பிக்பில்லியன், கிரேட் இந்தியன் ஆஃபரில்.. ஐபோன் 14 வாங்க போறீங்களா? நடுங்கி போன மக்கள்.. கதறல்!
சென்னை: அமேசானில் தற்போது கிரேட் இந்தியன் சேல் தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் பிக் பில்லியன் டே சேல் பிளிப்கார்டில் தொடங்கி உள்ளது. இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுகொண்டு பொருட்களை விற்று வருகிறார்கள்.
இரண்டு பக்கமும் பொருட்கள் எக்கச்சக்கமாக விற்பனை ஆகி வருகிறது. மக்கள் பல பொருட்களை ஆர்வமாக வாங்கி வருகிறார்கள். பொருட்கள் மீது 10 - 20 சதவிகிதம் வரை சலுகை. கூடுதலாக வங்கி மூலம் கொடுக்கப்படும் கிரெடிட் கார்ட் சலுகை என்று பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இதோடு கூடுதலாக போன் எக்சேஞ்ச் செய்யும் பட்சத்தில் பணம் வெகுவாக குறைகிறது. உதாரணமாக iPhone 14 128 GB வகைக்கு ₹69,900 விலையிலும், 256 GB வகைக்கு ₹79,900 மற்றும் 512 GB வகைக்கு ₹99,900 விலையிலும் கிடைக்கிறது. இதற்கிடையில், ஐபோன் 14 பிளஸ் 128 ஜிபி வகைக்கு ₹79,990, 256 ஜிபி வகைக்கு ₹89,990 மற்றும் 512 ஜிபி வகைக்கு ₹1,09,990 கிடைக்கிறது.
அதே சமயம் அமேசானில் இதன் விலை மேலும் தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. அமேசானில் இதன் விலை தற்போது 62,999 ஆக குறைத்துள்ளது. பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டே சலுகையில் இதன் விலை 56,999 ஆக உள்ளது.

கூடுதலாக வங்கி சலுகை 4 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. அது போக 20 ஆயிரம் வரை கூட போன் மாற்று சலுகை வழங்கப்படுகிறது. அதாவது எக்சேஞ்ச் சலுகை அளிக்கப்படுகிறது. மொத்தத்தில் பார்த்தால் 25 ஆயிரம் ரூபாய்க்கு கூட இந்த போனை எடுக்க முடியும். அமேசானில் இதுவரை விலை iPhone 14 128 GB வகைக்கு விலை குறைக்கப்படவில்லை.
( ஆஹா.. ஜாக்பாட் மேலும் மேலும் குறைந்தது ஐபோன் 14 விலை.. ஐபோன் 15 ரிலீசால் அமேசான் சூப்பர் ஆஃபர் )
கதறும் மக்கள்; ஆனால் iPhone 14 128 GB வகை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது 14ல் வேறு வகை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக கடுமையாக அவதிக்கு உள்ளாவார்கள். ஏற்கனவே வாங்கிய பலர் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். என்ன நடந்தது?
- முதல் விஷயம் அமேசானில் iPhone 14 128 GB வகை இல்லை. அது ஸ்டாக் இல்லை. iPhone 14ன் மற்ற வகை முதலில் ஸ்டாக் இருந்தது.. இப்போது எதுவும் இப்போது ஸ்டாக் இல்லை. எல்லாமே ப்ரீ புக்கிங் மட்டுமே உள்ளது.
- பிளிப்கார்ட்டில் வழங்கப்பட்டு உள்ள ஆபர் அவ்வளவு பெரிய iPhone 14 128 GB வகைக்கு ஆபர் கிடையாது.
- பிளிப்கார்ட்டில் iPhone 14 128 GB வகை ஆர்டர் செய்த பலருக்கு அவர்களுக்கு டெலிவரி வழங்கப்படுவதே இல்லை. டெலிவரி ஆகும் முன் ஸ்டாக் இல்லை என்று கேன்சல் ஆகிவிடுகிறது.
- இவர்களுக்கு ரீபண்ட் கிடைக்க ஒரு வாரம் ஆகும் என்பதால் புதிய போன் வாங்குவதில் சிக்கல் உள்ளது. இதை நெட்டிசன்கள் பலர் இணையத்தில் புகாராக வைத்து உள்ளனர்.
- தற்போதைய நிலைக்கு iPhone 13 128 GB வகை வாங்குவதே சிறந்தது. ஆனால் அதையும் கூட பலர் விரும்புவதாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications