சோசியல் மீடியாவை கலங்க வைத்த 31 வயது எழுத்தாளரின் மறைவு.. அரிதான புத்தகங்களை எழுதியவருக்கு இப்படியா மரணம் வரணும்
சென்னை: கோவை செட்டிபாளையத்தைச் சேர்ந்த 31 வயதான இளம் எழுத்தாளர் "நிஜந்தன்" திடீரென உயிரிழந்த சம்பவம் தமிழ் இலக்கிய உலகையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வாசிப்பும், எழுத்தும் தான் வாழ்க்கை என்று நம்பி வாழ்ந்த ஒருவரின் இவ்வளவு சீக்கிரமான பிரிவு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சியாக மாறியுள்ளது.

எழுத்தின் மூலம் கவனம் பெற்றவர்
நிஜந்தன் தனது "பிறழ்" என்ற குறுநாவல் மூலம் வாசகர்கள் மத்தியில் அறிமுகமானார். சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் காரணமாக ஒரு இளைஞன் சந்திக்கும் மன உளைச்சல்களை மிகவும் உணர்ச்சிகரமாக பதிவு செய்த அந்த படைப்பு, பலரையும் உள்மனதில் தாக்கிய ஒன்று.
அதன் பிறகு தொடர்ந்து வாசிப்பு, எழுத்து என இலக்கியத்தில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். புதிய நாவல்களை எழுதும் முயற்சியிலும் அவர் தீவிரமாக இருந்ததாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
அமைதியாக நடந்த போராட்டம்
ஆனால், இவரது வாழ்க்கையின் பின்னணியில் இருந்தது ஒரு பெரிய போராட்டம். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் தாக்கமாக, கடந்த 12 ஆண்டுகளாக "ஹாலோசினேசன்" (Hallucination) என்ற மனநிலை பிரச்சினையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நோயின் காரணமாக, தற்கொலை எண்ணங்களை தூண்டும் குரல்கள் தொடர்ந்து அவருடைய காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கும் என அவரது நெருங்கியவர்கள் பகிர்ந்துள்ளனர். அதனால், அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். மருந்துகள், மருத்துவமனைகள், தனிமை - இவையே அவரது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை நிரப்பியவை.
எழுத்தில் மீட்பு தேடியவர்
இந்த மனவாதைகளிலிருந்து வெளியே வர ஒரு வழியாக அவர் தேர்ந்தெடுத்தது - எழுத்து. "நான் எழுதினால் தான் நான் உயிரோடு இருக்க முடியும்" என்ற நிலைப்பாட்டில், அவர் புத்தகங்களிலும், வாசிப்பிலும் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தார். அவரது எழுத்துக்கள் பலருக்கு ஆறுதலாக இருந்தாலும், அவருக்குள் நடந்த போராட்டம் யாருக்கும் முழுமையாக தெரியாத ஒன்றாகவே இருந்தது.
திடீர் உடல்நலக்குறைவு
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மருந்துகளை எடுத்துக்கொண்டு தூங்கிய அவர், மறுநாள் சுயநினைவு இழந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
மருத்துவர்கள் கூறியதன்படி, பல ஆண்டுகளாக தொடர்ந்து எடுத்த மருந்துகளால் அவரது சிறுநீரகம் (கிட்னி) பாதிக்கப்பட்டதே உயிரிழப்புக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி பதிவு
நிஜந்தன் கடைசியாக சோசியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், மனநலம் ரொம்பவும் மோசமாக இருந்த தருணங்களில் நான் எடுக்கும் மருந்துகளின் அளவின் காரணமாக இரவில் நான் படுத்திருக்கும் இடத்தில், காலையில் பார்க்கும்பொழுது எச்சில் வடிந்து கிடக்கும்.
முடிந்தவரை உறவினர் வீட்டுக்கு செல்லாதே, தலையணையை பயன்படுத்தாதே என என்னிடம் சொல்லும்போதெல்லாம், அவர்கள் சொல்வது சரியென்றாலும் அதை சொல்லும் விதம் என்னை மேலும் நெறுக்கும், அந்த ஒவ்வாமையான பார்வையோடு சொல்லும் தருணத்தில் எல்லாம் அழுவேன் கண்ணீர் வராது, கண்ணீர் வராத அழுகையை யாரும் பொருட்படுத்துவதில்லை தானே.
அந்த ஒரு தருணத்தின் போது என் நாவலில் வரும் கோதுமை வாசம் கொண்டப்பெண் உருவெடுத்தாள். "படுக்கும்போதுதான், எச்சிலை அழுத்தித் துடைத்திருப்பதைத் தெரிஞ்சு, போனமுறை அவள் சொன்னது நினைவுக்கு வந்தது. 'ஆமா, நமக்கெல்லாம் வடியும் எச்சிலில் அருவருப்பில்லை.'' என்று அந்த பதிவில் உருக்கமாக அவர் கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் கண்ணீர் அஞ்சலி
அவரது மறைவுச் செய்தி வெளிவந்தவுடன், சமூக வலைத்தளங்கள் முழுவதும் இரங்கல் பதிவுகள் குவிந்துள்ளன. நண்பர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் அவரது இழப்பை ஏற்க முடியாமல் தங்களது வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பே "உடல்நிலை சரியில்லை" என்று அவர் எழுதியிருந்த பதிவு தற்போது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. "அவர் மீண்டும் வந்து எழுதுவார்" என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு, இந்த திடீர் செய்தி பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது.
ஒரு எழுத்தாளரின் அமைதியான குரல்
நிஜந்தன் வாழ்ந்த வாழ்க்கை, வெளியில் சாதாரணமாக தோன்றியிருக்கலாம். ஆனால், உள்ளே நடந்த போராட்டம் மிக ஆழமானது. அவர் எழுதிய ஒவ்வொரு வரியும், அவரின் வலியின் பிரதிபலிப்பாக இருந்திருக்கலாம்.
இப்போது அவர் இல்லை என்றாலும், அவரது எழுத்துகள் இன்னும் பலரின் மனதில் வாழும். ஒரு இளம் குரல் இவ்வளவு சீக்கிரம் மௌனமாகி விட்டதே என்பது தான் அனைவரின் மனதையும் உடைக்கும் உண்மை.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா













Click it and Unblock the Notifications