மறைந்த இயக்குனர் குடும்பத்தை அழ வைத்த விஜய் டிவி..அதுக்குன்னு இப்படியா..திட்டும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் எட்டாவது ஃபிலிம்பேர் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வரும் மே 14ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் சார்பாக அவருடைய குடும்பத்தினரிடம் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதை பார்த்து அவர் இயக்கத்தில் நடித்த நடிகர்கள் பலர் மேடையிலே கண் கலங்கி அழுதிருக்கின்றனர். இப்போது இந்த பிரமோ வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் மக்களின் மனம் கவர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், சீரியல்கள் என பல தரப்பட்ட வரிசையில் பல விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருவது போல இந்த வாரமும் வருடமும் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதில் சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் மரணம் அடைந்த இயக்குனர் தாய் செல்வம் சார்பாகவும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தாய் செல்வம் இயக்கத்தில் நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், கல்யாணம் முதல் காதல் வரை, மௌனராகம் 1 உள்ளிட்ட சீரியல்களை இயக்கியிருந்தார்.

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் அவர் பணியாற்றி இருக்கிறார். எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி என்ற படத்தையும் இவர்தான் இயக்கியிருக்கிறார். அதோடு இவர் இயக்கிய கடைசி சீரியல் ஆன ஈரமான ரோஜாவே சீரியல் பணி புரிந்து கொண்டிருக்கும் போது தான் இவர் காலமானார்.
இந்த நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக சிறந்த இயக்குனருக்கான விருது கொடுத்திருக்கின்றனர். அந்த விருதை அவருடைய மனைவி வாங்கி இருக்கிறார். தாய் செல்வம் இயக்கிய சீரியலின் கதாநாயகன் கதாநாயகிகள் அனைவரும் இந்த விருதை இணைந்து கொடுத்திருக்கின்றனர். அப்போது அவர்கள் உருக்கமாக அவரைப் பற்றி பல தகவல்களை பேசி கண்கலங்கி விருது வாங்க வந்தவர்களையும் அழ வைத்திருக்கின்றனர்.

இந்த பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் ஏற்கனவே மறைந்த தாய் செல்வத்தின் குடும்பத்தினர் அந்த இழப்பிலிருந்து வெளிவந்திருக்க மாட்டார்கள். அதற்குள் அவர்களை கூப்பிட்டு வைத்து மீண்டும் மீண்டும் அழ வைத்து அனுப்புகிறார்களே இது சரியா? விருது வழங்கும் போது கூட எதற்காக இப்படி அடுத்தவர்களை அழ வைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் இந்த ப்ரோமோவில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஏற்கனவே தங்களுடைய உழைப்புக்கு கிடைக்கும் வெகுமதி ஆகவும் அங்கீகாரமாக கருத வேண்டிய இந்த விருதுகளை விஜய் டிவியில் அழுகாச்சி சீன்கள் போட்டு அனைவரும் அனுதாப அலைகளால் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் விருது வாங்கும் போது அழ வேண்டும் என்று சம்பிரதாயம் இருக்கிறதா? என்ன என்று பல கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications