Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதுக்கும் கலங்க கூடாதுடா கரிகாலா ..திடீர் டாக்டராக மாறிய குணசேகரன்..எதிர் நீச்சல் அட்ராசிட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கை ஒடிந்து போய் கட்டு போட்டு வந்த கரிகாலனுக்கு கை வைத்தியம் பார்த்து சரி செய்து திடீர் டாக்டராக மாறியுள்ளார் ஆதி குணசேகரன். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் டிவி சீரியலின் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. நெட்டிசன்கள் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பட காட்சியை போட்டு மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர்.

வீட்டு பெண்களை அடுப்பங்கரைக்குள் அடிமையாக அடக்கி வைத்திருக்கிறார் ஆதி குணசேகரன். தனது மனைவி மட்டுமல்லாமல் தம்பி மனைவிகளையும் அடக்கி ஆள நினைக்கிறார். கடைசி தம்பியின் மனைவி ஜனனி எல்லாவற்றையும் எதிர்த்து கேள்வி கேட்கிறாள். தன்னுடைய சகோதரிகளையும் கேள்வி கேட்க சொல்கிறாள். ஜனனிக்கு ஆதரவாக வருகிறார் அப்பத்தா. கணவனின் ஆதரவும் ஜனனிக்கு கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் அப்பத்தாவின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

Aadhi Gunasekaran Vasul Raja MBBS netisions Memes Ethir Neechal Serial

ஜீவானந்தம் என்று அப்பத்தா அடிக்கடி சொல்கிறார். யார் அந்த ஜீவனந்தம் என்று ஜனனிக்குள் கேள்வி எழுகிறது. அந்த ஜீவனந்தமும் வந்து விட்டார். அதிகமாக நிலம் வைத்திருக்கும் பெரு முதலாளிகளிடம் இருந்து நிலத்தை வாங்கி இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கும் போராளியாக இருக்கிறார் ஜீவானந்தம். எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம்தான் ஜீவானந்தமாக நடித்திருக்கிறார்.

ஒரு பக்கம் கோடீஸ்வரர்கள் மற்றொரு பக்கம் வறுமை இருக்கிறது பணக்காரர்கள் எல்லாம் இல்லாத ஏழைகளுக்கு நிலத்தை கொடுக்கலாமே என சமத்துவம் பேசுகிறார். அருண் ஆதிரைக்கு திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. கதையில் இப்போதுதான் சுவாரஸ்யமான திருப்பங்கள் வரப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஆதி குணசேகரனின் அதிரடி செயல்பாடுகள் வசனங்கள் அனைத்தும் மீம்ஸ் ஆக சமூக வலைத்தளங்களில் இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆதிரையை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட கரிகாலனின் கை ஒடிந்து போய் கட்டு போட்டு வந்திருக்கிறான்.

அதை பார்த்த குணசேகரனோ ஏய் என்னப்பா என்ன கையை ஒடிச்சிட்டாங்க என்று கேட்க கீழே நொறுங்கிடுச்சி மாமா என்று அப்பாவியாக சொல்கிறார் கரிகாலன்.

என்னத்த நொறுக்கிட்டாங்க..கண்ணாடியா நொறுங்கிறதுக்கு என்று கேட்டுக்கொண்டே வைத்தியம் பார்க்க ஆரம்பிக்கிறார். கை கட்டை அவிழ்த்து நன்றாக தொங்க விடு கையை நீட்டு.. என்று சொல்ல வலிக்குது மாமா என்று சொல்லிக்கொண்டே நீட்டுகிறான்.

Aadhi Gunasekaran Vasul Raja MBBS netisions Memes Ethir Neechal Serial

எனக்கு எல்லா வைத்தியமும் தெரியும்டா என்று சொல்லிக்கொண்டே வாளியை வைத்து சுத்துவது போல கையை சுத்து என்று சொல்லி பயிற்சி தருகிறார்.
கையை நல்லா உதறு..அப்படித்தான் லெப்ட்..ரைட்..போட்டு நட என்று செல்ல போலீஸ் மாதிரியா என்று கேட்கிறான் கரிகாலன். அப்படித்தான் என்று சொல்லி சட்டையை போட சொல்கிறார்.

கை வீசம்மா கை வீசு கடைக்கு போகலாம் கை வீசுன்னு சொல்லி நட..காசு புடுங்க இவ்வளவு பெரிய மாவு கட்டு போட்டுருக்கான். மனசுல வீரம் இருக்கணும் ..நெஞ்சுல உரம் இருக்கணும் என்ன நடந்தாலும் கவலைப்படக்கூடாது என்று ஆதி குணசேகரன் பேச, வாழ்க்கையில் என்ன நடந்தாலும் கலங்க கூடாதுடா அவன்தான்ட மனுசன் என்று ஆதி குணசேகரன் டயலாக் பேச நந்தினியின் ரியாக்சன் அல்டிமேட். அதற்கு மீம்ஸ் போட்டு வசூல் ராஜா எம்பிபிஎஸ் பட சீனை சேர்த்து டாக்டர் வாழ்க என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+