Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐசரி வேலனின் "அது சரி" சீக்ரெட்.. திசைமாறி உயர்ந்த ஐசரி கணேஷ்.. உழைத்தால் வெற்றி நிச்சயம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ், 2025 முதல் 2027 வரை 10 படங்களைத் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.. இந்நிலையில், மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், ஐசரி கணேஷ், ஐசரி வேலன் பற்றி பேட்டி ஒன்றில் விரிவாகவே கூறியிருக்கிறார். அந்த பேட்டிதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் ஐசரி கணேஷ் பற்றி கூறியிருந்தார்.. அதில், "திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், கல்வியாளர், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் என்ற பன்முகம் கொண்ட பிரபலம் ஐசரி கணேஷ்.. இவர் மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகன் ஆவார். , ஐசரி வேலனுக்கு எம்ஜிஆர் என்ற 3 எழுத்து தவிர வேறு தெரியாது. கடைசிவரை எம்ஜிஆருடனேயே இருந்துவிட்டார்..

Television Isari ganesh Isari Velan

கல்வித்தந்தை

இன்று பல வெற்றிப் படங்களை தயாரித்து வருபவர் ஐசரி கணேஷ்.. கல்வியாளரே கல்வித் தந்தையாகவும் மாறி, கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டவர் ஐசரி கணேஷ்.. கல்வி நிறுவனத்தின் மூலம் 8000 பேர் மாத ஊதியம் பெற்று வருகிறார்கள்.

எம்ஜிஆர் மடியிலேயே ஐசரி கணேஷ் வளர்ந்தவர் என்பது கொடுத்து வைத்த விஷயம்.. தயாள குணம் என்பது இயல்பிலேயே ஐசரி கணேஷூக்கு உண்டு. அதேசமயம், தான் கொடுப்பதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.. யாருக்கும் சத்தமில்லாமல் பல உதவிகளை செய்பவர்..

கோலிவுட் அம்பானி

நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், செய்யக்கூடிய பல காரியங்களை செய்ததே ஐசரி கணேஷ்தான்... சினிமா வட்டாரத்தில் ஏழைத் தொழிலாளர்களுக்கு பென்ஷன் தந்து வருகிறார்..ஏழை குழந்தைகளை என்ஜினியராக்கியிருக்கிறார்.. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உதவி கொண்டிருக்கிறார்.. இதெல்லாம் யாருக்கும் வெளியே தெரியாது.. மற்றவர்களும் இதை சொல்வதில்லை..

தமிழ் சினிமா வீழ்ந்து கிடந்த சமயத்தில், தான் சில நஷ்டங்கள் அடைந்தாலும், முதலீடுகளை செய்து, உயிர்ப்புடன் வைத்திருந்தார்.. அதனால்தான் கோலிவுட் அம்பானி என்று இவரை பாராட்டுகிறார்கள்" என்றெல்லாம் கூறியிருந்தார்..

மானத்தை காப்பாற்றிய ஐசரி வேலன்

Realone Media என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், "சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் ஐசரி வேலன்.. அவரது இயற்பெயர் கதிர்வேலன்.. ஒரு படத்தில் "அதுசரி" என்ற வார்த்தையை ஐசரி என்று சொல்வார்.. அதனாலேயே அவரது பெயர் முசரி வேலன் என்றானது..

பிரபல காமெடியன் கிடையாது.. சாதாரண காமெடியன்தான்.. எம்ஜிஆர் படங்களில் நடிக்கக்கூடியவர்.. எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபோது, கேபினெட் போஸ்டிங் ஒன்றிருந்தது.. அது துணை அமைச்சர் பதவிக்கு நிகரானது.. அந்த பதவியை ஐசரி வேலனுக்கு எம்ஜிஆர் வழங்கினார்..

பிறகு எம்எல்ஏவுக்கும் நிற்க வைத்தார்.. முதல் தேர்தலில் சென்னையில் 12 தொகுதிகளிலும் எம்ஜிஆர் தோற்றார்.. ஒரே ஒரு ஆர்கே நகர் தொகுதியில் மட்டும் ஐசரி வேலன் வெற்றி பெற்றார்.. அப்போதிருந்து ஐசரி வேலன் மீது எம்ஜிஆருக்கு மரியாதை அதிகமானது. எம்ஜிஆரின் மானத்தை காப்பாற்றியதே அன்று ஐசரி வேலன்தான்.

ஆனால் அன்று ஐசரி வேலன் சினிமாவில் பெரிதாக சம்பாதிக்கவில்லை.. எனவே வேலனுக்கு எம்ஜிஆர் உதவியதாக சொல்வார்கள்.. ஆனால், இன்று ஐசரி கணேசனின் வளர்ச்சி எங்கியோ உயரத்தில் உள்ளது.. அம்பானி, அதானி ரேஞ்சில் உள்ளது..

டார்கெட் செய்த ஜெயலலிதா

ஐசரி கணேஷ் ஆரம்ப காலங்களில் பலரது உதவிகளை பெற்றார்.. சில முயற்சிகளை சொந்தமாகவே உருவாக்கினார்.. கல்லூரிகளை எப்படி கொண்டு வருவது, கல்வி நிறுவனங்களை எப்படி நடத்துவது என்பதில் திட்டமிடுதல்களை கையாண்டார். தமிழ் சினிமாவையும் தன் கைகளுக்குள் வைத்திருக்கிறார். ரஜினி கால்ஷீட் வேண்டுமென்றால், ஐசரி கணேசனை பார்க்க வேண்டுமாம்.

நன்றாக வளர்ச்சி பெற்றதும், திமுக பக்கம் செல்ல ஆரம்பித்தார்.. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், ஐசரி கணேஷை கைது செய்தார்.. ஆனால், 2, 3 வருடம் அவரை சிறையில் வைக்கவும் திட்டமிட்டார் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த தகவலாகும்.

உழைத்தால் முன்னேறலாம்

எனினும் வாழ்க்கையில் தனக்கு கிடைத்த சிறிய வாய்ப்பை பயன்படுத்தி, மிகப்பெரிய கல்வி நிறுவனங்களை நடத்தும் அளவுக்கு சாமர்த்தியம் கொண்டிருப்பதை பாராட்டியாக வேண்டும்.

ஏனென்றால், அவரது அப்பா இறந்தபோது என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறிய சூழலில் காணப்பட்டார்.. அதற்கு பிறகு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி, ஒரு அடித்தட்டு நிலையிலிருந்து சொந்த உழைப்பால் இன்று குடும்பத்தை உயர்த்தியிருக்கிறார். முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் இவரும் ஒரு உதாரணம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+