Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசு மேல காசு வந்து.. கமலின் கேரவனில் இவங்களா? 1000 லிட்டர் தண்ணீர்.. 7 ஸ்டார் ஓட்டல் போல.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா நடிகர்கள் ஒவ்வொருவரும் 4, 5 கேரவன்களை தற்போது வைத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு படங்களின் விற்பனையும் அதிகமாகி கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், கமல்ஹாசன் பற்றியும் முக்கிய தகவலை கூறியிருக்கிறார்.

AG Modern Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "2010ம் ஆண்டுக்கு பிறகே கேரவன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, கமல்ஹாசன், ரஜினிகாந்த் மட்டுமே கேரவனை பயன்படுத்தி கொண்டிருந்தார்கள்..

Television Caravan Kamal haasan

ஏனென்றால், வெளிப்புறங்களில் ஷூட்டிங் நடக்கும்போது, அங்கே ஒதுங்குவதற்கு, டாய்லெட் செல்வதற்கு, ஓய்வு எடுப்பதற்கு வசதிகள் இல்லை. இந்த வசதிகள் அனைத்தும் கேரவனில் இருக்கிறது. எனவே, நட்சத்திரங்களுக்கு இந்த கேரவன் தேவைப்படுகிறது. இப்போதுதான் ஒவ்வொருவரும் 4, 5 கேரவன்களை வைத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு படங்களின் விற்பனையும் அதிகமாகி கொண்டிருக்கிறது.

3 கேரவன்கள்: இதில் 2 கேரவனை பயன்படுத்தியவர் இயக்குனர் மணிவண்ணன்.. முதன்முதலில் 3 கேரவன்களை வாங்கி, படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டவர் மணிவண்ணன்தான்..

இப்போது கமல்ஹாசன் ஆடம்பரமான கேரவனை பயன்படுத்துகிறார். 7 ஸ்டார் ஓட்டலிலுள்ள அத்தனை வசதிகளும் இநத கேரவனில் உள்ளது.. தூங்கும் வசதி, சமைக்கும் வசதி, ரெஸ்ட் எடுக்கும் வசதி , பிரமுகர்களை சந்திக்கும் வசதி என அத்தனை வசதிகளும் உள்ளன.. இதில் 4 ஏசிகள் பொருத்தப்பட்டுள்ளன.. அதுமட்டுமல்ல, மற்ற கேரவன்களில் 50 லிட்டர்தான் தண்ணீர் பிடிக்க முடியும். இதில் 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வசதி உள்ளது..

ஸ்பெஷல் டிரெயினிங்: இதில் ஏதேனும் புதிய மாற்றங்களையும கமலஹாசன் அடிக்கடி செய்து கொண்டே இருப்பார்.. இந்த கேரவனை ஓட்டுவதற்கு விசேஷ பயிற்சி பெற்ற டிரைவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.. இதில், முககிய அம்சம் என்னவென்றால் , கமல்ஹாசன் மட்டுமே இந்த கேரவனை பயன்படுத்துவதில்லை..

தமிழகத்திற்கு பிரதமர் எப்போதெல்லாம் வருகிறாரோ, அப்போதெல்லாம் இந்த 7 ஓட்டல் வசதி கொண்ட கேரவன் அனுப்பப்படுகிறது. அதேபோல, தமிழக முதல்வர் எங்காவது வெளியூர் சென்றால், அங்கே கேரவன் தேவைப்படுமானால், அப்போது இந்த கேரவன் உபயோகப்படுத்தப்படுகிறது. அந்தவகையில், தமிழக முதல்வரும, கமல்ஹாசனின் இந்த கேரவனைதான் பயன்படுத்துகிறார்.

வருமானம்: ஆக, பிரதமருக்கும், முதல்வருக்கும் பயன்படுகிற விதத்தில், ஆடம்பரமாக உருவாக்கப்பட்டுள்ளது, கமல்ஹாசனின் கேரவன். இந்த கேரவனில் கமல்ஹாசனும் தங்குகிறார்.. பிரதமரும் தங்கியிருக்கிறார். முதல்வரும் தங்கியிருக்கிறார்.. எனவே, இது ஒருவிதத்தில், கமல்ஹாசனுக்கு வருமானத்தை தருகிறது என்றுதான் சொல்ல வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+