யூடியூபில் விளம்பரங்களை பார்க்காம ‘டிமிக்கி’ கொடுக்குறீங்களா? வருகிறது ‘செக்’! இனி வீடியோவே ஓடாதாம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: யூடியூப் பார்க்கும்போது வரும் விளம்பரங்களை தவிர்க்க நீங்கள் Ad blockers-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. இனி மூன்று வீடியோக்களுக்கு மேல் விளம்பரங்களைத் தவிர்த்துவிட்டு யூடியூபை பார்க்க நினைத்தால் அது முடியாது.
உலகின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக இருந்து வரும் யூடியூபுக்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். வயது வித்தியாசமின்றி, வர்க்க வித்தியாசமின்றி பெரும்பாலானோர், கணிசமான நேரம் யூடியூபில் வீடியோக்களை பார்த்து வருவது அனைவரும் அறிந்தது தான்.

யூடியூப்: யூடியூபில் வரும் விளம்பரங்கள் மூலம் யூடியூபர்களுக்கு வருமானம் செல்கிறது. நாம் பார்க்கும் விளம்பரங்களுக்கு ஏற்றபடி, அந்த வீடியோவை பதிவேற்றிய படைப்பாளிகளுக்கு பணம் செல்லும். விளம்பரமில்லா அனுபவத்தைப் பெற பயனர்கள் யூடியூப் பிரீமியத்திற்குப் பணம் செலுத்தும் வசதியையும் யூடியூப் வழங்குகிறது.
விளம்பரங்கள் மூலம் யூடியூபுக்கு வரும் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது. காரணம், ஏராளமான பயனர்கள் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது விளம்பரத் தடுப்பான்களைப் பயன்படுத்தி விளம்பரங்களை பார்ப்பதைத் தவிர்த்து வருகின்றனர். ஆட் ப்ளாக்கர்களை பயன்படுத்துவதன் மூலம் விளம்பரங்களைத் தவிர்த்துவிட்டு காணொளியை மட்டும் பார்வையாளர்கள் பார்க்க முடியும்.
ஆட் பிளாக்கர்ஸ்: இது விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமல்லாது யூடியூபின் சந்தாதாரர் முறையில் கிடைக்கும் வருவாயையும் சேர்த்து பாதிக்கிறது. யூடியூப் பிரீமியம் சந்தாதாரராகவும் இல்லாமல், ஆட் பிளாக்கர்கள் மூலம் விளம்பரங்களை பார்க்காமல் தவிர்க்கும் பயனாளர்களுக்கு செக் வைக்கும் வகையில் ஒரு சோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளது யூடியூப்.
AdBlockers இயக்கப்பட்ட தங்கள் கணினியில் YouTubeஐ பார்க்கும்போது, புதிதாக ஒரு பாப்அப் மெனு வெளிப்படுகிறது. அதில், விளம்பரத் தடுப்பான் (Ad blocker) பயன்படுத்தி விளம்பரம் இன்றி மூன்று வீடியோக்களைப் பார்த்த பிறகு, பயனர்கள் யூடியூப் பார்ப்பதிலிருந்து தடுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை வாசகம் வருகிறது.
2 ஆப்ஷன்கள்: "நீங்கள் ஒரு விளம்பரத் தடுப்பானைப் பயன்படுத்துவது போல் தெரிகிறது. விளம்பரத் தடுப்பான் முடக்கப்படாவிட்டால் வீடியோ பிளேபேக் தடுக்கப்படும், விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க யூடியூப் ப்ரீமியம் சந்தா செலுத்தலாம்" என்று அந்த பாப்-அப் மெனுவில் எச்சரிக்கப்படுகிறது.
மேலும், பயனர்கள் தேர்ந்தெடுக்க இரண்டு ஆப்ஷன் பட்டன்களையும் வழங்குகிறது, விளம்பரங்களை அனுமதிக்க அல்லது யூடியூப் பிரீமியம் சந்தா செலுத்தும்படி பயனர்களுக்கு 2 ஆப்ஷன்களை வழங்குகிறது யூடியூப்.
விரைவில் அனைவருக்கும்: விளம்பரங்களின் வாயிலாக வரும் வருமானம் யூடியூபர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதால், பார்வையாளர்கள் விளம்பரங்களைப் பார்வையிட வேண்டும், அல்லது சந்தா செலுத்த வேண்டும். யூடியூப் சந்தா செலுத்தினால், நீங்கள் செலுத்தும் சந்தா மூலம் யூடியூப் க்ரியேட்டர்கள் பணம் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளது யூடியூப் நிறுவனம். சோதனை முயற்சியாக உள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications