Anbudan Kushi Serial, Pommukutty Ammavukku Serial: விஜய் டிவியில் விரைவில் 2 புது சீரியல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் இரண்டு புது சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன.

அன்புடன் குஷி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்று இரண்டு புது சீரியல்கள் ஒளிபரப்பாகி உள்ளன.

தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வரும் வேளையில், புது சீரியல்கள் ஒளிபரப்புவதிலும் போட்டிப்போட்டு வருகின்றன.

 விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவியில் சீரியல்கள் வார நாட்களில் மட்டுமே ஒளிபரப்பாகி வருகினறன. மற்ற நாட்களில் காமெடி, காமெடியுடன் கூடிய சமையல் நிகழ்ச்சி இவைகளுக்கு விஜய் டிவி வாரத்தின் இறுதி நாட்களை ஒதுக்கி விடும். அதோடு, விஜய் டிவியில் அதிக சீரியல்களும் கிடையாது.

 சன் டிவி

சன் டிவி

சன் டிவியில் காலையில் 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 3 மணி வரை, மாலை 6:30 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை என்று சீரியல்கள் மட்டுமே ஆக்கிரமித்து இருக்கும். அதுவும் வாரத்தின் ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும் சீரியல்கள் உண்டு.

 ஜீ தமிழ் டிவி

ஜீ தமிழ் டிவி

ஜீ தமிழ் டிவியில் மதிய நேரத்தில் சீரியல்கள் கிடையாது. மாலை நேரத்தில் ஜீ தமிழ் டிவியில் வரிசையாக சீரியல் ஆரம்பிக்கிறது. இதே பாணிதான் ஜெயா டிவியிலும். பாலிமர், ராஜ் தொலைக்காட்சி சானல்களில் கூட அப்படித்தான். இவைகளில் டப்பிங் சீரியல்கள் பலரால் விரும்பி பார்க்கப்படுகிறது.

 விஜயின் புது சீரியல்கள்

விஜயின் புது சீரியல்கள்

விஜய் டிவியும் மதிய நேரத்தில் ஆரம்பித்து வரிசையாக திங்கள் முதல் வெள்ளி வரை சீரியலில் களம் இறங்க தீர்மானித்து உள்ளது போலும். அதன் விளைவாக இப்போது இரண்டு புது சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன. ஏற்கனவே மதியம் 3 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவிக்கு மேலும் இரண்டு சீரியல்கள் எனும்போது...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+