவனத்திலும் குறைந்தபட்ச 5ஜி திட்டம் என்றால் அது ரூ.349க்கு இருக்கும் பிளான் தான்.. இந்த திட்டம் 28 மாதம் செல்லுபடியாகும்.. இதில் நமக்குத் தினசரி 2ஜி என்ற அளவில் 60 ஜிபி அதிவேக 4ஜி சேவை கிடைக்கும். வழக்கம் போல இந்த 2ஜிபி கோட்டா முடிந்தால் வேகம் 64 Kbps ஆக குறைந்துவிடும். அதேநேரம் அன்லிமிடெட் 5ஜி எப்போதும் இலவசம் தான். 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
இது தவிர அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமும் இதில் வரும். இவை தவிர இலவச ஹெலோட்யூன் வசதி, ஏர்டெல்லின் Wynkஇல் இலவசமாக நாம் பயன்படுத்தலாம்.
எது பெஸ்ட்: இரண்டும் ஒரே கட்டணம் தான் என்ற போதிலும் ஜியோவில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ க்ளவுட் உள்ளிட்டவை இலவசமாக இருக்கிறது. எனவே, அதை வைத்துப் பார்க்கும் போது ஜியோ தான் பெஸ்ட் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications