என்னாது தலைவன் ஜி.பி. முத்து கைது செய்யப்பட்டாரா?.. என்ன தவறு செய்தார்?.. ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை: பிக்பாஸ் மற்றும் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து கைது செய்யப்பட்டதாக ஒரு புகைப்படம் டிரென்டாகி வருகிறது.
டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜி பி முத்து. இவர் ஒரு நாளைக்கு 75 வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் நடிப்பு திறன், நடன திறன்களை இவர் வெளி கொண்டு வந்தார்.
இவரை பலர் கடுமையாக விமர்சனம் செய்ததால் இவரும் இவருடைய வட்டார மொழியில் கெட்ட வார்த்தைகளை பேசினார். இந்த நிலையில் இவர் கார் வாங்கிவிட்டார், தனது நண்பர் இறந்துவிட்டதால் அவருடைய பெண் குழந்தைகளையும் சேர்த்து இவரே வளர்த்து வருகிறார்.
இதனால் ஜி பி முத்து மீது நிறைய பேருக்கு மரியாதை இருக்கிறது. அவர் தனது குழந்தைகளையும் மனைவியையும் அன்பாக பார்த்துக் கொள்ளும் விதமும் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. இவர் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்து கொண்டார். இவர்தான் முதல் போட்டியாளராக அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

உடல்நிலை பாதிப்பு
அவரது மகனுக்கு உடல்நிலை பாதிப்பு என்பதை அறிந்து ஜிபி முத்து 13 நாட்களிலேயே வெளியேறினார். அவர் மட்டும் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் அவர்தான் வெற்றியாளர் என பலர் கூறி வந்தனர். இந்த நிலையில் இவர் ஓ மை கோஸ்ட் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த பட விழாவில் சன்னி லியோனுக்கு இவர் பால்கோவா ஊட்டியதை 90 கிட்ஸ் காண்டாக பார்த்தார்கள்.

சன்னிலியோன்
அது போல் சன்னி லியோனும் அவர் மீது பாசமாக பழகினார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ஜிபி முத்து பல்வேறு கடைத் திறப்பு விழாக்கள், பட புரமோஷன்களில் கலந்து கொண்டார். தற்போது பிக்பாஸ் நிகழ்வுக்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஜிபி முத்துவை இரு போலீஸார் கைது செய்தது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள்
அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எங்கள் தலைவர் என்ன செய்தார், அவரை ஏன் கைது செய்தீர்கள் என கேட்கத் தொடங்கினர். இதையடுத்துதான் அந்த சீன் பரோல் படத்திற்காக புரமோஷன் வீடியோ என்பது தெரியவந்தது. இந்த வீடியோவில்தான் ஜிபி முத்து கைது செய்யப்படுவது போல் காட்சி அமைந்தது. இதைத்தான் ரசிகர்கள் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

போலீஸ் கெட்டப்
ஜிபி முத்துவின் யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில் ஆரம்பத்தில் போலீஸ் கெட்டப்பில் வரும் இருவர் ஜிபி முத்துவை கைது செய்வது போன்று இருந்தது. அந்த சீனின் ஸ்கிரீன்ஷாட்டைதான் சிலர் சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிலர் ஜிபி முத்து கைதாகிவிட்டதாகவே நினைத்துவிட்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications