2 சிம் செல்போன் இருக்கு.. ஆனா 3 சிம் மொபைல் மட்டும் இல்லையே ஏன்! ஆச்சரியம் தரும் பதில்
சென்னை: இந்த நவீனக் காலத்தில் செல்போன் இல்லாமல் எதுவுமே இல்லை என்றாகிவிட்டது. அந்தளவுக்கு முக்கியமாக இருக்கும் செல்போனில் ஏன் இப்போதும் அதிகபட்சம் இரண்டு சிம் மட்டுமே போடுவது போல இருக்கிறது.. 3 சிம் ஆப்ஷன் ஏன் இருந்தது இல்லை என நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் செல்போன் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. நாம் வெளியே கிளம்பும் போது பர்ஸை மறந்துவிட்டுச் சென்றாலும் கூட செல்போனை மறக்க மாட்டோம்.

3 சிம் ஏன் இல்லை:
அந்தளவுக்கு செல்போனை எப்போதும் கையோடு தான் எடுத்துச் செல்வோம். செல்போன் என்பது போன் பேச மட்டும் என்ற நிலையில் இருந்து மாறி இப்போது A டூ Z வரை எல்லாமே செல்போன் என்ற நிலை உருவாகிவிட்டது. இப்படி நமக்கு கிட்டதட்ட ஒரு விரலைப் போல செல்போன் ஆகிவிட்டது. செல்போனில் உள்ள வசதிகள் தொடர்ந்து அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஆனால், சிம் மட்டும் இரண்டுக்கு மேல் வரவில்லை.. இது ஏன் என்று யோசித்து இருக்கீங்களா? இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இப்போது வெளியாகும் எல்லா செல்போன்களில் 2 சிம்கள் போடலாம். அதிலும் இப்போது வரும் பெரும்பாலான இரண்டாவது ஸ்லாட்டில் சிம் கார்டு அல்லது மெமரி கார்டு இரண்டில் எதாவது ஒன்று தான் என்பது போல இருக்கிறது. இன்னும் சில செல்போன்களில் மெமரி கார்டு ஸ்லாட் என்பதே இருப்பது இல்லை. வெகு சில மொபைல் நிறுவனங்கள் இ-சிம் முறையைக் கூட முயன்று வருகிறார்கள்.
சைஸ்:
செல்போனில் இருக்கும் இடத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறார்கள். சிம் சின்ன சைஸ் இருக்கும் அதற்குக் கூடவா என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், செல்போனை பொறுத்தவரை ஒவ்வொரு மிமீ கூட விலைமதிப்பற்றது. இதன் காரணமாகவே சிம் சைஸ் கூட மினி சிம், மைக்ரோ சிம் இப்போது நானோ சிம் வரை குறைந்து இருப்பது நினைவில் இருக்கும்.
இப்படி இடத்தை மிச்சம் பிடிப்பதால் பெரிய சைஸ் பேட்டரி தரலாம்.. அல்லது மொபைல் தடிமனாக இல்லாமல் அதை ஸ்லிம் ஆகத் தர முடியும். அதேபோல கூடுதல் சிம் என்றால் கூடுதல் ஸ்லாட் தேவை. இதுபோல கூடுதல் ஸ்லாட் அமைக்கும் போது எளிதாகத் தண்ணீர் உள்ளே புகுந்துவிட வாய்ப்பு அதிகம். இதனால் வாட்டர் ப்ஃரூப் உள்ளிட்ட வசதிகளை நிறுவனங்களால் தர முடியாது.
பேட்டரி:
அதேபோல நமது போனில் சிம் இருக்கும்போது அது அருகே உள்ள டவரில் இருந்து சிக்னலை தேடிக்கொண்டே இருக்கும். செல்போனில் சார்ஜ் குறையப் பிரதான காரணமே இதுதான். நீங்கள் வை-பையில் நெட் யூஸ் செய்யும் போதும் மொபைல் டேட்டாவை போடும் போதும் இந்த வேறுபாட்டை உணரலாம்.
அதாவது அதிக சிம் என்றால் அது சிக்னலை கூடுதலாகத் தேட வேண்டி இருக்கும். இதனால் பேட்டரி நிச்சயம் வேகமாகவே குறையும். அதிலும் கிராமங்கள் போல டவர் குறைவாக இருக்கும் இடங்களில் செல்போன் அதிகமாக சிக்னலை தேட வேண்டி இருக்கும் இதனால் இன்னுமே வேகமாகக் குறையும். இதுவும் ஒரு பிரதான காரணம்.
தேவை இல்லை:
இந்த இரு காரணங்களையும் தாண்டி பிரதானமாக ஒரு காரணம் இருக்கிறது. அதாவது மார்க்கெட்டில் அதற்கான தேவை இல்லை.. இப்போது பெரும்பாலானோர் 2 சிம் தான் யூஸ் செய்கிறார்கள். அதுவே பெரும்பாலானோருக்கு போதுமானதாக இருக்கிறது. இதன் காரணமாகவே 3 சிம் போன் என்பது அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், அவை தற்போது புழக்கத்தில் இல்லாமல் இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications