தலைவருக்கு உயிரையே குடுப்பேன் நல்ல ஆல்பம் குடுக்க மாட்டேனா?...அனிருத்!
சென்னை: சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைப்பெற உள்ளது.
விழாவில் கலந்துக்கொண்ட விழாவின் நாயகன் அனிருத் பேசுகையில் தலைவருக்காக என் உயிரையே கொடுப்பேன், ஒரு நல்ல ஆல்பம் தர மாட்டேனா என்று கூறினார்.
படத்தின் பாடலையும் பாடி அசத்தினார். நிகழ்சசி வரும் ஞாயிறு அன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

தர்பார் ட்ரைலர்
சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்ட நிலையில் வரும் ஞாயிறு அன்று மதியம் 2:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

அனிருத் இசை
இசை அமைப்பாளர் அனிருத் பேசுகையில் தலைவருக்காக உயிரையே கொடுப்பேன். ஒரு நல்ல ஆல்பம் கொடுக்க மாட்டேனா என்று கூறியுள்ளார். அதோடு, இசை அமைக்கையில் ரஜினி உடன் இருந்த ரசித்த வீடியோக்கள் வைரலாக பரவியுள்ளன. படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க. நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.

விழாவில் நட்சத்திரங்கள்
இசை வெளியீட்டு விழாவில் லதா ரஜினிகாந்த், சவுந்தரயா உள்ளிட்ட ரஜினிகாந்த் குடும்பத்தினர் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள். கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். இயக்குநர் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டு உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் தர்பார்
கண்ணாடியை ஸ்டைலாக கழட்டி மாட்டுவதும், போலீசை லெஃப்ட்ல வச்சுக்கோ ரைட்ல வச்சுக்கோ ஸ்ட்ரெயிட்டா வச்சுக்கோன்னு சொல்வதும், ஒரிஜினலாவே நான் ரவுடிதாம்மான்னு சொல்லி இது எப்படி இருக்குன்னு கேட்பதும்... அட.. அட வயசானாலும் ரஜினிக்கு அழகும் ஸ்டைலும் இன்னும் போகலைதான்!

விவேக் பேச்சு!
சிவனோடு செட்டிங்கும் போடறார்.. எமனோட கட்டிங்கும் போட்டுட்டு வர்றரரே.. நம்மளா நைசா ஒரு பால் போட்டா அப்ப கூட அசராம அப்படியா அப்பிடீன்னு கேட்பார்னு பேசினார். இதை எல்லாம் முழுசா என்ன நடந்ததுன்னு பார்க்கணும்னா ஞாயிறு மதியம் சன் டிவியை பாருங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications