வாவ்.. ராணி ஆல்யாவுக்குப் பொறந்தாச்சு குட்டி இளவரசி!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் உலக தமிழர்கள் மத்தியில் புகழின் உச்சிக்கு சென்றார் ஆல்யா. இவருடன் இந்த சீரியலில் சேர்ந்து நடித்தவர் சஞ்சீவ்.
இருவரும் காதலித்து திருமணமும் செய்துக்கொண்டனர். இந்த நிலையில் இன்றைக்கு ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து இருக்கார் ஆல்யா,
திரையுலக பிரபலங்களும் , சின்னத்திரை பிரபலங்களும் மூவருக்கும் வாழ்த்து சொல்லி வரும் நிலையில் ரசிகர்களும் சேர்ந்து மூவருக்கும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

சஞ்சீவ் ஆல்யா
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடிச்ச ஆல்யாவுக்கு பள்ளி மாணவர்கள் கூட ஃபேன்சாகி சீரியலை ரசித்து பார்த்து வந்தனர்.கலைஞர் தொலைக் காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத் திரைக்கு அறிமுகம் ஆனவர் ஆல்யா . குளிர் 100 படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் சஞ்சீவ். இருவரும் சேர்ந்து நடித்த ராஜா ராணி சீரியல் ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்தது.

சீரியல் திருமணம்
சீரியலில் நடிக்கும்போதே இருவரும் காதலித்து வந்தனர். சீரியல் முடிவடையும் நேரத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் சீரியலும் முடிந்து போனது. திருமணம் முடிந்த சில வாரங்களில் ஆல்யா கர்ப்பமானார். குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும்... வேறு எந்த கமிட்மெண்டும் இல்லை என்று உறுதி செய்துக்கொண்ட ஆல்யா தாயாவதற்கு தன்னை தயார் செய்துக்கொண்டு வந்தார்.

விஜய் டிவி வளைக்காப்பு
காதல் திருணம் செய்துக்கொண்டார் என்று ஆல்யாவுடன் பெற்றோ பேசாமல் இருந்தனர். இந்த நிலையில் விஜய் டிவி ஆல்யாவுக்கு வளைக்காப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆல்யாவின் அப்பா, அம்மா, தங்கை மூவரும் வந்து கலந்துக்கொண்டு கோபத்தை மறந்து சந்தோஷமாக இருந்தனர்.

பெண் குழந்தை பிறந்தது
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆல்யா விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா வெற்றி விழாவில் சஞ்சீவுடன் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை ஒளிபரப்பானது. இந்த நிலையில்தான் இன்று ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக இன்ஸ்டா பதிவு தெரிவிக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications