Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sembaruthi Serial: கைரேகை விஷயம் தெரிஞ்சுபோச்சு... ஆதி மித்ரா டும்டும்டும் நின்னு போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் இப்போ தெரியுமா அப்போ தெரியுமான்னு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் அப்பாடான்னு பெருமூச்சு விடற அளவுக்கு அகிலாண்டேஸ்வரிக்கு உண்மை தெரிஞ்சு போச்சுங்க.யம்மாடி... ஒரு சீரியலை ஒரே விஷயத்தை வச்சு இத்தனை மாதங்கள் இழுக்க முடியுமான்னு மலைக்கும் அளவுக்கு செம்பருத்தி சீரியல் மாஸ் குறையாம இதுவரைக்கும் நீண்டு போச்சு. உண்மை தெரிஞ்சு ஆதி மித்ரா கல்யாணம் நின்னு போகும் அளவுக்கு நிலைமை ஆகி இருக்கு.

பார்வதி ஆதி கடவுள் பரம்பரை அம்சம் என்பதை மறைச்சு வச்சு, தான்தான் அவளுக்கு பதிலாக ஆதி கடவுள் பரம்பரை அம்சம் என்று நாடகம் ஆடும் மித்ரா, பொய்யானவள் என்று நிரூபிக்க ஆதி பட்ட பாடு இப்போதுதான் பலன் அடைந்து இருக்கிறது. பிறந்த நாள் அன்னிக்கு உண்மையை கூட கேட்காமல் அம்மா மித்ராவுடன் கல்யாண ஏற்பாடுகளும் செய்துவிட உண்மையான தகவல்களை அனுப்பிவிட்டு, இப்போது மண்டபத்துக்கு வந்து இருக்கான் ஆதி.

மித்ரா கை பெருவிரலில் பார்வதி ரேகை மாதிரி ஸ்கின் ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு இருக்கான்னு குருஜி நிரூபிக்கிறார். பின்னர் மித்ராவின் வேஷம் பார்த்து உண்மையை தெரிஞ்சுக்கிட்டு கோவத்தில் அகிலாண்டேஸ்வரி மித்ராவின் கன்னத்தில் பளார்னு அடி விடறாங்க. அடுத்து, எய்தவன் இருக்க அம்பின் மீது பாய்வானேன் என்று மித்ராவின் அக்காவை நோக்கி நடையைக் காட்டறாங்க அகிலாண்டேஸ்வரி.

 பார்வதி ஆதி

பார்வதி ஆதி

ஆதிக்கு வீட்டில் வேலை செய்யும் பார்வதி மீது காதல் வருவது, பார்வதி பெரிய ஐயா பெரிய ஐயா என்று கூப்பிட்டு காதல் செய்வது என்று இந்த சூழல் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்தது. சீரியல் ஆர்வலர்களை மீண்டும் மீண்டும் என்று சீரியல் எபிசோடுகளை எத்தனை இழுத்தடித்தாலும் ஜீ தமிழ் டிவிதான் 9 மணி நேரத்துக்கு என்று உறுதியாக இருக்கும்படி ஈர்த்தது. இதனால 9 மணி நேரம் என்பது அத்தனை பேர் வீட்டிலும் ஜீ தமிழ் டிவி மட்டுமே இடம் பிடிக்கும் நேரமானது.

 ஜீ தமிழ் டிவி வசம்

ஜீ தமிழ் டிவி வசம்

மாற்றம் வேண்டும் என்று விஜய் டிவி சீரியல்களைப் பார்த்து வந்த சீரியல் ஆர்வலர்கள் ஜீ தமிழ் டிவி வசமும் தங்களது கவனத்தை திசை திருப்ப ஒரே காரணமாக இருந்தது செம்பருத்தி சீரியல்தான். இதில் நடிகர் கார்த்திக் விஜய் டிவியின் சீரியலில் நடித்து பெண்கள் மனதில் ஒரு இடத்தை அதுவும், இளம் பெண்கள் மத்தியில் காதல் மன்னன் என்று சொல்லும் அளவுக்கு ஒரு கிரேஸான இடத்தைப் பிடித்து இருந்தார். இதனால் பெண்கள் கவனம் ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் வசம் திரும்பியது.

 கேரளத்து வரவு பார்வதி

கேரளத்து வரவு பார்வதி

கேரளத்து வரவான அழகு பார்வதி ஆண்களின் மனதையும், பெண்களின் மனதையும் கொள்ளைக் கொண்டார். ஜோடி நல்ல ஜோடி என்று ஊர் பேசியது. இப்படியே இந்த சீரியலுக்கு பார்வையாளர்கள் பல்கிப் பெருக்கினார். ரேட்டிங்கில் நல்ல இடத்தில் வந்தது. இவர்களைத் தக்க வச்சுக்க ஆதி, பார்வதி திருட்டு கல்யாணம், எப்போது அகிலாண்டேஸ்வரிக்கு இது தெரிய போகுது.. தெரிஞ்சால் என்ன களேபரம் நடக்கும் என்ற திக் திக் நிமிடங்களை ரொம்ப நார்மலாக்கி இப்போது உண்மை தெரியும்படி கதையைக் கொண்டு வந்து இருக்காங்க.

 சட்டுன்னு முடிஞ்சு போச்சு

சட்டுன்னு முடிஞ்சு போச்சு

இதுவரையான எபிசோடுகளில், அகிலாவுக்கு எப்போது உண்மை தெரிய போகுதோ என்கிற எதிர்பார்ப்பிலேயே கதையை நகர்த்தி வந்ததால், இப்போது அகிலாவுக்கு உண்மை தெரியும்போது உப்பு சப்பு இல்லாமல் சட்டென்று எபிசோட் விரைவில் வந்துட்ட மாதிரி இருக்கு. ஓவரா இழுத்தால் இப்படித்தான் நஞ்சு போயி அந்து போயிரும் என்பார்கள் அப்படித்தான் இருக்கிறது மித்ரா விஷயம் அகிலாண்டேஸ்வரிக்கு தெரிய வந்தது.

 கை ரேகை விஷயம்

கை ரேகை விஷயம்

கை ரேகை ஓட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கே ஒரே மாதிரி இருக்காது என்பது குழந்தைகளுக்கு கூடத் தெரிந்த உண்மை. இதை ஒரு புகழ் பெற்ற தொழிலதிபர் அலட்சியம் செய்தது ஒரு மாசத்துக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட எபிசோட். அதற்குப் பிறகு இத்தனை எபிசோட் வந்தும், இப்போது மீண்டு அதே கை ரேகையை வச்சு, இப்போது மித்ரா பொய்யானவள் என்று அகிலாவுக்கு தெரிய வருதுன்னா எப்படி இது விறுவிறுப்பான எபிசோடாக இருக்கும்? உப்பு சப்பு இல்லமாத்தான் இருக்கும்....

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+