சூர்யவம்சம் காட்சியை ரீகிரியேட் செய்த 3 BHK குழு! ராதிகாவாக தேவயானி! சின்ராசு யார் தெரியுமா?
சென்னை: சூர்யவம்சம் படக் காட்சியை 3 BHK குழு ரீகிரியேட் செய்துள்ளது வைரலாகி வருகிறது. அந்த படத்தில் நடித்த சரத்குமாரும் தேவயானியும் இந்த 3 பிஎச்கேவிலும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது.

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 3 BHK திரைப்படம் வரும் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டில் மழை வெள்ளத்தால் கஷ்டப்படும் போதுதான் சொந்த வீட்டின் அருமை புரியும். அந்த வகையில் மழை வெள்ளத்தால் வீட்டில் இருக்கும் பொருட்களை பத்திரப்படும் சரத்குமாரும் தேவயானியும் சொந்த வீடு வாங்க எண்ணுகிறார்கள்.
இவர்களின் இந்த கனவுக்கு மகன் சித்தார்த்தையும் மகளையும் நன்கு படிக்க வைக்க நினைக்கிறார்கள். கையில் 7 லட்சத்துடன் சொந்த வீடு வாங்க சரத்குமார சென்ற போது, "7 லட்சத்தில் சொந்த வீடா, சார் நீங்கள் எந்த காலத்தில் இருக்கீங்க" என அந்த கட்டுமான நிறுவனத்தினர் கேட்கின்றனர்.
இதனால் தோய்ந்த முகத்துடன் வரும் சரத்குமார் எப்படியாவது 3 பிஎச்கே வீட்டை வாங்க நினைக்கிறார். இவரின் எண்ணம் ஈடேறியதா இல்லையா என்பதுதான் கதை! இந்த படத்தின் புரமோஷன் விழாவில் சூர்யவம்சம் படத்தின் காட்சியை படக்குழுவினர் ரீகிரியேட் செய்தனர்.
அந்த காட்சியில் சரத்குமார், தேவயானி உள்ளிட்ட குடும்பத்தினர் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். அப்போது போட்டோகிராபர் எல்லாரும் வந்தாச்சா என கேட்க அதற்கு சரத்குமார் , ஹான் எல்லாரும் வந்தாச்சு என்கிறார்.
அதற்கு தேவயானி, என்னங்க சின்ராசு என சொல்லும் போது சித்தார்த் பாவமாக ஒரு ஓரத்தில் ஏக்கத்துடன் நிற்கிறார். அப்போது சரத்குமார், "என்ற குடும்பத்தில் எல்லாரும் வந்தாச்சு, நீ சீக்கிரம் எடு" என்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சரத்குமாரின் இந்த காட்சியை ஏற்கெனவே வரலட்சுமியும் தனது வீட்டில் வைத்து செய்து வீடியோ எடுத்திருந்தார். தலை பொங்கலுக்கு வந்த மகள், மருமகனுடம் புகைப்படம் எடுக்கிறார்கள். அப்போது அவருடன் நைசாக நிக்லோயை தனியே நிற்க வைக்கிறார் வரலட்சுமி. அவரிடம் பாவமாக முகத்தை வைத்துக் கொள்ளுமாறு சொல்கிறார்.
அவரும் என்ன என தெரியாமல் அது போல் நிற்கிறார். உடனே சுட்டியான வரலட்சுமி, அந்த சூர்யவம்சம் டயலாக்கை வீடியோவுடன் இணைந்து சின்ராசு முகத்தை காட்டும்போது நிக்கோலாய் முகத்தை காட்டியது என ராதிகா, சரத்குமாருக்கே சர்ப்ரைஸ் கொடுத்தார். அவர்களுக்கே தெரியாது. இந்த வீடியோவை வரலட்சுமி இன்ஸ்டாவில் போட்ட பிறகுதான் தெரியும். இந்த வீடியோவும் வைரலானது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications