திடீர்னு உங்க மொபைல் செயலிழந்து விட்டதா? டோன்ட் வொர்ரி.. இதான் பிரச்சனை! எளிதாக தீர்க்க 4 டிப்ஸ்!
சென்னை: நாம் தினசரி மிக அதிக நேரத்தை மொபைல் போனிலேயே கழிக்கிறோம். திடீரென உங்கள் ஸ்மார்ட் போன் வேலை செய்யவில்லை என்றால் என்னாகும்? பதற்றம் அடையவே வேண்டாம்.. உங்கள் போன் திடீரென ஆன் ஆகாவிட்டால் என்ன செய்வது என்பதற்கான டிப்ஸ் இங்கே..!
போன் திடீரென செயல்படாமல் போக காரணம்: உங்கள் மொபைல் போன் திடீரென சுத்தமாக இயங்காமல் போவதற்கு, பேட்டரி செயலிழந்து போவது தொடங்கி சாஃப்ட்வேர் சிக்கல்கள் வரை பல காரணங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் நீங்கள் சில முறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த பிரச்சனையை எளிதாக சால்வ் செய்யலாம்.

ட்ரெய்ன் ஆன பேட்டரி: உங்கள் போனில் சுத்தமாக சார்ஜ் இல்லாவிட்டால் போனை ஆன் செய்ய முடியாது.
நீர் புகுதல்: உங்கள் மொபைல் நீரில் மூழ்கி இருந்தாலும் போன் ஆஃப் ஆகியிருக்கக்கூடும். தண்ணீரில் முழுமையாக மூழ்காவிட்டாலும், சிறிதளவு நீர் போனுக்குள் நுழைந்திருந்தால் கூட அது உங்கள் போனில் பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
கீழே விழுந்து சேதம்: நீங்கள் அல்லது வேறு யாரேனும் போனை கீழே தவறவிட்டிருக்கலாம். போனின் வெளிப்புறத்தில் எந்த டேமேஜும் இல்லாவிட்டாலும், கடினமான தளத்தில் உங்கள் மொபைலை தவறவிடுவது சில உள் சேதங்களை ஏற்படுத்தும்.
மென்பொருள் கோளாறு: சார்ஜ் இருக்கிறது, போனை கீழே தவறவிடவில்லை, நீரிலும் விழவில்லை, ஆனாலும் போன் ஆன் ஆகாமல் அல்லது திரை கருப்பாக இருந்தால், அது சாஃப்ட்வேர் சிக்கலாக இருக்கலாம். சில ஆப்ஸ் அல்லது புரோகிராம்கள் உங்கள் ஃபோன் சரியாக வேலை செய்வதைத் தடுக்கக்கூடும். குறிப்பாக சாஃப்ட்வேர் அல்லது சிஸ்டம் அப்டேட்டின் போது போன் திடீரென ஆஃப் ஆகி, ஆன் ஆகாவிட்டால், அதற்கு பிரதான காரணம் சாஃப்ட்வேர் சிக்கலாகவே இருக்கும்.
சரி, உங்கள் ஸ்மார்ட் போன் திடீரென இயங்காவிட்டால் என்ன செய்வது? பீதி அடைய வேண்டாம். புதிய போன் தான் வாங்க வேண்டும் என்ற நிலை ஏற்படாமல் இந்த போனை மீட்டெடுக்கவும் இயக்க பல வழிகள் உள்ளன. ஆன் ஆகாத ஃபோனை எவ்வாறு சரிசெய்வது என்பதை இங்கே பார்க்கலாம்..
1. போனை ரீஸ்டார்ட் பண்ணுங்க: உங்கள் ஃபோன் ஃப்ரீஸ் ஆகி இருக்கலாம். வழக்கமான முறையில் ரீஸ்டார்ட் செய்ய முயற்சிக்கவும். ஸ்மார்ட் போன்களில் ரீஸ்டார்ட் செய்ய பவர் பட்டனை அழுத்திப் பிடித்திருக்க வேண்டி வரும். அப்படியும் வேலை செய்யவில்லை என்றால், உங்கள் போனை ரீஸ்டார்ட் செய்ய வேறு சில வழிமுறைகளும் உள்ளன.
இயங்காத ஐ போன் மாடல்களுக்கு: 1.வால்யூம் அப் பட்டனை ஒருமுறை அழுத்தவும், பிறகு வால்யூம் டவுன் பட்டனையும் அப்படியே அழுத்தவும்.
2. உங்கள் போன் ரீ ஸ்டார்ட் ஆகும் வரை பவர் பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.
வேலை செய்யாத ஆண்ட்ராய்டு அல்லது இயங்காத கூகுள் பிக்சல் மொபைலை ரீஸ்டார்ட் செய்ய வேண்டுமா? பவர் பட்டனை சுமார் 30 வினாடிகள் அழுத்திப் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான். உங்கள் போனுக்கான பவர் துண்டிக்கப்பட்டு மறுபடியும் பவரை வழங்கி போன் ரீ-ஸ்டார்ட் ஆகும்.
ஆண்ட்ராய்டு போன்களிலேயே சாம்சங் உள்ளிட்ட சில மாடல்களுக்கு, ஒரே நேரத்தில் வால்யூம் டவுன் பட்டனையும் பவர் பட்டனையும் அழுத்திப் பிடிக்க வேண்டியிருக்கும், ஆனால் அதற்கு சில வினாடிகள் மட்டுமே ஆகும். ஸ்கிரீன் ஆன் ஆகும் வரை அழுத்திப் பிடித்திருந்தால் போதும்.
2. பேட்டரியை சார்ஜ் செய்யுங்க: உங்கள் போனில் சுத்தமாக சார்ஜ் இல்லாவிட்டால் போனை ஆன் செய்யவே முடியாது. போனை சார்ஜ் செய்து பார்த்தால், அதுதான் பிரச்சனையா என்பதை கண்டறிந்து விடலாம். வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால், சார்ஜ் ஏறும்போது பேட்டரி சிம்பள் திரையில் தோன்றும்.
சிறிது நேரம் சார்ஜ் செய்தும் போன் செயல்படாவிட்டால், சார்ஜிங் போர்ட் தூசியால் அடைக்கப்பட்டு இருக்கலாம். அப்படியும் இல்லாவிட்டால் வேறு கேபிள் அல்லது சார்ஜரை பயன்படுத்தி பார்க்கவும். பழுதடைந்த சார்ஜரால் கூட சில சமயம் பிரச்சனை நிகழும்.
பேட்டரியை வெளியே எடுக்க முடிந்தால் எடுத்து திரும்ப போட்டால் சில சமயங்களில் சரியாகி விடும். உங்கள் போனின் பேட்டரியை வெளியே எடுக்க முடியாத வடிவமைப்பு என்றால் பவர் பட்டனை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். பட்டனை 30 நொடிக்கு அழுத்த வேண்டும். அப்படியும் ஆகவில்லை எனில் பேட்டரி முற்றிலுமாக செயலிழந்திருக்கக் கூடும். சர்வீஸ் செண்டருக்கு சென்று பேட்டரியை மாற்றுவது அவசியம்.
3. ஸ்கிரீன் ப்ராப்ளம்: உங்கள் போனுக்கு வேறு போன் மூலம் அழைத்து சத்தம் வருகிறதா என்று பார்க்கலாம். உங்கள் போன் ஸ்கிரீன் சேதமடைந்திருப்பதன் காரணமாக டிஸ்பிளே கருப்பாக இருக்கிறது என்றால் போனில் அழைப்பு வந்தால் சத்தம் வரும் அல்லது நீங்கள் வைப்ரேட் ஆப்ஷனை எனேபிள் செய்திருந்தால் வைப்ரேட் ஆகும்.
4. ஃபேக்டரி ரீசெட் செய்யுங்க: உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் இயங்காதபோது, உங்கள் போனை மீட்டமைப்பதே உங்கள் ஒரே விருப்பமாக இருந்தால் ஃபேக்டரி ரீசெட் செய்யலாம். ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் முயற்சித்த பிறகு இது ஒரு கடைசி முயற்சியாக இருக்க வேண்டும், ஏனெனில் ஃபேக்டரி ரீசெட் செய்வது உங்கள் போனில் உள்ள எல்லா டேட்டாவையும் அழித்துவிடும்.
சர்வீஸ் தான் வழி: அப்படியும் ஆன் ஆகாவிட்டால் சர்வீஸ் செண்டருக்கு செல்வதே ஒரே வழி. நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் செண்டர்களுக்குச் சென்று உங்கள் போனின் நிலையை ஆராய்ந்து அதனை மீட்டெடுக்கலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications