வாசல் வரை சூப்பரா இருக்கு.. ஆனா வீட்டிற்குள் வந்தவுடன் 5ஜி இன்டர்நெட் படுமோசமா இருக்கே ஏன்!
மும்பை: 5ஜி இணைய வேகம் வீட்டிற்கு வெளியே அதிவேகமாக இருந்தாலும் வீட்டிற்குள் வேகமாக இருக்காது. நம்மில் பலரும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டு இருப்போம். வீட்டு வாசல் வரை நல்ல வேகத்தில் இருக்கும் 5ஜி வீட்டிற்குள் வந்தவுடன் மட்டும் மெதுவாக மாறுவது ஏன்! இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் செல்போன் மூலமாகவே இணையத்தை அணுகுகிறார்கள். பைபர் மூலம் இணையச் சேவை எல்லாம் நகர்ப்புறங்களில் மட்டும் கிடைக்கும். இதர பகுதிகளில் இப்போதும் செல்போன் இன்டர்நெட் தான் கிங்.

5ஜி சேவை:
குறிப்பாக ஜியோவின் வருகை தான் செல்போன் கட்டணங்கள் குறையக் காரணமாக இருந்தது. இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் அதிவேக இணையத்தைப் பயன்படுத்த முடிந்தது. அடுத்த கட்டமாக இப்போது நமது நாட்டில் 5ஜி மெல்ல விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. முதலில் சென்னை, பெங்களூர் என முக்கிய நகரங்களில் மட்டுமே 5ஜி இணைய வேகம் இருந்த நிலையில், இப்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு 5ஜி இணைய வசதி இருக்கிறது.
வீட்டு வாசல் வரை:
செல்போனில் 5ஜி டேட்டா யூஸ் செய்யும் அனைவரும் ஒரு விஷயத்தை எதிர்கொண்டு இருப்போம். அதாவது வீட்டிற்கு வெளியே இருக்கும் போதெல்லாம் 5ஜி டேட்டா வேகமாகவே இருக்கும். ஆனால், வீட்டிற்குள் வந்த உடனே அது மெதுவாகிவிடும். பெரும்பாலானோருக்கு வீட்டில் எங்குச் சென்றாலும் இதே நிலைதான். வீட்டு வாசல்ல நல்லா கிடைக்குது.. ஆனா உள்ளே 5ஜி கிடைப்பதில்லை என நண்பர் புலம்பி நாம் கேள்விப்பட்டு இருக்கும்.
இது நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சினை தான். இதற்கு உங்கள் வீடோ அல்லது செல்போனோ பெரியளவில் காரணமில்லை. இந்த 5ஜி தொழில்நுட்பமே பிரதான காரணம். அதாவது 5ஜி என்பது ஹை ப்ரிக்வன்சி (high-frequency) மூலம் இயங்கக்கூடியது. இந்த ஹை ப்ரீக்வன்சியால் சுவர்கள் உட்படத் தடிமனான பொருட்களில் ஊடுருவிச் செல்ல முடியாது. இதன் காரணமாகவே வீட்டிற்குள் சிக்னல் மெதுவாக இருக்கிறது. 4ஜி சிக்னல்கள் 5ஜி அளவுக்கு ஹை ப்ரீக்வன்சியை கொண்டிருக்காது. இதன் காரணமாகவே 4ஜி இன்டர்நெட் வீட்டிற்குள்ளும் எளிதாகக் கிடைக்கும். ஆனால் 5ஜி கிடைக்காது.
என்ன காரணம்:
அதாவது எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் 4ஜி சிக்னல் சற்று பெரிதாக இருக்கும். அதனால் நீண்ட தூரத்திற்குச் செல்ல முடியும். ஆனால், இணைய வேகம் குறைவாக இருக்கும். 5ஜி சிக்னல் குறுகியதாக இருக்கும். இது அதிவேக இணையத்தைத் தரும் என்றாலும் நீண்ட தூரத்திற்குச் செல்ல முடியாது. இதுவே சிக்கலுக்கு காரணமாகும்.
எப்படி சமாளிக்கலாம்:
இதன் காரணமாகவே நீங்கள் புது செல்போன் வாங்கி வந்தாலும் வீட்டிற்குள் சென்றாலும் உள்ளே 5ஜி அந்தளவுக்கு வேகமாக இருக்காது. முடிந்தவரை வீட்டில் சற்று ஓபன் ஸ்பேஸிற்கு (கதவு, ஜன்னல் போல) அருகே செல்லுங்கள். அப்போது இணைய வேகம் ஓரளவுக்கு வேகமாக இருக்கும்.
அதெல்லாம் கஷ்டம், வாய்ப்பில்லை என்றால் வீட்டில் பைஃபர் இணையச் சேவை எடுப்பது மட்டுமே ஒரே தீர்வு. மேலும், 5ஜி போன்ற ஒயர்லெஸ் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் ஒயர் மூலம் சேவை கிடைக்கும் பைபரில் டேட்டா வேகமாகவே கிடைக்கும்.












Click it and Unblock the Notifications