"அதிவேக 5ஜி.." அமெரிக்காவும் இல்லை, பிரிட்டனும் இல்லை.. முதலிடத்தில் சர்ப்ரைஸ்.. அப்போ இந்தியா எங்கே
டெல்லி: உலகளவில் 5ஜி வேகத்தில் எந்த நாடு டாப் இடத்தில் இருக்கிறது. இந்த லிஸ்டில் இந்தியா எங்கே இருக்கிறது என்பது குறித்து ஓக்லா டெஸ்டிங் நிறுவனம் புதிய லிஸ்டை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவை தொடர்ந்து விரிவடைந்தே வருகிறது. இதன் மூலம் அனைத்து தரப்பினராலும் அதிவேக இணையத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.

இணைய வேகம்: இதற்கிடையே பிரபல இணைய வேக டெஸ்டிங் தளமான ஓக்லா சர்வதேச அளவில் எந்த நாட்டில் எத்தனை வேகத்தில் 5ஜி சேவை கிடைக்கிறது என்பது குறித்த சர்வே முடிவை வெளியிட்டு இருந்தது. அதில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது எனப் பார்க்கும் முன்பு இந்தியாவில் உள்ள 5ஜி குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதலில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் முக்கிய நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே இந்தியாவின் 5ஜி சேவை தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. இப்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவை வந்துவிட்டது.
அதீத வேகம்: நமது நாட்டில் இப்போது 5ஜி வேகம் என்பது சராசரியாக 301 Mbps ஆக இருக்கிறது. மேலும், நாட்டின் 50 சதவிகிதத்திற்கு அதிகமான இடங்களில் 5ஜி சேவை கிடைப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 4ஜி சேவையில் நமது நாட்டில் வெறும் 16.05 Mbps வேகத்திலேயே இணையச் சேவை இருந்த நிலையில் 5இல் இணைய வேகம் 18 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல டேட்டா பதிவேற்றம் என வரும் போது 4ஜியை விட 6 மடங்கு வேகமாக இருக்கிறது.
யார் முதலிடம்: சரி விஷயத்திற்கு வருவோம். எந்த நாட்டில் 5ஜி இணையச் சேவை வேகமாக இருக்கிறது. அதில் இந்தியா எங்கே இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம். நாம் பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் தான் இதில் டாப்பில் வரும் என நினைப்போம். ஆனால், அவை டாப் 10 இடங்களில் கூட வரவில்லை என்பதே உண்மை. இந்த லிஸ்டில் ஐக்கிய அமீரகம் தான் அதிவேக இணைய சேவையைக் கொண்ட நாடாக இருக்கிறது.
இந்தியா எங்கே: அதைத் தொடர்ந்து கத்தார், தென்கொரியா ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களில் வருகிறது. மலேசியா 4ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், பிரேசில் 5வது இடத்திலும் டொமினிக்கன் குடியரசு 6ஆவது இடத்திலும் இருக்கிறது. பஹ்ரைன், குவைத், மக்காவ், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் டாப் 10 லிஸ்டில் வருகிறது. தொடர்ந்து சவூதி அரேபியா, நியூசிலாந்து, பல்கேரியா வரும் நிலையில், இந்த லிஸ்டில் 14ஆவது இடத்தை தான் இந்தியா பிடித்துள்ளது.
நீங்கள் அதிக 5G சராசரி வேகத்தைப் பெற்றால், வீடியோ ஸ்ட்ரீமிங் வேகமாக இருக்கும். இந்தியாவில் 5ஜி வந்த பிறகே வீடியோ ஸ்டீரீம் அதிகரித்துள்ளது. மேலும், ஆன்லைன் கேம்களும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 4ஜி சேவையில் ஒரு வீடியோ ப்ளே ஆக 1.99 நொடிகள் ஆனது. அதேநேரம் 5ஜி சேவையில் இது 1.14 நொடிகளாகக் குறைந்துள்ளதாம். 5G நெட்வொர்க்கில் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மக்களால் இணையத்தைப் பயன்படுத்த முடிவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications