ஜெமினி கணேசனை கூட விட்டுவைக்காத பயில்வான் ரங்கநாதன்.. ஆமா, யாரந்த பிரபல நடிகர்? 37 நடிகைகள் நாசமா?
சென்னை: கேரளாவில் நடிகர்கள் விவகாரம் சர்ச்சைகளை அள்ளி கொட்டிவர, பிரபல நடிகர்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தந்திருக்கும் பேட்டி ஒன்று, இணையத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் , திரண்டு வந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
கேரளாவில் ஹேமா கமிட்டி வெளியிட்டிருந்த அறிக்கையின் அதிர்வலைகள் இன்னமும் குறையவே இல்லை. ஒவ்வொரு நடிகைகளாக வெளியே வந்து புகார்களை சொல்லி வருகிறார்கள்.. அதனடிப்படையில் ஒவ்வொரு பிரபலமும் கைதாவதும், முன்ஜாமீன் கோருவதுமாக இருக்கிறார்கள்.

பிரபல நடிகை: இப்படித்தான், பிரபல நடிகை ஒருவர், கடந்த மாதம், முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேல பாபு ஆகிய 4 பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார்..
"2013ல், "டி இங்கொட்டு நோக்கியே" என்ற ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.. ஒருநாள் நான் பாத்ரூமுக்கு சென்றபோது, ஜெயசூர்யா பின்னாடியிருந்து வந்து என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டுவிட்டார்.. இதனால் நான் அதிர்ச்சியடைந்து, பயந்துபோய் அந்த இடத்தைவிட்டே ஓடிவிட்டேன்.
செல்வாக்கு: தன்னுடைய ஆசைக்கு ஒத்துழைத்தால் பலன் கிடைக்கும் என்று ஓபனாகவே சொன்னார்.. நான் இதற்கு மறுப்பு சொன்னதால், எனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விட்டது. அதே போல, நடிகர் முகேஷூடன் "காலண்டர்" படத்தின் ஷூட்டிங்கின்போது , என்னிடம் தவறாக நடந்து கொண்டார்... தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினர் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார்..
நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேல பாபு என்னிடம் வெளிப்படையாக பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்து, துன்புறுத்தினார்கள்" என்று புகார் கூறியிருந்த நடிகை, இந்த 4 பேர் மீதும் போலீசில் புகார் தந்திருந்தார்.
ஜாமீன்: இதில், நடிகர் எடவேல பாபு மீது வழக்கு பதியப்பட்டு, நேற்று கைதானார்.. ஆனால், 3 மணி நேர நீண்ட விசாரணைக்கு பிறகு, ஜாமீனிலும் வெளியே வந்துவிட்டார். இப்போது, முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பில்ல ராஜூ, வக்கீல் சந்திரசேகரன் மற்றும் படத் தயாரிப்பாளர்கள் நோபிள் மற்றம் விச்சு ஆகியோர் மீது, இதே நடிகை தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனால் கேரளா திரையுலகமே பரபரப்பில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நிவின் பாலி குறித்து பகீரை கிளப்பியிருக்கிறார்.
நிவின் பாலி: நிவின் பாலின் மீது 37 நடிகைகளை குற்றம் சாட்டியிருக்கிறார்களே? நிவின் பாலி ஏதாவது பெண்ணை அழைத்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கிறாரா? என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பயில்வான் ரங்கநாதன், "37 என்ன 107 என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம். காரணம், சினிமா அப்படி மோசமானது.. சில பெண்கள் தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற நினைப்பில் சிக்கிக் கொள்கிறார்கள்.
ஏனென்றால், நிவின் பாலின் இளம் நடிகர் அழகாக இருக்கிறார். வசீகரமான தோற்றத்தை கொண்டிருக்கிறார். அதுக்காக பெண்களை தேடி செல்லவில்லை, தேடி வரும் பெண்களை உபயோகித்துக் கொண்டிருப்பார்கள்... புகார் தந்துள்ளவர்கள் எல்லாருமே சினிமா சம்பந்தப்பட்டவர்கள்தான். ஆனால், ஏன் இவரை பற்றி, இந்த பெண்கள் போலீசில் அப்போதே புகார் ஏன் தரவில்லை?
ஜெமினி கணேசன்: ஜெமினி கணேசனும் அந்த காலத்தில் பல நடிகைகளோடு தொடர்பில் இருந்தவர்தான். காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் எனக்கு ஆரம்ப கட்டத்தில் நிறைய பழக்கம்.. சைவ உணவுதான் சாப்பிடுவார்.. அவ்வை சண்முகி படத்தின்போது என்னை அழைத்து பேசிக் கொண்டிருப்பார்.. எப்படி உங்களுக்கு காதல் மன்னன் பெயர் வந்தது என்று கேட்டேன்.. அதற்கு அவர், "அந்த காலத்தில் என்மீது கிரஷ் பெண்கள் நிறைய பேர் இருந்தார்கள்.. என்றெல்லாம் நிறைய விஷயம் சொன்னார்.
தன்னுடைய 75வது வயதிலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்தார்.. ஆனால், அவராக எந்த பெண்ணையும் தேடி செல்லவில்லை. இந்த லிஸ்ட்டில் இருப்பவர் தான் நிவின் பாலி..
நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் புகார் கொடுத்திருந்தாங்க.. அந்த பெண் கொடுத்த தேதியில், அவர் கேரளாவில் இருந்ததற்கான ஆதாரத்தை காட்டிவிட்டார். நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரம் தான். பாலி மீது 37 பெண்கள் புகார் தந்திருக்காங்க.. இவராக சென்று யாரையாவது கையைப்பிடித்து இழுத்தாரா? இவர்களாகவே தான் சென்றார்கள்.
அட்ஜெஸ்ட்மென்ட்: சினிமா உலகை பொறுத்தவரை, நடிகர்கள் யாராக இருந்தாலும், அவர்களாக பெண்களை தேடி போக வேண்டிய அவசியமில்லை.. அவர்களாகவே வந்து விழுவார்கள் இது இந்த மண்ணோட இயல்பு.. சினிமாவில் மட்டுமில்லை சின்னத்திரையிலும் இது நடக்கிறது. 2 சீரியலில் நடிச்சிட்டு, உடனே 2 கோடிக்கு கார் வாங்குவது எப்படி? எல்லாமே அட்ஜெஸ்ட்மெண்ட் தான் " என்றார் பயில்வான் ரங்கநாதன்.
பயில்வான் ரங்கநாதனின் இந்த பேட்டிக்கு மீண்டும் சலசலப்புகளும், எதிர்மறையான விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. பெண்களை அவதூறாக பேசுதல் தனிநபரை அவமதித்தல் போன்ற பிரிவுகளின் கீழ், ஏற்கனவே டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, அனைவரையுமே இப்படி ஆதாரம் இல்லாமல், அவதூறாக பேசுவது சரியா? டாக்டர் காந்தராஜைவிட மோசமாக பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் மீதும் புகார் தரப்படுமா? என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications