இங்கே யும் வந்துட்டீங்களா? கடவுளே அஜித்தே.. சபரிமலையில் ஒலித்த "விடாமுயற்சி" முழக்கம்.. அதென்ன கையில?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு "துணிவு"படத்திற்கு பிறகு இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை... தற்போது விடாமுயற்சி படத்திலும், குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து வருகிறார்.

இதில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக தெரிகிறது. ஆனால், இதுவரை படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. வெறும் படத்தின் பெயர், கிளிம்ப்ஸ் மட்டுமே வெளியாகியிருக்கிறது. எனினும் சமீபகாலமாகவே, அஜித் ரசிகர்கள், அஜித்தே கடவுளே என்ற முழக்கத்தை விடாமல் முன்வைத்து வருகிறார்கள்.

actor ajith sabarimalai

கள்ளக்குறிச்சி: கடந்த சில வாரங்களுக்கு முன்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியிலும், "கடவுளே அஜித்தே" என்ற கோஷத்தை மாணவர்கள் எழுப்பியிருந்தனர். அதேபோல, கள்ளக்குறிச்சியில் நடந்த தவெகா மாநாட்டிற்கு, விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.. அப்போது விஜய் பேசி கொண்டிருந்த போது, மேடை அருகில் இருந்த ரசிகர்கள் திடீரென "கடவுளே - அஜித்தே" என்று முழக்கமிட்டனர்.

இதை கொஞ்சமும் எதிர்பாராத விஜய், உடனே பேச்சை நிறுத்தி விட்டு "அமைதி அமைதி" என்பது போல கையை அசைத்தார்... இந்த மாநாட்டையொட்டி விக்கிரவாண்டி முதல் வி.சாலையில் விஜய் மாநாடு நடைபெற்ற இடம் வரை, பெரிய பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.. அதில், ஒரு கட் அவுட்டில் அஜித் ரசிகன்- விஜய் தொண்டன் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.

சபரிமலை: அந்தவகையில், அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று சொல்லிவருகிறார்கள். இப்போது சபரிமலையிலும் அஜித்தே கடவுளே முழக்கங்கள் கேட்டு வருகின்றன.. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிச் சென்று வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.. அப்போது, அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியிட வேண்டும் என வேண்டிக்கொண்டு, கையில் பேனரைப் பிடித்துக்கொண்டு "அஜித்தே கடவுளே" என்று கோஷமிட்டபடி செல்கிறார்கள்.

அந்த பேனர்களில், விடாமுயற்சி படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு ரசிகர்கள் விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை: மேலும், அந்த பேனரில் TN 73 பாய்ஸ் என்று இடம்பெற்றுள்ளது. இந்த பதிவு எண் ராணிப்பேட்டை பதிவெண் ஆகும். அதேபோல, சபரிமலை கோயில் வாசலில் அஜித் போட்டோ பொறித்த பேனருடன் நின்று போஸ் தந்து வருகிறார்கள்..

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட்களை தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வந்தநிலையில், இப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலிலேயே, அப்பேட் கேட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. சிலர் இதற்கு கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+