Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணத்துக்காக கடத்தப்பட்ட நான்கு எழுத்து நடிகை? சில்க் ஸ்மிதா பட்ட அவஸ்தை.. படம் எடுத்த ஹீரோயின் யார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா உலகில் படத்தை எடுப்பதற்காக பைனான்ஸ் செய்வதும், வாங்கிய பணத்தை திருப்பி தருவதும் இயல்பாக நடந்து வரக்கூடிய விஷயமாகும்.. ஆனால், சிலசமயம், பணத்தை வசூலிக்க விரும்பத்தகாத செய்கைகளை பைனான்சியர்கள் தரப்பில் செய்வதும் நடக்கும்.. அதுபோல பாதிக்கப்பட்டவர்கள் திரையுலகில் உண்டு என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் விரிவாகவே தெரிவித்துள்ளார்..

KingWoods News என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "படம் தயாரிப்பதற்காக பைனான்சியர்களை அணுகும் சூழ்நிலை ஏற்படத்தான் செய்யும்.. அந்த படம் ஓடினாலும் சரி, ஓடாவிட்டாலும் சரி, பைனான்சியரிடம் வாங்கிய பணத்தை தந்துதான் ஆகணும்..

Television 4 letter actress Cinema Finance 4

ஜாதிமான்

எனக்கு தெரிந்த நபர், கப்பல் துறைமுகத்தில் வேலை பார்த்தவர்.. பிறகு ஜாதிமான் என்று ஒரு படத்தை எடுத்தார்.. அவர்தான் படத்தின் ஹீரோ. அந்த படத்தில் அப்பா - மகன் என இரு கேரக்டர்களிலும் இவரே நடித்தார்.. அதிலும் லயோலா கல்லூரி மாணவராக டான்ஸ் எல்லாம் ஆடினார்.. ஆனால், அந்த படம் பெட்டிக்குள் முடங்கிவிட்டது.

காரணம், இரண்டரை லட்சம் இருந்தால் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலைமை வந்தது.. ஆனால், அதை அவரால் செய்யவே முடியவில்லை. 1998-ல் எடுக்கப்பட்ட அந்த படத்தின் உழைப்பு, பணம் அத்தனையும் வீணாகிவிட்டது.. கடைசிவரை ரிலீஸ் செய்ய முடியவில்லை.. இப்படி பல படங்கள் ரிலீஸ் செய்யப்படாமலேயே முடங்கிவிட்டன..


மனைவிகள் கடத்தல்

அதேபோல, ஆனால், சினிமாவில் சொன்னபடி பைனான்ஸ் பணத்தை தராவிட்டால், தயாரிப்பாளர்களின் மனைவிகளை தூக்கி செல்வது அல்லது நடிகைகளை தூக்கி செல்வது போன்ற செயல்களும் அரிதாக நடப்பதுண்டு..

இப்படி தமிழ் நடிகைகளுக்கும் இப்படியான பைனான்ஸ் பிரச்சனைகள் வந்துள்ளன.. ஒரு பிரபல 4 எழுத்து நடிகை, தன்னுடைய கணவரை டைரக்டராக்கி படம் ஒன்றை சொந்தமாக தயாரித்தார்.. தானே அதில் ஹீரோயினாக நடித்திருந்தார்.. முரளிதான் அந்த படத்தின் ஹீரோ..

ஆனால், அந்த படம் 2வது நாளே தோல்வியை சந்தித்தது.. சொந்த படம் என்றாலும், 2 கோடி ரூபாய் பைனான்சியரிடம் கடன் வாங்கிதான் அந்த படத்தை எடுத்திருந்தார்.. இறுதியில், 3 கோடி ரூபாய் நஷ்டமடைந்ததுடன், 1 கோடி ரூபாய் கடனுக்கும் ஆளானார்..

நடிகையை கடத்தி?

குறிப்பிட்ட நாள்வரை பணம் அவருக்கு கிடைக்கவேயில்லை.. இதனால் கடுப்பான பைனான்சியர் தரப்பு, அந்த நடிகையை கடத்தி கொண்டுவர சொல்லி உத்தரவிட்டது.. அந்த நேரம் பார்த்து, சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவும், உடனே அதில் நடிக்க சம்மதித்து, ஒப்பந்தமும் போடப்பட்டு, 1 கோடி ரூபாய் அவர்களிடமிருந்து பெற்று, பைனான்சியருக்கு தரப்பட்டது.

நடிகைகளை கடத்தி கொண்டுபோய் கண்ணியக்குறைவாக நடத்த மாட்டார்கள்.. காருக்குள் அல்லது அலுவலகத்தில் அமைதியாக உட்கார வைத்துவிடுவார்கள்.. இதுவே அந்த பிரபல நடிகைகளுக்கு அவமானம்தான்,.

அதேகாலகட்டத்தில் நடிகை ரம்பாவுக்கும் இப்படியொரு சிக்கல் வந்தது.. தன்னுடைய அண்ணனை வைத்து, 3 ரோஸஸ் என்ற படம் எடுத்தார்.. ஜோதிகா, ரம்பா, லைலா என 3 நடிகைகள் நடித்திருந்தனர்.. இந்தி நடிகர் கோவிந்தா ரம்பாவுக்கு நல்ல பழக்கம் என்பதால், அவரும் அப்படத்தில் நடித்திருந்தார்..

ரம்பா, சில்க் ஸ்மிதா

இறுதியில் த்ரீ ரோஸஸ் படம் தோல்வியை சந்திக்க, கடுமையான கடனில் ரம்பா சிக்கிக்கொண்டார். தன்னுடைய அண்ணனை நம்பி படம் எடுத்து, சென்னையில் தனக்கு சொந்தமாக இருந்த வீட்டையும் விற்று கடனை அடைத்தார்.. சில்க் ஸ்மிதாவும் 2 படங்கள் எடுத்து கடனாளியாகிவிட்டார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+