ஆரியா இப்படி செய்தார்.. செம சூப்பரப்பு.. உருகி பாராட்டும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பிக் பாஸ் வின்னர் ஆரி செய்த செயல் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் மூலமாக உலக தமிழர்களின் ஃபேவரைட் சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறா் ஆரி. இதுவரை இல்லாத அளவுக்கு இவருக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது.

அப்படிப்பட்ட ஆரி, அவருடைய ரசிகரின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறி ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பிக் அங்கீகாரம்

பிக் அங்கீகாரம்

தனக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்து வெற்றி பெற்றாலும் இந்த வெற்றி எனக்கானது அல்ல நான் பெறவில்லை உழைக்கும் வர்க்கமும் மக்களாகிய நீங்கள் பெற்ற வெற்றிதான் என்று கூறிய ஆரி அவருக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு ஒரு நன்றி கூட கூறாமல் இருந்து வந்தார் .

ரசிகர்கள் மனதில் கேள்விகள்

ரசிகர்கள் மனதில் கேள்விகள்

இது எதற்காக இவர் இப்படி செய்கிறார் என்று பல்வேறு ரசிகர்கள் மனதில் கேள்வியும் குழப்பத்திலும் இருந்த நிலையில் தற்போது அவரே அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பைனலில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தான் அவரால் ரசிகர்களிடம் பேச முடியவில்லை நன்றி தெரிவித்து ஒரு வீடியோ கூட போட முடியவில்லை என்று ரொம்ப டல்லாக தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

உடம்புக்கு முடியலை

உடம்புக்கு முடியலை

அந்த வீடியோவில் அவரது முகத்தை பார்க்கவே தெரிகிறது அவர் எவ்வளவு உடம்பு முடியாமல் இருக்கிறார் என்று இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எப்போதும் துருதுருவென ஆக்டிவாக இருந்த இவர் தற்போது ரொம்ப சோர்வாக காணப் படுகிறார். ஆனால் உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்திலும் கூட அவருடைய ரசிகரின் பிறந்தநாள் பங்ஷனுக்கு கண்டிப்பாக செல்லவேண்டும் என்று சென்றிருக்கிறார் .

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

அந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கூட அவரது முகத்தை பார்த்தாலே தெரிகிறது சோர்வின் அடையாளம் ரொம்ப டயர்டாக இருந்தாலும் தனது ரசிகரின் ஆசைக்காக பிறந்தநாளில் கலந்துகொண்டு அவர் கேக் கட் பண்ணுவது வரைக்கும் பொறுமையாக இருந்து அவருக்கு வாழ்த்துக்களையும் கூறிவிட்டு செல்கிறார்.

ரசிகருக்கு மரியாதை

ரசிகருக்கு மரியாதை

உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் கூட ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் அது மட்டுமல்லாமல் அவர்களால் தான் நான் ஜெயிக்கவே முடிந்தது என்று மீண்டும் அனைவருக்கும் நிரூபித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சீக்கிரத்தில் அனைத்து ரசிகர்களையும் ஒன்றிணைத்து சந்திக்க இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். பிக்பாஸில் ஜெயித்த பணத்தை கூட விவசாயத்திற்க்கு பயன்படுத்துவேன் என்று அவர் கூறியது போல என்னென்ன எல்லாம் செய்ய போகிறேன் என்பதையும் சீக்கிரத்தில் அனைவருக்கும் தெரிய படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.

மனதில் கெத்தாக இருக்கணும்

மனதில் கெத்தாக இருக்கணும்

ஒரு தலைவனாக இருப்பது பெரிதல்ல எந்த இடத்தில் இருந்தாலும் அனைவரின் மனதிலும் கெத்தாக வாழ்வதுதான் நமது அடையாளம் இருக்கிறது என்பதை ஆரி தற்போது அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார் .இவரின் ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள். அவர்கள் தற்போது இந்த வீடியோவை வைரலாக பரப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+