Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1000 சவரன் தங்க நகை, ரூ.5000 கோடி.. ஈசிஆர் ரோட்டை ஸ்தம்பிக்க வைத்த ஐசரி கணேஷ் மகள் கல்யாணம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல கோடி ரூபாயில் தனது மகளின் திருமணத்தை இன்று நடத்தியுள்ளார் ஐசரி கணேஷ்.. நாளைய தினம் சென்னையில் ரிசப்ஷன் நடைபெற உள்ளது.. மேலும், மாலத்தீவில் ட்ரீம் வெட்டிங் ஒன்றும் நடைபெறவுள்ளதாகவும் 250 பிரபலங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை தனி விமானத்தில் அங்கே அழைத்துச் செல்லப்போவதாக தெரிகிறது. இந்நிலையில், ஐசரி கணேஷ் வீட்டு திருமணம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. சினிமா துறையிலிருந்து பலரும் இவர்களின் திருமணத்தில் இன்று பங்கேற்றுள்ளனர்..

Television 1000 Gold Jewellery Isari Ganesh 1000

பிரபலங்கள் பங்கேற்பு

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, சத்யராஜ், நிழல்கள் ரவி, டைரக்டர்கள் மணி ரத்னம், ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பி.வாசு, நடிகை அதிதி ஷங்கர் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சேகர் பாபு, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த திருமணம் குறித்து AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "அன்று வேல்ஸ் என்று சின்ன கல்லூரி போல ஆரம்பித்தார் ஐசரி கணேஷ்.. இன்று அதனை பிரம்மாண்டமான கல்வி நிறுவனமாக மாற்றிவிட்டார் ஐசரி கணேஷ்..

கல்வித்தந்தை - உழைப்பால் உயர்ந்தவர்

படிக்காதவர்கள் பலரும் தங்களை கல்வி தந்தையாக சொல்லிக்கொள்ளும் நிலையில், ஐசரி கணேஷ் நன்றாக படித்தவர்.. இந்த நிறுவனத்தை இவ்வளவு தூரம் வளர்த்து கொண்டு வந்ததற்கு காரணமே அவரது தனித்திறமைதான்..

இன்றைய தினம் ஐசரி கணேஷ் மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.. பல விஐபிகள் கலந்து கொண்டதால், சென்னை ஈசிஆர் ரோடே ஸ்தம்பித்துவிட்டது.. பிரம்மாதமாக விருந்து தரப்பட்டது. மணமகனின் நகைகள், மணமகளின் நகைகள் கண்ணை பறிக்கும் அளவுக்கு ஜொலித்தன..

ஈசிஆர் - ரிசப்ஷன்

இதே ஈசிஆரில் நாளை ரிசப்ஷன் நடக்கிறது.. மூக்குத்தி அம்மன் படத்துக்கே பல கோடியில் செட் போட்டவர் ஐசரி கணேஷ்.. தன்னுடைய மகளின் திருமணத்துக்கு 30 கோடி ரூபாய்க்கு ரிசப்ஷன் அரங்கம் போட்டிருக்கிறார். 1 மாத காலமாகவே இந்த செட் வேலைகள் நடந்துள்ளன.. 20 ஆயிரம் பேர் இந்த ரிசப்ஷனுக்கு வரப்போவதாக தெரிகிறது.

2000 கோடி, 3000 கோடியில் கல்யாணம் என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு செலவழிக்க வாய்ப்பில்லை.. கல்யாணம், ரிசப்ஷன் என சேர்த்து 600, 700 கோடி செலவழிக்கப்பட்டிருக்கலாம்.. இந்த வைபவத்தில் 200 வகையான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.. 1000 பவுன் நகை, 5000 கோடி வரதட்சணையாக மகளுக்கு தருகிறார் ஐசரி கணேஷ்.. தன்னுடைய மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.. அந்த அளவுக்கு மகளின் மீது பாசம் கொண்டவர் ஐசரி கணேஷ்..

களைகட்ட போகும் மாலத்தீவு

மாலத்தீவிலும் திருமண விழாவுக்கு 500 கோடிக்கு மேல் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக தயாராகிறது. அந்த நிகழ்விலும் 1000, 2000 பேருக்கு பல விஐபிகளுக்கு அழைப்பு தந்து, ஃபிளைட் டிக்கெட்டும் எடுத்து, அனைவரையும் மாலத்தீவுக்கு அழைத்துசெல்கிறார்..

மணமகனின் தாத்தா, ரஜினியை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர் நடராஜன் ஆவார்.. அவரது மகளின் மகன்தான் ரஷ்மின் குமார். அன்று பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் நடராஜன். இவருக்கு ஐசரி வேலன் காலத்திலிருந்தே நல்ல தொடர்பில் இருந்து வந்தவர் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+