Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛செம மாஸ்’’ கூகுளையே மிரளவிடும் DuckDuckGo.. என்ன ஸ்பெஷல்.. ஏன் மக்கள் ஓடுறாங்க.. 5 காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உளவு பார்க்கும் ஆன்லைன் டிராக்கர்கள் பிரச்சனைக்கு மத்தியில் கூகுளுக்கு மாற்றாக டக்டக்கோ- தேடுபொறியை அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் கூகுளுக்கு பதில் டக்டக்கோ பயன்படுத்துவதால் கிடைக்கும் 5 பலன்கள் குறித்த முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.

இன்றைய சூழலில் உள்ளங்கையிலேயே ஒட்டுமொத்த உலகமே அடங்கிவிட்டது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தபடியே உலகில் நடக்கும் எந்த விஷயங்களை வேண்டுமானாலும் செல்போன், மடிக்கணினி மூலம் அறிந்து கொள்கிறோம்.

 Why should use DuckDuckGo Instead of Google? 5 reasons here

நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத பல விஷயங்களையும், திடீரென எழும் சந்தேகங்களையும் நாம் உடனே தேடி தெரிந்து கொள்வதற்கு இணையதளம் உதவி வருகிறது. இந்த இணைய உலகில் பல தேடிபொறிகள் (Search Engine) உள்ளன.

இதில் முதன்மையாக இருப்பது என்றால் கூகுள். பல தேடிபொறிகள் பயன்பாட்டில் இருந்தாலும் கூட மக்கள் அதிகம் பயன்படுத்தும் தேடிபொறியாக கூகுள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கூகுள் பயன்படுத்த மிகவும் எளிமையானதாகவும், வேகமாகவும் செயல்படுவது தான். இப்படி யூசர் ப்ரண்ட்லியாக இருக்கும் கூகுள் தான் தற்போது இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் தான் நாம் இணையதளங்களில் தேடும் விஷயங்களை கூகுள் டிராக் செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனை கூகுள் மறுக்கிறது. ஆனால் நாம் அடிக்கடி கூகுளில் அரசியல், விளையாட்டுகள் குறித்த விஷயங்களை பற்றி தேடுகிறோம் என்றால் அதுதொடர்பான புதிய விஷயங்களை கூகுள் நமக்கு பரிந்துரை செய்கிறது. இது கூகுள் உள்ளிட்டவை நம்மை டிராக் செய்வதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

இத்தகைய சூழலில் தான் கூகுளுக்கு போட்டியாக இணைய உலகில் அறிமுகமாகி நடைமுறையில் இருக்கும் ஒரு தேடிபொறி தான் டக்டக்கோ (DuckDuckGo). உண்மையிலேயே தற்போது பலரும் இந்த டக்டக்கோவை பயன்படுத்தி வருகின்றனர். இது செல்போன், ஐபோன், லேப்டாப் உள்ளிட்ட அனைத்திலும் பயன்படுத்த கூடிய ஒன்றாக இருப்பதால் இன்றைய சூழலில் டக்டக்கோ-வை நிறைய பேர் கூகுளுக்கு மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் கூகுளுக்கு மாற்றாக டக்டக்கோ-வை பயன்படுத்துவதன் பின்னணியில் உள்ள 5 முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

டிராக்கர்கள் இல்லை: பொதுவாக ஆன்லைன் டிராக்குகள் இணையதளத்தில் அனைத்து இடங்களிலும் உள்ளன. இதற்கு கூகுளும் விதிவிலக்கல்ல. ஆனால் டக்டக்கோ தேடிபொறியை பயன்படுத்தும்போது அது ஆன்லைன் டிராக்கர்கள் மூலம் பயனாளர்களை கண்காணிப்பது இல்லை. Princeton's Web Transparency and Accountability Project ஆய்வில் கூகுள் டிராக்கர்கள் என்பது 75 சதவீத இணையதளங்களிலும், பேஸ்புக் டிராக்கர்கள் 25 சதவீத இணையதளங்களில் உள்ளது என தெரிவித்துள்ளது. இந்த டிராக்கர்கள், இணையதள தேடல்கள் உள்ளிட்டவற்றின் மூலம் நமது ஆர்வங்களை அறிந்து அதுகுறித்த விஷயங்களை நமக்கு பரிந்துரை செய்கின்றன. ஆனால் டக்டக்கோ அப்படியில்லை. ஆன்லைன் டிராக்கர்கள் டக்டக்கோ-வில் இல்லை.

குறைந்த விளம்பரங்கள்: கூகுளை பொதுவாக நாம் பயன்படுத்தும்போது அதில் பல விளம்பரங்கள் வரும். இது நம்மை முகம் சுளிக்க செய்யலாம். விளம்பரங்கள் தான் பொதுவாக இணையதள தேடிபொறிகளுக்கு வருமானம் என்றாலும் கூட அதிகப்படியான விளம்பரங்கள் என்பது நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். இதனை நாம் பலமுறை சந்தித்து இருக்கலாம். ஆனால் டக்டக்கோ-வில் கூகுளை ஒப்பிடும்போது குறைந்த அளவிலான விளம்பரங்கள் மட்டுமே காட்டப்படுகிறது.

இணையதள வேகம்: மேலும் அதிகப்படியான விளம்பரங்கள் இல்லாதது மற்றும் ஆன்லைன் டிராக்கர்களால் வரும் பரிந்துரைகள் இல்லாதது உள்ளிட்டவற்றால் டக்டக்கோ தேடிபொறி வேகமாக இயங்கிறது. அதாவது குறிப்பிட்ட ஒரு விஷயத்தை நாம் இணையதளத்தில் தேடும்போது அதற்கான ரிசல்ட் என்பது வேகமாக நம்மை சேரும். இதனால் நமக்கு நேரம் மிச்சமாகும்.

ஹிஸ்ட்ரி இல்லை: பொதுவாக நாம் கூகுளில் தேடும் விஷயங்கள் ஹிஸ்டரியாக சேமித்து வைக்கப்படும். செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றில் கூகுள் ஹிஸ்டரி நடைமுறையில் உள்ளது. இதனால் நமது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரை மற்றவர்கள் பயன்படுத்தும்போது நமது இணையதள தேடல் குறித்த விபரங்களை அவர்கள் அறிந்து கொள்ள முடியும். ஆனால் டக்டக்கோ-வில் ஹிஸ்டரியை சேவ் செய்யும் வசதி இல்லை. இதனால் நமது தனிப்பட்ட இணையதள தேடல் விபரங்களை பிறரால் அறிந்து கொள்ள முடியாது.

நிறைய ஆப்ஷன்: மேலும் கூகுளை பொறுத்தமட்டில் நாம் தேடும் விஷயங்களை வடிக்கட்டி நமக்கு அளிக்கும். ஆனால் டக்டக்கோ அப்படியில்லை. நாம் தேடும் விஷயங்கள் குறித்த அனைத்து விஷயங்களையும் நமக்கு வழங்கி வருகிறது. உதாரணமாக நாம் காபி என்று கூகுளில் தேடினால் அருகே உள்ள காபிஷாப் பெயர்கள், காபியின் நன்மைகள், தீமைகள், காபியின் வரலாறு உள்ளிட்ட விபரங்களை கூகுள் நமக்கு பரிந்துரை செய்யும்.

ஆனால் டக்டக்கோ என்பது நாம் தேடும் விஷயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கும். அதாவது டக்டக்கோ நமக்கு காட்டும் முடிவுகள் என்பது கூகுளில் 2வது அல்லது 3வது பக்கத்தில் தான் நமக்கு காட்டும். அதேநேரத்தில் சில சமயங்களில் குறிப்பிட்ட விஷயத்தை சரியான வார்த்தைகளால் நாம் தேடாமல் போனால் பிரச்சனை எழவும் வாய்ப்புள்ளது. அதோடு கூடுதல் பக்கங்களை நாம் தேட வேண்டியிருக்கும். இதனால் இந்த விஷயத்தில் டக்டக்கோவை விட கூகுள் தான் சிறந்தது என சிலர் கூறுகின்றனர். ஆனாலும் கூட கூகுளுக்கு போட்டியாக வந்த பல தேடுபொறிகள் தடம்தெரியாமல் போன நிலையில் டக்டக்கோவை அதற்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்கின்றனர் இணையவாசிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+