கிர்ர்ரென பொங்கிய "கோலி சோடா ரைசிங்".. கெத்தான ரகு தாத்தா.. இன்று ஒரே நாளில் 4 படங்கள்! OTT This Week
சென்னை: தியேட்டர்களில் ஓடி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 4 படங்கள் இன்றைய தினம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எந்தெந்த படம், எந்தெந்த ஓடிடி தளத்தில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது தெரியுமா?
அந்தவகையில், இன்றைய தினம் ஓடிடியில் வெளியாக உள்ள படம் "நண்பன் ஒருவன் வந்த பிறகு".. பவானி ஸ்ரீ, மோனிகா, இர்பான் மற்றும் ஆர்.ஜே.விஜய் கலக்கப்போவது யாரு பாலா, குமரவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், ஏகப்பட்ட ஸ்பெஷாலிட்டிகளும் இந்த படத்தில் இருக்கின்றன..

ஓடிடி தளம்: குறிப்பாக, ஏற்கனவே "மீசைய முறுக்கு" படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்த ஆனந்த், இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. அத்துடன் முக்கிய கதாபாத்திரத்திலும் ஆனந்த் நடித்துள்ளார்.
அதேபோல, ஏ.எச்.காஷிப் இசையமைத்திருக்கும் இந்த படத்தில், 2 பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. காரணம், தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.. இன்னொரு பாடலை ஜிவி பிரகாஷ் பாடியிருக்கிறார்.
விமர்சனம்: இந்த படம் கடந்த மாதம் 2-ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.. இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் "நண்பன் ஒருவன் வந்த பிறகு" படம் வெளியாகி உள்ளது.
அடுத்ததாக இன்றைய தினம் ஓடிடியில் வெளியாக உள்ள படம் "கோலி சோடா ரைசிங்".. கடந்த 2014ம் ஆண்டு "கோலி சோடா" படம் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும், முழுக்க முழுக்க புதுமுகங்களே நடித்திருந்தனர்.
2018-ல் வெளியாகியிருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும், முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர்கள் இல்லாமல் புது நடிகர்களும் நடித்திருந்தனர். ரப்நோட் நிறுவனம் தயாரிப்பில் அச்சு ராஜா மணி இசையில் வெளியான இந்த படம் வெளியாகியிருந்தது.
கோலி சோடா: கலவை விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில், அப்படத்தின் இன்னொரு பாகம் வெப் சீரிஸாக, விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவருகிறது.. இதற்கு "கோலி சோடா ரைசிங்" என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது.. சேரன், ஷியாம், ரம்யா நம்பீசன், அபிராமி, அம்மு அபிராமி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருப்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த வெப்சீரிஸ் ஏற்படுத்தி வந்தது.
இன்றைய தினம், "கோலி சோடா ரைசிங்" வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 7 மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த சீரிஸின் நடுவில் சேரன் தாடியுடன் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறாராம்.
ரகு தாத்தா: அடுத்ததாக ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் "ரகு தாத்தா"வும் அதிக அளவிலான ஆர்வத்தை தந்த படமாகும்... யாமினி யங்கனமூர்த்தி ஒளிப்பதிவில், சுரேஷ் டி எஸ் எடிட்டிங்கில் வெளிவந்துள்ள இந்த படத்துக்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவன அதிபர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தின் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி, ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.. இந்தி திணிப்பு, ஆணாதிக்கம் போன்றவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் இன்று ஜி5 தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
நுனக்குழி: கேரளாவில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் மிகவும் கவனம் பெற்ற டைரக்டராக உருவாகியிருப்பவர் ஜித்து ஜோசப்.. இவர் ஏற்கனவே மோகன்லாலை வைத்து "நேரு" என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.. இப்போது 'நுனக்குழி' என்ற படத்தை ஜித்து ஜோசப் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பாசில் ஜோசப், கிரேஸ் ஆண்டனி போன்றோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்புகள் பெருக ஆரம்பித்துவிட்டது.
எமோஷனல், திரில்லர் படங்களில் கலக்கி கொண்டிருக்கும் ஜித்து ஜோசப், முதல்முறையாக காமெடி ஏரியாவில் கால் வைத்துள்ளதும் கூடுதல் ஆர்வத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்திவிட்டது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, தியேட்டர்களில் வெளியாகி, கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது.. இந்த படமும் இன்று ஜி5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications