"சாம்சங்" மொபைலில் இருக்கும் பெரிய ஆபத்து.. லிஸ்ட் போட்டு எச்சரித்த மத்திய அரசு.. என்ன மேட்டர்
வாஷிங்டன்: சாம்சங் மொபைல்களில் இருக்கும் முக்கியமான பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய அரசின் வல்லுநர் குழு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த ஆபத்துகளை சாம்சங் மொபைலை எளிதாக ஹேக் செய்யும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
மொபைல்கள் என்பது இந்தக் காலத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருக்கிறது. எங்கே சென்றாலும் பர்ஸை மறந்தாலும் கூட தப்பித் தவறியும் யாரும் செல்போனை மறப்பதில்லை.

போட்டோ எடுப்பது முதல் பணம் எடுப்பது வரை அனைத்திற்கும் இப்போது நமக்கு செல்போன் தேவைப்படுகிறது. இதனால் செல்போன்களில் இருக்கும் ஆபத்துகள் குறித்தும் நாம் கவனமுடன் இருக்க வேண்டி உள்ளது.
வல்லுநர்கள்: ஏனென்றால் செல்போன்களை ஹேக் செய்தால் அதில் இருக்கும் தகவல்களை எளிதாக எடுத்துவிட முடியும். வல்லுநர்கள் பலரும் ஆபத்துகள் குறித்துத் தொடர்ந்து எச்சரிப்பார்கள். அப்படி தொழில்நுட்பங்களில் இருக்கும் ஆபத்துகள் குறித்துக் கண்டறிந்து கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியா (CERT-In) என்ற அமைப்பு எச்சரிக்கை விடுக்கும். இப்போது இந்த அமைப்பு சாம்சங் மொபைலில் இருக்கும் சிக்கல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்,
சாம்சங் மொபைலில் இருக்கும் ஆன்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 வெர்ஷன்களில் இந்த முக்கியமான பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இதை ஆபத்தை CIVN-2023-0360 என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பாதிப்புகள் இதை ஈஸியாக ஹேக் செய்யக் கூடிய ஒன்றாக மாற்றுவதால் இதை ஹை ரிஸ்க் ஆபத்து என்று அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
சாம்சங்: இந்த சிக்கல் சாம்சங் மொபைலில் குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்,.. இந்த குறைபாடு காரணமாக ஹேக்கர்களால் சாம்சங் மொபைலில் இருக்கும் பாதுகாப்பு அம்சத்தை பைபாஸ் செய்துவிட்டு,, முக்கியமான தகவல்களை அணுக முடிகிறது. இதனால் மொபைலை தாண்டி சாம்சங் எக்கோ சிஸ்டத்தில் பல கருவிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சாம்சங் மொபைலில் இருக்கும் 8 ஆபத்துகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். இந்த ஆபத்துகளால் மொபைலை எளிதாக ஹேக் செய்ய முடிகிறது. இதன் மூலம் மொபைலின் முக்கிய கன்டிரோல்கள் அனைத்தும் ஹேக்கர்கள் வசம் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. இந்த ஆபத்துகள் கேலக்ஸி எஸ் 23 சீரியஸ், கேலக்ஸி ப்ளிப் 5, கேலக்ஸி ஃபோல்ட் 5 உட்பட பல சாம்சங் மொபைல்களில் கண்டறியப்படுவதாகவும் எச்சரித்துள்ளனர்.
சரி செய்வது எப்படி: மேலும், இதில் இருக்கும் ஆபத்துகளைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். முதலில் மொபைலில் இருக்கும் செக்யூரிட்டி அப்டேட்களை உடனடியாக செய்யவும். உங்கள் மொபைலில் Settings > Software update > Download and install என்ற இடத்தில் சென்று அப்டேட் செய்யவும்.
அப்டேட் வரும் வரை மொபைலை ரொம்பவே கவனமாகப் பயன்படுத்தவும். முன் பின் அறியாத நபர்களிடம் செல்போன்களை கொடுக்க வேண்டாம். தெரியாத லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம். அதேபோல செல்போனில் இருக்கும் அனைத்து செயலிகளையும் அப்டேட் செய்யவும்.. புதிதாக எதாவது செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யவும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications