இன்னும் 2 நாள் தான்..ஆப்பிள் செய்யப் போகும் அசத்தல் சம்பவம்! ‘இந்த’ மாடல் ஐபோன் இருந்தா ஜாலியோ ஜாலி!
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்பிள் 16 சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஏர் பாட்ஸ், வாட்ச் உள்ளிட்டவட்டை அறிமுகப்படுத்திய ஆப்பிள், வரும் 16ஆம் தேதி ஐஓஎஸ் 18 என்ற புதிய ஓஎஸ்ஐ அறிமுகப்படுத்துகிறது. குறிப்பிட்ட மாடல் ஐபோன்களை வைத்திருப்பவர்கள் இந்த ஐஓஎஸ்ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். எந்த மாடல் ஐபோன்களுக்கு இந்த அப்டேட் பொருந்தும் என்பது குறித்து பார்க்கலாம்..
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இந்த நிகழ்வில் ஐபோன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் வாட்ச், ஏர் பட்ஸ், ஐஓஎஸ் ஏ 18 உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது.

இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கியது. ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் இணைய தளத்தில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கலிபோர்னியாவின் குபர்ட்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வெளியானது. ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஐபோன் 15 ஃபோன்கள் வெளியான நிலையில் தற்போது ஐபோன் 16 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சாட் ஜிபிடி,google-ன் ஜெமினி,சாம்சங் ஏஐ உள்ளிட்ட பல ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மென்பொருள்கள் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எப்படி இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கும் விடையளித்த ஆப்பிள், வரும் 16ஆம் தேதி ஐஓஎஸ் 18 என்ற புதிய ஓஎஸ்ஐ அறிமுகப்படுத்துகிறது. குறிப்பிட்ட மாடல் ஐபோன்களை வைத்திருப்பவர்கள் இந்த ஐஓஎஸ்ஐ அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் சிரி அசிண்டெண்டுக்கு பதிலாக ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உடன் இந்த ios வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் அப்ளிகேஷன் அல்லது விட்ஜெட்டுகளை ஹோமில் நாம் சேவ் செய்து கொள்ள வைக்க முடியும். மேலும் ஐபோன் ஐகான்களையும் மாற்றிக் கொள்ளலாம்.
ஏற்கனவே ஐபோன் மாடல்களை வைத்திருப்பவர்களும் அப்டேட் மூலம் இந்த ஐஓஎஸ் 18ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது ஹோம் பட்டனை அழுத்தும் போது ஆப்பிள் சிரி கிராபிக்ஸ் உடன் உருவாவது போல திரையின் ஓரத்தில் ஆப்பிள் இட்டலிஜென்ஸ் புதுவித கிராபிக் உடன் ஆக்டிவேட் ஆகும். ஏற்கனவே சிரியின் குரல் இயந்திரத்தனமாக இருக்கும் நிலையில் தற்போது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உயிரோடு இருக்கும் மனிதன் பேசுவது போலவே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த ஐஓஎஸ் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மூலமாக புகைப்படங்களை எப்படி வேண்டுமானாலும் நாம் உருவாக்கலாம். உதாரணத்திற்கு சட்டையின் கலரை சிகப்பாக மாற்ற வேண்டும், தலைமுடி கருப்பாக இருக்க வேண்டும், பின்னால் இருக்கும் பறவையை அகற்ற வேண்டு,ம் ஆட்டோ பிரேம் வேண்டும் என டைப் செய்தாலே அதற்கு ஏற்றார் போல படங்களை மாற்றிக் கொள்ள முடியும். இந்த நிலையில் ஏற்கனவே ஐபோன் வைத்திருப்பவர்கள் இந்த அப்டேட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட மாடல்கள் மட்டுமே ஐஓஎஸ் 18 அப்டேட்டை பெற முடியும்.. அவை எந்தெந்த மாடல் ஐ-போன்கள் என்று பார்க்கலாம்..
ஐபோன் 15 , ஐபோன் 15 பிளஸ் , ஐபோன் 15 ப்ரோ , ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் , ஐபோன் 14 , ஐபோன் 14 பிளஸ் , ஐபோன் 14 ப்ரோ , ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் , ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, ஐபோன் SE - 2ஆம் தலைமுறை மற்றும் அதற்கு பிந்தைய மாடல்களில் ஐஓஎஸ் 18ஐ அப்டேட் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications