Ace box office collection Day 1: ஏஸ் படம் எப்படியிருக்கிறது? ரிவ்யூ + பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் என்ன?
சென்னை: விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி- ருக்மணி வசந்த் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் ஏஸ். இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அதாவது இந்த படத்தில் விஜய் சேதுபதி தனது பழைய வாழ்க்கையை மறைத்துவிட்டு புதியதொரு வாழ்வு வாழ மலேசியாவுக்கு செல்கிறார்.
அங்கு அவரை தனது உறவினர் என கருதும் யோகிபாபு, விஜய் சேதுபதிக்கு அடைக்கலம் தருகிறார். அவருடைய எதிர்வீட்டில் நாயகி ருக்மணி வசித்து வருகிறார். அவரை பார்த்ததும் விஜய் சேதுபதிக்கு காதல் பூக்கிறது. அவரை விஜய் சேதுபதி காதலிக்க தொடங்குகிறார்.
ருக்மணி
ருக்மணிக்கு விலை உயர்ந்த ஆடையை பரிசாக அளிக்க விஜய் சேதுபதி விரும்புகிறார். ஆனால் அவரிடம் பணம் இல்லை. இதனால் சூதாட்டம் விளையாடி பணம் திரட்ட முயற்சிக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக பெரிய தொகைக்கு கடனாளி ஆகிறார்.
யோகிபாபு
அதே வேளை யோகிபாபுவும் அவரது தோழி திவ்யா பிள்ளையும் கடனில் சிக்கித் தவிக்கிறார்கள். தனது கடனையும் தனக்கு அடைக்கலம் கொடுத்த யோகி பாபுவின் கடனையும் தீர்க்க என்ன செய்யலாம் என விஜய் சேதுபதி யோசிக்கிறார். அப்போது வங்கியில் பணத்தை கொள்ளையடிக்கலாம் என நினைக்கிறார்.
வங்கி பணம்
இவர் எப்படியோ வங்கியில் பணத்தை கொள்ளையடிக்கிறார். இந்த விஷயம் வில்லன்களான பப்லுவுக்கும் அவினாஷுக்கும் தெரிந்து விஜய் சேதுபதியிடம் இருந்து முழு பணத்தையும் மிரட்டி பறிக்க முயற்சிக்கிறார்கள். இதனிடையே வங்கிக் கொள்ளை தொடர்பாக போலீஸும் விசாரணையை முடுக்கி விடுகிறது.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியை போலீஸார் கைது செய்தார்களா, வில்லன்களிடம் இருந்து விஜய் சேதுபதி தப்பினாரா, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்து சூதாட்ட கடனை அடைத்தார்களா என்பதே மீதி கதையாகும்.
மாஸ் காட்டிய மக்கள் செல்வன்
இந்த படத்தில் வழக்கம் போல் விஜய் சேதுபதி மாஸ் காட்டியுள்ளார். காதல், ஆக்ஷன், நகைச்சுவை என முப்பரிமாண நடிப்பை காட்டி கலக்கியுள்ளார். விஜய் சேதுபதி கதைக்கு தேவையானதை அழகாக கொடுத்துள்ளார். எப்போதும் போல் அலட்டிக் கொள்ளாத நடிப்பு! ருக்மணியின் கொஞ்சல் நடிப்பும் அவரது கோபமும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.
காமெடி கலக்கல்
விஜய் சேதுபதியுடன் யோகிபாபு தனது காமெடியில் கலக்கியுள்ளார். இருவரும் சேர்ந்து வரும் காட்சிகளுக்கு தியேட்டரில் ரசிகர்கள் சிரித்து மகிழ்கிறார்கள். அது போல் வில்லன்களிடம் சிக்கி அடிவாங்கும் காட்சியும் அருமை!
வில்லத்தனம்
யோகிபாபுவுக்கு தோழியாக நடிக்கும் திவ்யா பிள்ளை அறிமுகமாகியுள்ளார். அவரது கதாபாத்திரமும் நன்றாக அமைந்துள்ளது. பப்லுவும் அவினாஷும் வில்லத்தனத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக இந்த கதை உள்ளது.
டே 1 கலெக்ஷன்
இந்த படத்தின் முதல் நாள் வசூல் என்னவென பார்க்கலாம். அதாவது படம் வெளியான முதல் நாளே ரூ 1.5 கோடி வசூல் கிடைத்துள்ளது. சனி, ஞாயிறு இரு நாட்கள் விடுமுறை என்பதாலும் கோடை விடுமுறை என்பதாலும் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏஸ் படம் எப்படியிருக்கு?
ஏற்கெனவே டூரிஸ்ட் பேமிலி, மாமன் படங்களும் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் ஏஸ், மேற்கண்ட இரு படங்களை ஓரம் கட்டி வசூல் வேட்டையில் இறங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏஸ் படம் நீங்கள் பார்த்துவிட்டால் படம் எப்படி என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications