கடைசியாக அபிநய் சொன்ன வார்த்தை.. தாயை போலவே மகனுக்கும் நிலைமை! இறுதி வரை கூடவே வந்த நடிகர் பாலா
சென்னை: கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.. நீண்ட காலம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்னும் 2 நாளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக இருந்தது.. ஆனால், அதற்கு முன்பே அபிநய் இறந்துவிட்டார். திருமணம் செய்து கொள்ளாத அபிநய்க்கு வயது 44.
துள்ளுவதோ இளமை படத்தில் பலராலும் கவனிக்கப்பட்ட நடிகர் அபிநய், சக்சஸ், தாஸ், தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச் சோலை 2, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

அபிநய்யின் அம்மா, மலையாளத்தில் பிரபலமான நடிகை ராஜாமணி.. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 110 படங்களுக்கு மேல், பல உச்ச நடிகர்களுடன் நடித்திருப்பவர்..
பரிதாபம் அபிநய்
அபிநய்யின் துள்ளுவதோ இளமை படம் முடித்ததுமே 9 புரடியூசர்கள் வீட்டில் வந்து உட்கார்ந்து விட்டார்களாம்.. பெட்டி நிறைய பணத்தை பார்த்ததுமே, அபிநய்க்கு தலைகால் புரியவில்லை.. அப்போது முதிர்ச்சியான சினிமா அனுபவம் கொண்ட, அவரது அம்மா, முதலில் கதையை கேளு. அதற்கு பிறகு ஒப்புக் கொள் என்று பலமுறை எச்சரித்திருக்கிறார்..
ஆனாலும் மளமளவென அட்வான்ஸை வாங்கி கொண்ட அபிநய், ஜங்ஷன் என்ற படத்தில் நடித்தார்.. 2வது படமே தோல்வி.. தியேட்டரில் ஒரு ஷோ மட்டுமே ஓடிய நிலையில்,
அட்வான்ஸ் தந்தவர்கள், யாரும் திரும்பி வரவேயில்லை.. அந்த ஒரேயொரு தோல்விதான் அபிநய்யை சர்ரென கீழே இறக்கிவிட்டது..
கடைசியாக கேட்ட அபிநய்
அத்துடன், ஆதரவாக இருந்த அபிநய்யின் அம்மாவும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. படவாய்ப்பு இல்லாமல், அம்மாவும் இல்லாமல் மதுவுக்கு அடிமையானார் அபிநய்.. இறுதியில் கல்லீரல் தொற்று பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டார்.. 2 ரூபாய்கூட இல்லாமல், அம்மா உணவகத்தில் சாப்பிடும் நிலைமைக்கே ஆளானார்.
கேபிஒய் பாலா உள்ளிட்ட நல்லுள்ளங்கள் அபிநய்யின் சிகிச்சைக்கு முன்வந்து உதவி செய்தனர்.. எனினும், அபிநய் தற்போது இறந்துவிட்டார்.
நேற்றிரவுகூட வீட்டு வாடகையை அனுப்பி வைக்கும்படி KPY பாலாவிடம் சொன்னாராம் அபிநய்.. பாலாவும் வாடகை பணத்தை உடனே அனுப்பி வைத்துள்ளார்.. இதுதான் அபிநய் கடைசியாக பேசியது.. இன்று காலையில் இறந்துவிட்டார் அபிநய்
பிரபலம் அம்மா
அன்று அபிநய்யின் அம்மா இறந்தபோது, அவரது சடலத்தை தூக்குவதற்குகூட யாருமே உடனில்லையாம்.. ஒரு பிரபல நடிகருக்கு போனை போட்டு, தன்னுடைய நிலைமையை கதறி அழுது சொன்னாராம் அபிநய்.. ஆனால், அந்த பிரபல நடிகர் எதுவுமே பேசாமல் போனை துண்டித்துவிட்டாராம். அப்போதுதான் விஜய் சேதுபதி அபிநய்-க்காக முன்வந்து உதவியிருக்கிறார்.
அன்று அபிநய்யின் அம்மாவுக்கு வந்த நிலைமைதான், இன்று அபிநய்க்கே ஏற்பட்டுள்ளது.. குடியின் உதவியை நாடி சென்ற அபிநய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தற்போது இறந்துவிட்டார். அபிநய்யின் இறுதி சடங்கு செய்ய சொந்தக்காரர்கள், நண்பர்கள் யாருமே வரவில்லையாம்.
இறுதி சடங்கு
பிறகு இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிட்டதுமே, அவரது உறவினர்கள் நடிகர் சங்கத்தை தொடர்பு கொண்டார்களாம். அதற்கு பிறகே அபிநயின் உடல், சென்னை ஏவிஎம் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராகின.. நிர்வாகக் குழு உறுப்பினர் பூச்சி முருகன், KPY பாலா உள்ளிட்ட சில நடிகர்கள்,இறுதி சடங்கிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். நடிகர் பாலா கடைசிவரை அபிநய்யின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
"சினிமா ஒரு நன்றி கெட்ட உலகம்,.. இங்கே கீழே விழுந்துவிட்டால், தூக்கிவிட யாருமே வரமாட்டார்கள் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன்" என்று அபிநய் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.. அது எவ்வளவு உண்மையான வார்த்தை???
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications