ஆஹா.. இது வேறயா? இனி யூடியூபிலேயே கேம் விளையாடலாம்.. மெயில் மூலம் ‘லீக்’ ஆன சீக்ரெட்!
நியூயார்க்: யூடியூப் மூலம் கேம் விளையாடும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது யூடியூப் நிறுவனம். இந்த முயற்சி சோதனையில் இருக்கும் நிலையில், இதனை யூடியூப் ரகசியமாக வைத்திருந்தது. கூகுள் பணியாளர்களுக்கு அனுப்பிய மெயில் மூலமாக இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் லட்சக்கணக்கான நபர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை அளித்து வருகிறது. பல கிரியேட்டர்கள் இன்று தங்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு துறையை தேர்ந்தெடுத்து அது சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.

யூடியூப் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறதோ, அதே அளவு ஆன்லைன் கேம்களும் பெரிய அளவில் பலராலும் ஆர்வமுடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. யூடியூபிலும் ஏராளமான ஆன்லைன் கேமிங் தொடர்பான வீடியோக்கள் உள்ளன. தமிழிலும் கேமிங் சேனல்கள் நிறைய உள்ளன. அவற்றிற்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
யூடியூபில் அதிகரித்து வரும் ஆன்லைன் விளையாட்டு மோகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, நேரடி ஆன்லைன் விளையாட்டுகளை வெளியிட யூடியூப் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது ஆன்லைன் கேம்களை அறிமுகப்படுத்துவது குறித்து யூடியூப் தனது பணியாளர்களை விளையாட வைத்து சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் உலகின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், ஆன்லைன் கேமிங் துறையிலும் கால் பதிக்க முடிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. யூடியூப் நிறுவனம் தனது புதிய ப்ராடக்டான "பிளேயபில்ஸ்" (Playables) மூலமாக யூடியூப்பில் இருந்து பயனர்கள் நேரடியாக ஆன்லைன் கேம்களை விளையாடும் அம்சத்தை கொண்டு வருகிறது.
தற்போது யூடியூப் நிறுவனம் சோதித்து வரும் இந்த கேம்களை வெப் பிரவுசர் பயன்படுத்தியோ அல்லது யூடியூப் ஆப் மூலமாகவோ ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன்களில் விளையாடலாம். ஏராளமான ஆன்லைன் கேம்கள் தற்போது சோதனை செய்யப்பட்டு வந்தாலும் குறிப்பாக ஸ்டேக் பவுன்ஸ் (Stack Bounce) என்ற ஆர்கேட் கேம் பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் விளையாட்டு அறிமுகம் தொடர்பாக யூடியூப் ரகசியம் காத்து வந்தது. யூடியூப் நிறுவனம் அனுப்பிய மெயில் வெளியே கசிந்ததில், இந்த விவகாரம் வெளிப்பட்டிருக்கிறது. யூடியூப் தளத்தில் குறைந்து வரும் விளம்பர வருவாயை ஈடு செய்வதற்காக, இந்த ஏற்பாட்டினை யூடியூபின் தாய் நிறுவனமான கூகுள் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications