தினசரி வெறும் 2 ரூபாய்தான்.. ஜியோவின் அதிரடி சரவெடி திட்டம்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. என்ன பாருங்க
டெல்லி: ஜியோ வாடிக்கையாளர்கள் இனிமேல் நாம் அடிக்கடி ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை. ரூ.895 திட்டத்திற்கு இருக்கும் ஒரு அட்டகாசமான பிளான் அனைவரையும் கவருவதாக இருக்கிறது.
இந்தியாவில் டெலிகாம் சந்தையில் ஜியோ நிறுவனத்தின் வருகை மொத்தமாகப் புரட்டிப் போட்டுள்ளது.. ஒரு மாதத்திற்கு ஒரு ஜிபி டேட்டாவுக்கே பெருந்தொகையைத் தர வேண்டி இருக்கும் நிலையில், இப்போது அந்த நிலை முற்றிலுமாக மாறி இருக்கிறது.

ஆனால், ஜியோ இந்த நிலை மொத்தமாக மாற்றிப்போட்டது. மாதம் ஒரு ஜிபி டேட்டா என்பது மாறி தினசரி 3 ஜிபி டேட்டா இப்போது கிடைக்கிறது. இதற்கிடையே ஜியோ நிறுவனத்திடம் இருக்கும் ஒரு அட்டகாசமான திட்டம் குறித்து நாம் பார்க்கலாம்.
ஜியோ: ஜியோ நிறுவனம் 895 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் நமக்கு அன்லிமிடெட் கால், எஸ்எம்எஸ், டேட்டா என நமக்கு அனைத்துமே இதில் கிடைக்கும்.. மேலும், இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், அதன் பிறகு 336 நாட்களுக்கு வெலிடிட்டி இருக்கிறது.
இந்த ரூ.895 திட்டத்தில் நமக்கு இருக்கும் வசதிகள் குறித்து நாம் பார்ப்போம். ஒரு முறை இந்த பேக்கில் ரீசார்ஜ் செய்தால் போதும், உங்களுக்கு 336 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் கிடைக்கும். மேலும், மாதம் 50 எஸ்எம்எஸ் என்ற விகிதத்தில் 600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், தினசரி 2 ஜிபி டேட்டாவும் நமக்குக் கிடைக்கிறது. இதற்கு நாம் 995 பிளானில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதாவது தினசரி கிட்டதட்ட 2.4 பைசான் தான் வரும். இது தான் ஜியோ வழங்கும் மிகவும் மலிவான திட்டங்களில் ஒன்றாகும்.
தினசரி 2 ஜிபி டேடா: இந்த 2 ஜிபி டேட்டா முடிந்தால் இணையத்தைப் பயன்படுத்தவே முடியாது என்று இல்லை. அதன் பிறகும் நமக்கு 64Kbps வேகத்தில் நமக்கு இணையம் கிடைக்கும். இது தவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட சப்ஸ்கிரிப்ஷன்களும் நமக்கு இலவசமாகக் கிடைக்கும்.
உங்களுக்குத் தினசரி 2 ஜிபி டேட்டா போதும் என்றால் இந்த 895 திட்டம் உங்களுக்குச் சரியாக இருக்கும். அதைத் தாண்டி பயன்படுத்தினால் மட்டுமே வேறு பிளான்களை பார்க்கலாம்.. இப்போதெல்லாம் மாதம் ஒரு முறை அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மினிமம் தொகைக்கு ரீசார்ஜ் செய்தாக வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்தில் நாம் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும் 336 நாட்களுக்குக் கவலையே இல்லை.
கட்டுப்பாடுகள்: ஆனால், இதில் சில கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கிறது. முதலில் இந்தத் திட்டத்தை நாம் அனைத்து செல்போன்களுக்கும் ரீசார்ஜ் செய்ய முடியாது. ஜியோ போன்களை வைத்திருப்போர் மட்டுமே.. அதாவது ஜியோ போன், ஜியோ போன் 2, ஜியோ போன் நெக்ஸ்ட் ஆகிய மொபைல்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். வேறு ஸ்மார்ட்போன்களை வைத்திருப்போர் வேறு ரீசார்ஜ் திட்டங்களைத் தான் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல இந்த ரீசார்ஜ் பிளானில் நமக்கு 5ஜி டேட்டா கிடைக்காது. 4ஜி டேட்டா மட்டுமே நமத்து கிடைக்கும். வேறு ஸ்மார்ட் போன்களை வைத்திருப்போர் வேறு காஸ்ட்லி பிளான்களை தான் பயன்படுத்த வேண்டும். முன்பே கூறப்பட்டுள்ளதும்போல, இது 365 நாட்கள், அதாவது 11 மாதம் மட்டுமே வெலிடிட்டியை கொண்டு இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்,












Click it and Unblock the Notifications