9 வயது வித்தியாசத்தில் நடிகையிடம் விழுந்த தனுஷ்? இருவரின் ராசி பொருத்தம் கவனிச்சீங்களா? அதென்ன 21?

Subscribe to Oneindia Tamil
சென்னை பிரபல நடிகை மிருணாள் தாகூர், தனுஷூடன் நெருக்கமாக இருப்பதாகவும், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஜோடியாக விழாக்களில் பங்கேற்ற போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.. இப்படி இருவரும் சேர்ந்தே வருவதால் கிசுகிசுக்களும் ஆரம்பமாகி உள்ளன.. தனுஷ் - மிருணாள் தாகூர் உறவு குறித்து பாலிவுட்டில் செய்திகளும் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கின்றன. மற்றொருபக்கம் இவர்கள் 2 பேருக்கும் வயது., ராசி, பிறந்தநாள் போன்ற விவரங்களை நெட்டிசன்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.பிரபல நடிகர் தனுஷ் பாலிவுட்டிலும் கால் பதித்து, பல படங்களில் நடித்து வருகிறார்.. அந்தவகையில்,தற்போது ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் புதிய இந்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.. மற்றொருபக்கம் ஏராளமான பாலிவுட் விழாக்களிலும் பங்கேற்று வருகிறார்.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர்

அதேபோல, சீதாராமம் படத்தின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர்.. இவர் குறுகிய கால கட்டத்தில் முன்னணி கதாநாயகி அந்தஸ்தை பெற்றவர்.. பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள்..இந்நிலையில், மிருணாள் தாக்கூரும், தனுஷூம் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தீவிரமாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் பாலிவுட் கேமராக்கள் இவர்களையே சுற்றி சுற்றி வருகிறது.

அடுத்தடுத்த சந்திப்புகள்

சமீப நாட்களாகவே, மிருணாள் தாக்கூர், தனுஷ் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது.. கடந்த 1-ந்தேதி தன்னுடைய பிறந்தநாளை மும்பையில் மிருணாள் தாக்கூர் கொண்டாடினார்.. அப்போது திடீரென என்ட்ரி தந்த தனுஷை கையை பிடித்து வரவேற்று, அவரது காதில் ஏதேதோ பேசி கொண்டிருந்தார் மிருணாள்.

அதேபோல, அஜய் தேவ்கன்- மிருணாள் தாக்கூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சன் ஆப் சர்தார்.. இதன் பிரிமியர் ஷோ-விலும், தனுஷ் - மிருணாள் கலந்து கொண்டிருந்தனர்..அதேபோல, ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற இந்தி படத்தில் தனுஷ் நடித்துள்ள நிலையில், 3-ந்தேதி மும்பையில் பார்ட்டி நடந்துள்ளது. இதிலும், தனுசுடன் மிருணாள் தாக்கூரும் பங்கேற்றார்.

இப்படி தொடர்ந்து இருவரும் பங்கேற்று வருவதால்தான், இவர்களுக்குள் காதல், கல்யாணம் என்பது போன்ற பேச்சுகள் வலம் வந்தவண்ணம் உள்ளன. இவர்கள் 2 பேரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், இந்த திருமணத்துக்கு தனுஷ் வீட்டில் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன.

ராசியை கவனிச்சீங்களா

இதற்கு நடுவில் தனுஷ்,மிருணாள் தாக்கூருக்கும் இடையேயான வயது வித்தியாசம் என்ன? இருவரும் என்ன ராசிக்காரர்கள்? என்றெல்லாம் இணையத்தில் செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன..அதாவது, தனுஷிற்கு 42 வயது, மிருணாளுக்கு 33 வயதாகிறது. அதாவது, 9 வயது வித்தியாசம் உள்ளதாக சொல்கிறார்கள்... ஆனால், இருவரின் பிறந்தநாட்களுமே, சில நாட்கள் மட்டுமே வித்தியாசப்படுகிறதாம்.

அதேபோல தனுஷுக்கு 21 வயதில் திருமணம் நடந்தது. இந்த திருமணம் நடந்து முடிந்து தற்போது 21 வருடங்களாகிறது.. இந்த 21 என்ற நம்பர்தான், தனுஷூக்கு ராசியான நம்பரோ? என்று இணையவாசிகள் கேட்டு வருகிறார்கள்,..அதுமட்டுமல்ல, தனுஷ், மிருணாள் இருவருமே ஒரே ராசியினராம்.. அதாவது இருவரும் சிம்ம ராசிக்காரர்கள்! இதையும் சோஷியல் மீடியாவில் பலரும் பகிர்ந்து, இந்த பொருத்தத்தை கவனித்தீர்களா? என்று கேட்டு வருகிறார்கள்.

நீர்த்துப்போன கிசுகிசு?

இப்படி தீயாய் பரவி வரும் செய்திகளுக்கெல்லாம் இதுவரை மிருணாள் - தனுஷ் இருவருமே விளக்கமும் சொல்லவில்லை, அதனை இதுவரை மறுக்கவும் இல்லை..எனவே, தனுஷ், மிருணாள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா? அல்லது லிவிங் டூ கெதர் முறையில் வாழப்போகிறார்களா? அல்லது இதுவும் அல்லது இதுவும் நீர்த்துப்போய் கிசுகிசுவாகவே போகுமா? என்றெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

{https://lh3.googleusercontent.com/a/ACg8ocJWPKElIHjZrs8SP6KWxjayVJvW4OFt5t7gkWqNEMw2AKqtjdnM=s40-p}
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+