மொபைலில் வீடியோ பார்த்துகிட்டே தூங்குவீங்களா.. யூடியூப்பில் வரும் புது வசதி.. டைம் செட் பண்ணலாம்
சென்னை: பிரபல முன்னணி வீடியோ தளமான யூடியூப், பயனர்களை கவரும் விதமாக புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் விரைவில் "ஸ்லீப் டைமர்" என்ற வசதியை யூடியூப் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அனைத்து யூசர்களுக்கும் கிடைக்குமா? எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கூகுள் நிறுவனத்தின் யூடியூப் வீடியோ தளம் இணைய உலகில் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. யூடியூப் செயலி இல்லாத ஸ்மார்ட்போன்களையே பார்க்க முடியாது. யூடியூபில் பயனர்களுக்கு தேவையான அனைத்து பொழுதுபோக்கு வீடியோக்களும் கிடைக்கின்றன. எந்த ஒரு தகவலாக இருந்தாலும் சரி கூகுளுக்கு அடுத்தபடியாக யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதனால் இணைய உலகில் தனி சாம்ராஜ்ஜியமே யூடியூப் நடத்தி வருகிறது. டிவி பார்க்கும் பழக்கம் கூட பலருக்கும் குறைந்துவிட்டது. ஒருபக்கம் டிவி ஓடிக்கொண்டிருந்தால் கூட இந்த பக்கம் மொபைலில் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற வீடியோக்களை பார்த்துக்கொண்டிருப்பதை காண முடிகிறது. இன்னும் சில பேரோ இரவில் தூங்க போகும் போது கூட செல்போனில் பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கிறது.
இதனால் விடிய விடிய ஒருபக்கம் யூடியூபில் சாங்க்ஸ் பிளேபேக்கில் ஓடிக்கொண்டு இருக்கும். இப்படி வீடியோ ஓடுவதால், செல்போனில் சார்ஜ் வேகமாக குறைவதோடு, டேட்டாவும் விரைவாக காலியாகும். இது ஒருபக்கம் என்றால் மற்றொரு பக்கம் தூக்கமும் பாதிக்கப்படும். இந்த நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக விரைவில் யூடியூபில் ஸ்லீப் டைமர் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தற்போது சோதனை கட்டத்தில் இந்த ஸ்லீப் டைமர் வசதி உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி எவ்வளவு நேரத்தில் வீடியோ நிறுத்தப்பட வேண்டும் என்று டைம் செட் செய்து வைத்தால் குறிபிட்ட டைமிற்கு பிறகு தானாகவே யூடியூப் ஆப் ஆகிவிடும். இந்த வசதி பிரீமியம் யூசர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இது மட்டும் இன்றி தனது ஜெமினி ஏஐ டூல் மூலமாக மற்றொரு அசத்தல் வசதியையும் அறிமுகப்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது.
வீடியோ பதிவிடும் போது அதற்கான டைட்டில் பொன்றவற்றை ஜெமினி ஏஐ டூல் பரிந்துரை செய்யும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யூடியூப் கொண்டு வர இருக்கும் இந்த புதிய வசதிகள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் பிரீமியம் யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
பீரிமியம் சேவையை பயன்படுத்தும் யூசர்கள், சோதனை அடிப்படையில் தற்போது கிடைக்கும் வசதியை பயன்படுத்த யூடியூப் செட்டிங்சில் try exeperimental new features- ஸ்லீப் டைமர் ஆப்ஷனை தேர்வு செய்ய முடியும். 10 நிமிடம், 15 நிமிடம், 20 நிமிடம், 30 நிமிடம், 45 நிமிடம் ஒரு மணி நேரம் அல்லது வீடியோ முடியும் வரை என ஆப்ஷன் திரையில் தோன்றும்.
இதை கிளிக் செய்து தேவையான நேரத்தை செலக்ட் செய்தால்.. குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் பாப் அப் ஒன்று தோன்றி டைம் முடிந்ததை காட்டும். ஒருவேளை நீங்கள் விழித்து இருந்தால் அதை கிளிக் செய்து வீடியோவை தொடர்ந்து பார்க்கலாம்.. இல்லையென்றால் தானாகவே வீடியோ ஆஃப் ஆகிவிடும். தற்போது பரிசோதனை கட்டத்தில் இந்த வசதி உள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications